
இறந்து போய் மணியாயிற்று
அம்மணமாய்
சவக்கிடங்கில்
சதயறுக்க கிடத்தப்பட்டிருக்கிறேன்
கரங்கள்
யோனியையும் முலைகளையும்
மறைக்க முயர்சித்தபடி
சிலரின்அலைபேசிகளுக்கு
கொலையை
தற்கொலையாக்கும் சக்தியிருந்தது
நடுவீட்டில் கிடத்தப்பட்டேன்
வானத்திலிருந்து நட்சத்திரங்களும்நிலவும்
உதிர்ந்துகொண்டிருந்தது
விட்டத்தில் அமர்ந்து
கண்காணிப்பு தொடங்கியது
சாமியானாக்கள், நாற்காலிகள்
தெருவைஅடைத்தது
வெடிக்கும் அலறல்களிலிருந்து
காதுப் பஞ்சால்
காப்பாற்றப்பட்டது
என் நிஜம்
காரணங்கள் புற்றைவிட்டு
பறக்கலானது
எனது முடிவையெண்ணிசிரித்துக்கொண்டிருந்தனர்
மூலையில் சிலர்
ஊர்வலம் தொடங்கியது
பறையும் கொம்பும்
உக்கிரமானது
சொர்கரதம்
கடந்துபோன மனிதர்களின்
இருப்பு என்னை கர்வப்ப்டுத்தியது
குளிப்பட்டி அரப்புவைத்து
வெத்து அழுகையொலிகளை மறைத்தான்
மூக்கறயான் பறை மு ழ ங் கி
குழலெடுத்து
எனக்குப்பிடித்த சந்திரன்
பாடினான்
அதில் பொதிந்திருந்த சோகத்தின் வேர்
எனக்குமட்டுமே
தெரிந்திருந்தது
தலைதிருப்ப கோழிக்குஞ்சு
சிறகையடித்தது
பூக்களும் பொறியும்
பாதையில்
கல்லடிவலியில்
ஊளையிட்ட நாய்
கலவிக்கு கத்தியபல்லி
பிச்சயெடுக்க குறி சொன்ன
சாமக்கோடாங்கி
எல்லோரும் முன்னறிவித்ததாய்
திசையை மாமா கிழித்துப்போட்டார்
ஏழரைச்சனி
என்னோடு கால்வலிக்க நடந்ததாய்
அண்னன்
கருப்புசட்டை
கல்லூரித்தோழன்
கண்ணீருக்கு
நிச்சயம் எதோ நடக்கலாம்
காதல்
உடல் போட்டுவரும் முகமூடி
இருந்தாலும்
வாழ்தலென்பது
வளம்மட்டுமல்ல
தாழ்வுரும்போது
தகவமைத்துக்கொள்வதும்
வீழ்தலைஎதிர்த்து
விழுதாய் வளர்வதும்
பேயாக வந்தாவது
பதிலாக்கவேண்டும்
புளியமரத்தின்
ஆணியில்தொங்கி
சின்னாகுறவன்
அழகுபடுதிக்கொண்டுருந்தான்
தேரை பச்சைமூங்கிலால்
ஒரு அழைப்பு
தொடர்சியாய் ஒலித்துக்கொண்டிருந்தது
எப்போதும் மிஷ்டுகால் வரும்
எண்ணிலிருந்து
மூன்றாம் நாளுக்குள்
மூச்செடுத்துவிடவேண்டும்
உயிர்தெழுவதர்க்கு
வசிதியாக
குழியின்அளவை குறைத்தவன்
நன்றிக்குறியவன்
என் தேரைத்தொட்டவர்கள்
என்தேகம் தொட்டு பிரேதப்பரிசோதனை செய்தவர்கள்
குழிவெட்டியவர்கள்
கால்களைக்கட்டியவர்கள்
உறவாக விதித்த தடை
உண்மை செத்துக்கிடந்தது
என்னோடு
No comments:
Post a Comment