May 13, 2007

வர்ணம்

நிறங்கள் இழந்த கோப்பை முழுதும்
நீ..நிரம்பி வழிகிறாய்...
காலம்
இன்னும் இருக்கமாகிறது

அவரவர் உறவுகளில்
வாழ்க்கைதுணைஉறைந்திருக்கிறது
உள்ளத்தில்...

ஆனாலும்

இதழ் கவ்வி
இழுத்து அனைத்து
படலமாகிறோம்

கணங்களை அளக்க
கால்கள்.....நீள்கிறது....

ஏனோ....
உச்சி மரத்திலிருந்து...
ஒரு காக்கை
நம் மேல்
எச்சமிட்டுப்போகிறது
ஊருக்கு வெளியெ ஒத்துக்குப்புறத்தில்

யாரும் வராதா மாமரத் தோப்பில்
கூவும் குயிலின் தென்றல் பாட்டில்
ஆட்ம் இலைகளின் சலங்கை ஒலிப்பில்
தன்னை மறந்து
த்னியே கிடக்கும்
சின்னக் கவியே!
சிந்தனை பலமா?
என்ன செய்கிறாய்?
ஏகாந்தத்தில்!
இன்னும் கற்பனைஎழுந்தபாடில்லையோ!?
தலைவனை பாடினாய்!தலைவியைப்பாடினாய்
தனிமையின் தவிப்பை, தாகத்தை பாடினாய்!கல்லைப்பாடினாய்! காற்றைப்பாடினாய்!
காற்றில் அலையும் கீற்றைப்பாடினாய்!
இளசின்அழகில் மயங்கிச்சாய்ந்து
இடையை,நடையை,தொடையை பாடினாய்!
அய். ஆர் இருபதை
ஆடுதுறை முப்பதை
விளைத்தவன் பசியிலே
உழழும் கொடுமையை
உன் பாட்டிலெடுத்துக் காட்டியதுண்டா-இல்லை
வியர்வை குலத்தின்
விலாதிருடும்
சதிகாரர்களை
சாடியதுண்டா
என்ன கிழித்தாய்
எழுத்துப்பணியிலே
எழுத்தெனுமாயுதம்
எதற்க்குனக்கு
எழுதுகோலை
எடுத்துவீசு
* * *
விரிந்து பரந்திருக்கும்
விஞ்ஞானத் தொழில்நுட்பம்
வானத்தில் உட்கார்ந்து
வா'வென்றழைக்கயிலே
இன்னும் நீ
இரண்டாம் நூற்றாண்டின்
இருட்டுக்குள்ளேயே
பசித்துயரம் தாழாமல்முரசத்தின் மேலேரி
படுத்துறங்கியெழுந்தபின்னும மோசிக்கீரன்
பட்டினியைப்பற்றியொருவரிகூடப்பாடமல்
பாவெடுத்து மன்னனுக்கு கால்கழுவிவிட்டானாம்...................... * * *
இதைவிட்டால்
காதிலிருந்தது கையிலிருந்த்தது
ஏதுமில்லாமல் ஆயினபின்னும்
கால் செருப்பை
கழட்டியடித்து
வீட்டுக்கு வெளியெ
விரட்டிவிடாமல்
'இந்தாருங்களத்தான்,
சிலம்பை விற்றேனும்
சின்னவீட்டுக்கு போய்வாருங்கள்'என்ற
கண்ணகிப்பெண்ணெல்லாம்
கற்புக்கரசியாய்
பத்தினிதெய்வமாய்
பண்பாட்டு சின்னமாய்.
* * *
முல்லைக்கு கொடுத்த
முட்டாள்தனத்தையெல்லாம்
வள்ளளென்று யாத்துக்குவித்து
வரலாற்றின் பக்கங்களில்...சேறடித்துப்போனார்கள்
பொற்காலமென்று
போற்றிய..அவர்கள்
ஆட்சியின் மறுபுரத்தில்
அவலமே வாழ்கை
* * *
சங்ககாலந்தான் இருட்டுக்குளென்றால்
இங்கென்ன வாழ்கிறதாம்
கொடுகின்றகாசுக்காய்
கொள்கைகளை விட்டெரிந்து
முதுகெலும்பை அடகு வைத்து
மூலையிலே உட்கார்ந்து
துறை தேடி தினை தேடி
துவக்க வரி தேடி.............
.தெங்கிளநீர் கொங்கையினாள்
செங்கனிபோல் மங்கையினாள்
புணர்வதர்க்கு மெத்தையினாள்
புத்தம்புது தத்தையினாள்
என்றெல்லாம்
எழுதுகிற
மதனகாம பயல்களெல்லாம்
மண்ணிலே கவிஞராக
உலா வரும் போது
உள்ளுக்குள் எரிகிறது

விபத்திலொருத்தி
விழுந்துகிடந்தாலும்
மர்புதெரிய தொடை பிதுங்க
மல்லாந்து கிடந்தாள்
என்றுதான்
எழுதத்தோன்றும் இந்த
எழுத்தாளப்பயல்களுக்கு

இவர்கள்கையிலிருப்பது
காமனின் அம்பா!?
கேமலின் பென்னா!?
மைக்கு பதிலாய் ஊற்றி எழுதுவது
சாக்கடை நீரா?
முருங்கைக்காய் சாறா?
* * *
இந்த எதார்தங்களை
எட்டிஉடைதுவிட்டு
கனவுகளோடு
கட்டிப்புரளாதே
இலக்கிய வியாதிகளுக்கெதிராக
ஆயுதமெடுப்போம்-நாமேஆயுதமாவோம்

இது மாமேதையின் வைரவரிகள்-
இதைநாட்குறிப்பேட்டின் ஓரத்தில் அல்ல
இருதயத்தில் எழுதி வைத்துக்கொள்
சம்பாதிப்பதர்காக எழுதாதே
எழுதுவதர்காக சம்பாதி ....

உறுப்பு மழை...


என்னை இரண்டாக பிளக்கும் முயற்சியில் தோற்றுப்போய்
அலறும்
உன் ஒழுங்கின்
உறுப்புகளில்
வழிகிறது குருதி

எங்கள்
திசைகளைத்தின்று
சூரியனாய் பெருத்து.
வெளிச்சம் பூசி
வெளியேறுபவனே

உன்னை

தொழும் பொழுதெல்லாம்
தொன்மம் வெடிக்கிறது

கட்டை விரல்களின்
காயத்திலிருந்து
பீய்ச்சியடிக்கிறது
நூற்றாண்டுகளின் நாற்றம்

இளநீருக்குள்ளிருந்த
இரத்தம் வடியத்தொடங்கிவிடுகிறது
பறத்தலைஎம்மிடம்
படித்தாய்
இப்போது
என்வானத்தையளக்கவும்
என்வனத்திலிறங்கவும்
உனது
கடவுச்சீட்டுக்கு
காத்திருக்கிறேன்

சிறகுகளிருக்கிற உணர்வற்றுப்போய்
எம்
வார்த்தைகளை
வரம்பில் கொன்று
மூடமே.. அறிவென்று
மூளையை பழக்கி
உதடுகள் தைத்து
ஊமையாய் மாற்றி
-நீ....
சங்கீதங்களுக்கு
சக்கரவர்தியானாய்

இன்றுவரை
எங்கள்
வடுக்களில்தானேஉன்
வரலாறு முட்டையிடுகிறது

கடிகாரமே தெரியாத என்னையும்
கடிகாரமே பிடிக்காதவர்களையும்
எதிரெதிர் திசைகளில்...
நுட்பமாய் பிரித்தபடி
'நூல்'. போகிறது கொடிய நாகம் போல..

இனி
விழிகளையுரித்த

அம்புகளையொடித்து
அதிகாரத்தை குழைத்து
செவிகளிளடைத்த
செம்புத்தகடுகளில்

உயிர்களை எழுதப்போகிறோம்
அதோ....
முப்பாட்டன்எழும்புகள் கொண்டு
உன்
ஒளி வட்டங்களை
உருட்டி விளையாடத்தொடங்கிவிட்டது
எமது பொடிசுகள்

நந்தனின்சாம்பல் மேட்டிலிருந்து....
எரி குரல்..புயலாயெழுகிறது

எங்கிருந்தோ
மாறு கைகள்.கால்கள்
உக்கிரமாகிறது
உறுப்பு மழை....

தாந்தோன்றி

மரத்தடியில்
வளர்ந்த வினாயகர்
இயல்பாகவே...
ஒரு புறம்குப்பைதொட்டியும்
அடுத்தபுறம் டாஸ்மாஸ்க் பாரும்
உடைபடுகிற தேங்காய்க்கு
உள்ளிருக்கும் மெளனங்கள்
விசும்புகிறது
சக்கரங்களில் வழிகிறது
சிட்ட்ரிக் அமிலம்

காரில்
போர்த்திருக்கும் துணிக்கு
தெரிய வாய்ப்பிருக்குமா
வாசல்காரியின் குளிர்

வீடாகும் காலம்


வீட்டுக்கு எவனும் ஓலைபோட்டு
தரமாட்டிங்கறாங்க.......
மேகத்த வாசல்ல போட்டு
கோலத்த அழிச்ச
அவன்

குஞ்ச அறுத்து
கூரையில போட்டுட்டு
நிலாவுக்குள்ள போயிருவேன்

பச்சை மரம் பொய் சொல்லாது..
ஒடக்கா எங்கபோய் முட்டை வைக்கும்.....

கனவை தடுப்போன்
கையை முறுச்சு
குண்டிக்குள்ள துணிச்சுட்டுருவேன்

என்ன ஆறுன்னு நெனச்ச?

என்ன ஆறுன்னு நெனச்ச!

என்ன ஆறுன்னு நெனச்ச,


நாம் பத்திரகாளீயாத்தாவுக்கே
பேன் பாத்தவ

பல அவதாரமெடுத்து
இருட்டில் திரிந்த
அந்த
கிரீகடம் விக்கிறவன்

என் தாலிய மட்டும்
கழட்டி
சுடுகாட்டு வேப்ப மரத்தில்
பேயோடு சுருக்குபோட்டு செத்து போனான்

மழைத்துளிகளை சோராக்கித்திங்கிற
எனது
சட்டியில் மிஞ்சியது
ஊர்க்காரன்களின் பீ

உங்களுடையது

எங்களுடைய இறக்கை
எங்களுடைய குறுங்காடை
எங்களுடைய கத்தாழை
எங்களுடைய குட்டை
எங்களுடைய காத்து
எங்களுடைய பட்டாம் பூச்சி
எங்களுடைய மாடு
உங்களுடைய சிறகுக்குள்
உங்களுடைய லவ் பேர்ட்ஸ்க்குள்
உங்களுடைய கற்றாழைக்குள்
உங்களுடைய நீர்த்தேக்கத்துக்குள்
உங்களுடைய காற்றுக்குள்
உங்களுடைய வண்ணத்துப்பூச்சிக்குள்
உங்களுடைய ஜெர்சிக்குள்

செத்துக்கிடக்கிறது

நிஜமான


இருளை தின்னும்
ஒரு
விளக்கு கம்பத்தினடியில்
நிகழ்ந்து கொண்டிருந்தது
கட்டுப்படுத்தப்பட்ட
நிழல்களின் உற்பத்தி


மூன்றாம் நிழல்
நுழைந்து
வித்தியாசம் அறியாத பாத்திரமாய்
ஒரு சாமியாடியின் கால்களில்
நிமிர முடியாத படி விழுந்தது


அகோரச்சண்டையில்
முகம் முளைத்த நிழல்
நிஜத்தின் உடம்பை பிடுங்கி
பொருத்துக்கொண்டது

ஒருஅகால வேளையில்
இரண்டும்
வெடுக்கென தன்னைப்பிடுங்கி
ஒளியில் கரைந்து
வடிந்தோடியது
ஒரு
பெருச்சாலியாய்

இறந்துபோய் மணியாயிற்று
இறந்து போய் மணியாயிற்று
அம்மணமாய்
சவக்கிடங்கில்
சதயறுக்க கிடத்தப்பட்டிருக்கிறேன்
கரங்கள்
யோனியையும் முலைகளையும்
மறைக்க முயர்சித்தபடி

சிலரின்அலைபேசிகளுக்கு
கொலையை
தற்கொலையாக்கும் சக்தியிருந்தது

நடுவீட்டில் கிடத்தப்பட்டேன்

வானத்திலிருந்து நட்சத்திரங்களும்நிலவும்
உதிர்ந்துகொண்டிருந்தது
விட்டத்தில் அமர்ந்து
கண்காணிப்பு தொடங்கியது

சாமியானாக்கள், நாற்காலிகள்
தெருவைஅடைத்தது

வெடிக்கும் அலறல்களிலிருந்து
காதுப் பஞ்சால்
காப்பாற்றப்பட்டது
என் நிஜம்

காரணங்கள் புற்றைவிட்டு
பறக்கலானது

எனது முடிவையெண்ணிசிரித்துக்கொண்டிருந்தனர்
மூலையில் சிலர்
ஊர்வலம் தொடங்கியது
பறையும் கொம்பும்
உக்கிரமானது
சொர்கரதம்
கடந்துபோன மனிதர்களின்
இருப்பு என்னை கர்வப்ப்டுத்தியது


குளிப்பட்டி அரப்புவைத்து


வெத்து அழுகையொலிகளை மறைத்தான்
மூக்கறயான் பறை மு ழ ங் கி

குழலெடுத்து
எனக்குப்பிடித்த சந்திரன்
பாடினான்
அதில் பொதிந்திருந்த சோகத்தின் வேர்
எனக்குமட்டுமே
தெரிந்திருந்தது

தலைதிருப்ப கோழிக்குஞ்சு
சிறகையடித்தது
பூக்களும் பொறியும்
பாதையில்

கல்லடிவலியில்
ஊளையிட்ட நாய்
கலவிக்கு கத்தியபல்லி
பிச்சயெடுக்க குறி சொன்ன
சாமக்கோடாங்கி
எல்லோரும் முன்னறிவித்ததாய்
திசையை மாமா கிழித்துப்போட்டார்
ஏழரைச்சனி
என்னோடு கால்வலிக்க நடந்ததாய்
அண்னன்

கருப்புசட்டை
கல்லூரித்தோழன்
கண்ணீருக்கு
நிச்சயம் எதோ நடக்கலாம்

காதல்
உடல் போட்டுவரும் முகமூடி

இருந்தாலும்

வாழ்தலென்பது
வளம்மட்டுமல்ல
தாழ்வுரும்போது
தகவமைத்துக்கொள்வதும்
வீழ்தலைஎதிர்த்து
விழுதாய் வளர்வதும்
பேயாக வந்தாவது
பதிலாக்கவேண்டும்
புளியமரத்தின்
ஆணியில்தொங்கி
சின்னாகுறவன்
அழகுபடுதிக்கொண்டுருந்தான்
தேரை பச்சைமூங்கிலால்

ஒரு அழைப்பு
தொடர்சியாய் ஒலித்துக்கொண்டிருந்தது
எப்போதும் மிஷ்டுகால் வரும்
எண்ணிலிருந்துமூன்றாம் நாளுக்குள்
மூச்செடுத்துவிடவேண்டும்


உயிர்தெழுவதர்க்கு
வசிதியாக
குழியின்அளவை குறைத்தவன்
நன்றிக்குறியவன்

என் தேரைத்தொட்டவர்கள்
என்தேகம் தொட்டு பிரேதப்பரிசோதனை செய்தவர்கள்
குழிவெட்டியவர்கள்
கால்களைக்கட்டியவர்கள்

உறவாக விதித்த தடை
உண்மை செத்துக்கிடந்தது
என்னோடு

சங்கராத்தீஎப்படி சம்மத்தித்தாள்

வியாழக்கிழமையின் கீழ்
ஆச்சரியம் புகைந்து கொண்டிருந்தது

.நண்பர்கள்.....எனது சங்கவாசிகள்....
வந்து போகும்அந்தஅறை முழுதும்
நிறைந்திருந்த வர்தைகளைகூட்டி
எரிந்து கொண்டேயிருப்பாள்

கதவிடிக்கில் தேங்கி வழியும்
நடுத்தட்டின்...

கெளரவங்களை
துடைத்தவளுமில்லை.....

சக வீட்டு சங்கதிகளை
சந்தித்தவளுமில்லை


பின் எப்படி....
எ ட் டி ப் பார்த்தேன்

தீர்க்கம் அப்பியிருந்த..
அந்தக்
குப்பைக்கூடையுள்நெளிந்தபடி கிடந்தது

பல்லியின் வார்தைகளும்
சில கிரகங்களும்
மற்றும்
ஒரு பணிக்கரின் வாயும்

குரோமோசோம்கள் 1992

குரோமோ..சோம்.கள்(1992)---------------------


எனக்குள் நானே.


ங்
கி
ப்
பார்க்கிறேன்


நான்..யார்

எது ..எனது முகம்

எது எனது சுயம்

எனக்குள் நானே..


ங்
கி
ப்
பார்க்கிறேன் * * *

மூக்கின் வழியே
மூளைக்கு ..யாத்திரை
நுட்பமாய்.. தவழ்ந்து
நுழைந்து களைத்தேன்
அங்கே............................................
என்றோ படித்த

‘எஸ்ஸே’ சிதிலம்
சாலிடரி ரீப்பர்
கொங்கு தேர் வாழ்கை அஞ்சிரை தும்பி......
உடைந்து போன
பிப்பெட்...

பீயுரெட்....
a2+b2=2ab..
ஈடிபஸ் x எலக்ட்ரோ
அய்யனார் குதிரை
அமோனியம் குளோரைட்
பானிப்பட்டு....

பைராம்கான் கோவணம்.....
கீரீன்விச் கோடு............
சதுப்பு நிலக்காடு
நிறைய....களிமண்....
வழுக்கி...
நுரையீரலுக்கும்
இதயத்திற்கும்
இடையில் விழுந்தேன்.....

* * *
தவளையின் தொண்டையாய் ....விரிந்து சுருங்கும்
இதுவா இதயம்

என்ன
ஒரே இருட்டாய் இருக்கிறது
வார்த்தைகள்மட்டும்
எப்படி
வெளிச்சமாய்வந்து விழுகிறது........


எங்கே? எவளையும் காணோம்!
தட்டச்சு கூடத்து
தடபுட ஒலியையே
சமிக்ஞையைகளாக்கி
சந்தித்து கொண்டதும்..
வனக்கல்லுரியின்
வளாகங்களில்
மரங்கள்நிறுவிய
மங்கிய இருட்டில்
காலார நடந்தே

காதலையளந்ததும்..

நடுங்கும் இரவில்
நிலவின் புழுக்கைகளை
எண்ணியபடியே
ஏகாந்தம் கலைத்ததும்
வெறும்..காமம்தானா

உள்ளம்கொடுத்து
உருகிவழிந்து
ஐ லவ் யூ வென்று

அருவியை பொழிந்த..
மார்வாடி ரீனா
மறைந்து புள்ளியாய்....
உறைந்து கிடந்தது..
உடலின் அரசியல்......
* * *
தூய்மைமுழக்கிகளால்
தூசுபடிந்து கிடந்த
நுரையீரலுக்குள்
நுழயத்தொடங்கினேன்

பணியுரைந்த
பள்ளத்தாக்காய்
பூத்திருந்தது
புகை வெண்படலம்
கருப்பாய் திட்டு

என்ன இது?
இந்தியழிப்பா?
ஓ!'யோகி' விளைவு’...

கவலைகள் சுமந்துவந்தது
ஒரு
ஏக்கப்பெருமூச்சு
சிதரியது
சாம்பல் மேடு

வெளியேற்றினேன்

* * *
பிச்சை காரனின் பாத்திரம் போலிருந்த
இரைப்பைக்குள்
மெல்லமாய்
எட்டிப்பார்தேன்

நியாய விலைக்கடையை
எடைபோட்டபடி
......................
பழையசோறு
பாண்டியன் ஊறுகாய்

கருவாட்டுத்துண்டு..........
பொரித்துளிகள்..........
தேங்கிய பன்
மற்றும்
சமூக அவலம்
சகித்துப்போக
நோய்க்கு அல்லாமல்
நோய்க்குறிக்குத் தந்த
குளோரோபுரோமசைன்
கரையாமல்.......

குடலை புரட்டியதுநேற்றடித்தது...


நேற்றடித்துநொதித்த.
நெப்போலியன் வாசம்

ழு
வி
னே
ன்


வேலைக்கு விற்ற
சிறு நீரகத்தின்
தழும்பு உறுத்தியது


வேலித்தோல்களில்
வெள்ளை சிவப்பணுக்கள்
அலையாகிப்புரண்டு
அடித்துக்கொண்டிருக்க

நுரைத்துக்கொண்டிருந்தது
எண்டோசல்பான்

.....................மி த ந் தபடி
பார்த்தேன்
... ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

மலப்பைக்குள்
ஜீரணமாகமல்.......
வார்த்தைக்குவியல்கள்
தேர்தல் முழக்கங்கள்
கடவுள்களின் பிம்பங்கள்
அப்புறம்
ஆசையாய் வளர்த்த
ஆட்டின் கறித்துண்டு


று
க்
கி
னே
ன்

சொர்க்கம் பலிதம்
சொப்பன ஸ்கலிதம்
சித்த வைத்தியர்
சிவராஜ் சிவக்குமார்
ப்ராப்தம்
x
y
x
y
x X y
ஆணா?பெண்ணா? தீர்மானிக்கிற....
அதிகார அணுக்கள்
விந்துப்பைகளில்
விராலாய் நீந்தின

டக் டக் டக் டக் க் க் க் க் கு

உபயோகம் குறைந்து
உருவம் தொலைத்த
முதுகெலும்புக்காக
முயன்று விழுந்தேன்


எழுந்து
தேடினேன்
தே
டி
னே
ன்
தே
டி
னே
ன் தே டி ன்

னே


தே டி னே ன்

தே டி னே ன்
தே டி னே ன்
தே டி னே ன்
அனுக்கள் .. திசுக்கள்
எழும்புகள்..எங்கும் தேடினேன்
எங்கும்

என் சாதியின் பெயரோ
என் மதத்தின் பெயரோ.
பொறிக்கப்படவே இல்லை
* * *
என்புதோல்போர்த்த
எதற்க்கோ பழகிய
இநத உடம்பு
என்னுடையதல்ல


கட்டப்பட்ட
கதவுகள்முட்டி
வெடித்துக்கிளம்பி
வெளியேறப்போகிறேன்

சமூகமனிதனென்ற
சத்தியம் தின்று
எனக்குளென்
எதிரைத்திணித்தபடி
முன்னேறிவருகின்ற
மாயப்பிசாசை

உள்ளும் வெளியிலும்
பிடரியிலறைய
நார்சிஸஸ்இருப்பை
நசுக்கிபோட

ஊன் கொடுத்து
உயிர்கொடுத்து


கட்டப்பட்ட
கதவுகள்முட்டி
வெடித்துக்கிளம்பி
வெளியேறப்போகிறேன்

வருகிற பொழுதில்
தயாராக வையுங்கள்
ஒரு
துவக்கை

துவக்குகளால்பிளப்பதை
பூத்துண்டுகளால்
இனியும்
துடைத்துக்கொண்டிருக்க முடியாது

நெனப்பு


ஒவ்வொன்றாய் எடுத்துப்போடுவதற்க்குள்
குடுவை
ஆவியாகிப்போகிறது
காக்கையின் கால்களில்
மினரல் பாட்டில்

பொறப்பூ

ஏவாளிடம் பிடிங்கிய நெல்லில்
எனக்கு
அன்னதானம்
எதோ சமாதானம்
வளைய மறுக்கும்
இந்த முதுகெழும்பு

காலம்

சொ
ட்
டா
ய்
வடிகிற உன்னை
சேமித்து வைக்க.....
நான் தயாராயில்லை

டி
ந்
து
பெ ரு கி
ஒரு
சமுத்திரமாகு............

வடையல்ல வாழ்வு

செத்த எலிகளையும்
குழந்தை கை பிஸ்கட்டையும்
ஓட்டுச் சோறையும் விட்டு

கூழாங்கல் தீட்டி
வைராக்கியம் உருஞ்சி
மனதிலிருந்து உடலைப் பிடுங்கியெறிந்துவிட்டு
ஒரு நெடும் பயணத்திற்க்கு
தயாராகிவிட்டது காக்கை

10
8
4
7
6

கோபம் பீரிட -பீட
கோபுரங்கள் தகர்த்தூ
வர்தைகள் நொறுக்கி -உயர்
வரப்புகள் தூர்த்து

மேகங்கிழித்து- கசங்கிய
மேனிதுடைத்து
கோள்கள் இடித்து- பல
கொலை புரிந்து

5
9

ஒரு வேட்டைக்காரனின் லாவகத்தோடு
நெருங்க நெருங்க
நிழல் படர்ந்து
மெல்லமாய் அணைந்து
3
2
1


இப்போது
சூரியனின்உயிர்
உதிர்ந்து கொண்டிருக்கிறது சாம்பலாய்
பீனிக்ஸை புதைத்த
புதைகுழியின் மேல்

लेबर

ஒயின் கடையில்
ஒதுங்கும் போது
அப்பினேன்
குழி தோண்டும்போது
குமுறாத தாயோலி நான்
பகல் விலகிய நேரங்களில்....
வனாந்திரங்களின்கால்களில்
சுயமாய்
ஒரு கணமேனும்இருந்துவிட
யாரைப்போலவும்
நானும் நீயும்முயற்சிக்கவில்லை
என்பதில்தான்
இருவர் உறவும் நீட்சி பெறுகின்றது
ஒரு பூமரக்காற்றாய்

காட்சி

ஒளிபரப்பு டவர்களின்
கீழ்
சாக்கடை குடிக்கிற

குடிசைகள்

படம்பிடிக்குமா
“நடந்தது என்ன”

பலிபீடம்

பகலைஅரித்தபடி
முன்னேரிக்கொண்டிருந்தது
கரையான்

ஆலமரத்தின் கிளைகளில் உட்கார்ந்திருந்த
வேதாளங்கள்
பீடிபுகைத்துக்கொண்டிருந்தது


இடுகாட்டுக்குட்டையிலிருந்து
மண்ணெடுத்துப்போன
அம்மாசையின்
பானைக்குள்ளிருந்து
கேட்டுக்கொண்டே இருந்தது
சாமக்கோடாங்கியின்
குடுகுடுப்பை சத்தமும்
சடாமினிகளின் சிரிப்பும்
ஒரு
இளம் பெண்ணின் கதறலும்
ஒரு குழந்தையின் அழுகையும்

மரணம் தனது கிளகளிலிருந்த்து
இலையொன்றை உதிர்த்தது

காடு
அதிர வெங்கச்சாங்கல்லில்
கருப்பன் சவரக்கத்திகளை
தீட்டுசத்தம்
வழக்கமானதாக இல்லாமலிருந்தது


கண்ணம்மாள் தன் பிள்ளையோடு
பண்ணாடிச்சிகளின் தீட்டுத்துணியை
கடைசியாய்துவைக்கப்போனாள்நாகன் சிரிக்கும்சுவர்களுக்குள்ளிருந்து
வாழ்வின் சோகம் பிழிந்து
கோடித்துணியை நெய்து கொண்டிருந்தான்

அண்டரண்டா பட்சிகளின்
சத்தம் ஒரு பறையொலியாய்எழும்பி
குஞ்சுகளாய் பொரித்தது


யாருமில்லா சோளக்காட்டில்
அவர்களின் தினவுக்கு இறையான
அவளின் நினைவுகளோடு

வருமீனுக்காக
சுடுகாட்டில்
உட்கார்ந்து காத்திருந்தது
நிலவைக்கொத்தியபடி
ஒரு
மொண்டிக்கொக்கு

சொல்லாடு

எங்கிருந்தோ... சாரைசாரயாக
வந்துகொண்டே இருக்கிறது
ஒரு முடிவுமில்லாமல்..............

மையிலுமில்லாத பேனாவிலுமில்லாத
வார்த்தைகள்
முகமூடிகழட்டி அதிர்சியில்
உறைகிறது

அலமாரிகளிலிருந்து
உதிரத்தொடங்கிய வாக்கியங்கள்
சருகுகளாக
சுழலத்தொடங்கியது

சிதரி வர்த்தைகளாகி
ஒவ்வொரு எழுத்தாய் வடிந்து
பாம்பாய் நீண்டுபோய்விடுகிறது

சராலென எழுந்து
ரீங்காரித்தபடி
மரத்தில் கூடாகத்தொடங்குகிறது
சொட்டய் வடிந்து மீண்டு மையாகி
பேனாக்களை நிரப்புகிறது

அது நடந்துபோன சுவடு
வரிகளாகிறது

பச்சக்கொலைகளை
நனைந்தபின்னும்
இன்னும் எழுதித்தான் கொண்டிருக்கிறேன்


அப்பறம்
ஊர்ந்துபோய்.......
மறைந்துபோகிறது
பிச்சைகாரியின் பாத்திரங்களில்
ஒட்டியிருக்கிறவை

எலியட்டின் வரிகள்
வார்த்தைகளற்றுப்போய்
ஒவியமாகி கரைகிரது

எதிரொலிகளில்
காணாமல் போகிற்து
உன் indlectuaal திடங்கள்

யாரும் அறியாதபடி
மேய்ந்துபோகிறது
உன்னயும்
என்னையும்
எல்லவற்றையும்கூட்டமில்லாத இரவுகளில்
யாருமில்லாத கணங்களில்
ஒருவேளை
“நான்” மறந்த பொழுதுகளில்
வார்த்தைகளை உரித்துப்போட்டுவிட்டு
வரலாம் உயிர்ப்புள்ள ஒன்று
ஆம்
‘எதுவுமே’
இல்லாதபோதுதான்
இருக்கிறது உயிர்ப்பு

எனக்கான காயங்களில்
உனது குருதியோ
உனது கலவியில்
எனது விந்தோ

பாய்வதற்க்கு சாத்தியங்கலில்லை

ஆத்மநாமின் வேலிகளுள்ளிருந்து
கவிதை
பறக்கிறது
பட்டாம்பூச்சியாய்

ஒலிபெருக்கிகளிலிருந்து
மீண்டும் கொட்டத்தொடங்குகிறது
வருடக்கணக்கில் சேகரிக்கப்பட்டகுரல்கள் மழையாக

சரசாள்

இரும்பு வாசம்
கமழும்வெளியை
நரம்புகளில் ஊடுருவிய
வெருமையை
சட்டென ஒரு புன்னகையில்
நிரப்பிவிட்டு புள்ளியாவாள்

என் நவீனங்களை விடவும்
பின்நவீனமானவை
அவளின் வார்தைகள்கம்பத்தைப் பார்த்து
காகங்களைப்பார்த்து
உற்சாகமாய்............
உரையாடல்தொடரும்
அவள்
எப்போதும் திட்டிக்கொண்டிருப்பது
எனது
அலுவலகப்பணியாளர்களை
“மனிதர்களையும்”

மூளை குன்றிய கருப்பாளின்
அம்மா இறப்பிற்க்கு பிறகு
உறவுகள் வெட்டிவிட
ஊர்ச்ற்றித்திரிந்தவளை
மகளாக்கிக்கொண்டவளின்
மனதை
எப்படி வரையறுக்கமுடிகிறது
இவர்களால்இப்படி

எதையாவது தேடிக்கொண்டிருப்பதற்க்கான
அர்த்தம்
கருப்பாத்தாளின்
கனவுகளுக்கு......
புலப்படுவதாயிருக்கும்

இந்த பைத்தியகாரிக்குள்
உறங்கும் இலக்கியங்களை
உளறல்களாய்
மொழிபெயர்க்க அல்ல
அவள்
மொழிகற்று
வாசிக்க ... நானுமில்லை
கனவுகள் ஏதென்று
கண்டுணர
‘நான்’இல்லை

அவளிடமிருப்பது
அழுக்குமூட்டைகளாயிருக்கவாய்ப்பிலை
ஒரு கம்புயூட்டர் எஞ்சினியைர்
கனவுகளாகவுமிருக்களாம்
கடவுளுடையதாகவுமிருக்கலாம்

அந்த சாக்கடையை
ஒத்துக்கொண்டதேயில்லை
அது வீட்டுக்காரனின்
வங்கியென்பாள்

கான்சியஸ் x அன்கன்சியஸ்

யாருக்கு யாருடையது
அன்கன்சியஸ்
தீர்க்கமாக்கிப்போகிறாள்


தேவையாக இருக்கிறது
இந்த
ஆரம்பப்பள்ளி
எப்பொழுதும்
படுத்துக்கொண்டிருக்கும்
அந்த நாய்க்கும்..
அவளுக்கும்.

ஒளிச்சிதரல்-
எத்தனையோ
எனக்குள் கிடந்தாலும்

சில கண்ணாடிகள் பற்றிய பிம்பங்கள்

துடைத்து விட முடியாதபடிக்கு
உறைந்து போய்விடுகிறது
உறுப்பாய்....

அறிவின் குறியீடு
கண்ணாடிகலென்றிருந்தவனை
உடைத்த கணக்குவாத்தியுடையதும்

சாராய மணத்தோடு வந்தாலும்
நானாகவே வளரவிட்ட
நேசம் பூக்கும் வார்த்தைகள்
கொண்டுவரும் மாமாவினுடையதும்


நொறுங்கிக் கிடப்பனவற்றையும்
உருவமாய் பிரதிபலிக்கும்
அக்காவுடையதும்

அமானுசியமாய்
கோவிலுக்குளிருக்கிற

ஆளுயரமான
சாமிகளுடையதும்

இன்னும் உடையாமல்.................
அத்தையை கண்காணிக்கும்
மாமாவின் பைக் கண்ணாடியும்.................

இப்படியாக
பிம்பங்களை விட்டுவிட்டுஉறைந்து போய்விடுகிறதுஉறுப்பாய்....

May 01, 2007

சொர்கத்தின் திறப்பு விழா...................
.மரமெல்லாம் நடுங்குகிற
மார்கழிப்ப்னி மழை............
இருட்டு வடிந்து கொண்டிருந்தது
தேர்வு சுரம் வந்து
தேகத்தை ஆட்டி வைக்க
எழுத்தை தடவி
ஏடுகளை விரித்தேன்
'கோடி மலைகளிலே.....
கொடுக்கும் மலை எந்த மலை...எந்த மலை.எந்த மலை...........
'மாகாளி கோவிலின்
சீர்காழி பாடல்கள்
காதுகளை கிழித்தது .....
ஏடுகளை மூடிவிட்டு
வாசலுக்கு வந்தேன்
வாசலில்''''
பன்னுக்கு.வ்ழியின்றி
பைசா காசின்றி
வாய் பிள்ந்து ஈ யடங்கி
வ்டிவேலன்.கிடந்தான்
சுத்தி சுத்தி
சுப்ரபாதம் பாடிக் கொண்டிருந்தனர்
சூலமங்கலம் சகோதரிகள்.............................
..ஆண்டவன் சன்னதி
அகர் பத்தி வாசனை
சாக்கடையை மீரி
சந்தனம் தெளித்தது
காக்கையாய்......
சந்திலிருந்து
சட்டென கிளம்பிய்
நான்கு பேர்கள்
நடுங்கும் குரலில்..
'மாரியாத்தாளுக்குமடிபிச்சை போடுங்க '....................................................
சித்தத்தை கலக்கி
சின்னாபின்னமாக்கி......
கேள்வி ஞான்ம்கெக்கலித்தது..........
மடி பிச்சை எடுக்கற அளவுக்கு
மாரியாத்தாக்கு என்ப்பா கஸ்டம்?நடந்தேன்................................................................
.'கற்பக வினாயகருக்கு
கோயில் கட்டறோம்
பத்தோ அஞ்சோ..
பாத்து போடுங்க'
சார்ஜன்டாகி
சலத்ததொரு கூட்டம்
கப்பம் கொடுத்து
கால்கள் போனதுபத்தடிகூட.......
இன்னொரு கூட்டம்
'குழந்தை வினாயகருக்கு
கும்பாபிஷேகம் செய்யரோம்
உங்களால் முடிஞ்சதை
உடனே கொடுங்க'................
''''''''''''''.........
இன்னும்
எத்தனை வினயகரை
எதிர் கொள்ள நேருமோ.
..பருவம் தப்பி
பலதும் ந்டக்கிற
மண்ணிர்க்கு இதுமாற்றானதில்லை
வானப்பட்டறையில்...
சம்மடியடிக்கிற
சத்தம் கேட்டது
வெல்டிங் மின்னல்கள்
வெலுத்து வாங்கின..
.பேய் காற்றுடன்பெருமழை...
.தர்மகர்தாக்கள்
தர்பை எடுப்பவர்கள்
தரஸுக்கட்டிடதில்
தைரியமாய் இருந்தார்கள்
கோயில் கட்ட
தெருத்தெருவாய் அலைந்தவர்கள்
தேடிப்பணம் உரித்தவர்கள்
மூலக்கல் போட்டவர்கள்
முண்டாசை இழந்தவர்கள்
பல்லை கடித்தபடி
பையனை அணத்தபடி
'குடிசையின் உள்ளாரெ
குறுகிக் கிடந்தார்கள் ( 1995 மார்கழி முதல்
aaaaaa

Footer