August 19, 2007

டணாய்க்கன் கோட்டை


ஒரே மூச்சாய்'டணாய்கண்கோட்டை' படித்து முடித்த கையோடு

இதை எழுதுகிறேன்

ஒரே மூச்சாய் படிக்குமளவு .............

வேகம்,

இயல்பான நடை,

ஒவ்வொரு கதாபாத்திரமும் கொண்டிருக்கிற முக்கியத்துவம்

வடிவம்,

ஆசிரியரின்வித்தியாசமான முயற்ச்சி

இவையெல்லாம் இருந்தாலும்
திப்பு பற்றியது என்பதுதான் மிகமிக முக்கியமான காரணம்.........................

ஆனால்

டணாய்க்கன் கோட்டை நாவலில்

திப்புவின் தந்திரங்களோ

திப்புவின் வீரமோ

திப்புவின் வேகமோ

திப்புவின் உலகலாவிய தொழில் மேன்மை முயற்சியோ

திப்புவின் அறிவுக்கூர்மையோ

நிச்சயமாக பதிவாகவில்லை

அவருடைய மத சார்பின்மை குறித்துகூட மிகஅழுத்தமான பதிவுகள் இல்லை

இது கூடப்பபரவாயில்லை

மனிதகுல வரலாற்றிலேயேமுதலும் இறுதியுமாக புலிப்படையை வைத்திருந்த,

கடல்தாண்டி லண்டணிலிருந்த ஆங்கிலகிராமங்களையும் நடுங்கவைத்த,

ஆங்கிலேயரை எதிர்த்துப்போராட ஒரு அய்க்கிய முண்ணனியைக்கட்டிய,

உலகமெல்லாம் இருந்த நுட்பங்களை கொண்டுவந்து இங்குள்ளவர்களுக்கு பயிற்றுவித்த,

ராக்கட் தொழில்நுட்பத்தை முதன் முதலில் உலகிற்க்கு அறிமுகப்படுத்திய,

மதச்சார்பின்மையை உயிராய் நினைத்து நடைமுறைப்படுத்திய,

கஜான காலியானாலும் பரவாயில்லையென்று மதுவிலக்கை அமுல்படுத்திய,

புதிய புதிய யூத்திகளை கையாண்டு வேளாண்மையை மாற்றியமைத்த

மற்றமன்னர்களைப்போல் கோழையாக மண்டியிட்டு

கப்பங்கட்டி கஞ்சிகுடிக்காமல்

களத்தில் வீரரோடு வீரனாக போரிட்டு மடிந்த

மாவீரன் சமூக அறிவாளன் திப்புவை ஒரு கேணக்காத்தான்,மண்டமாக்கான் போல்
சித்தரித்திருக்கிறது

அதற்க்கு மாறாக

ராணி லட்சுமியின் தந்திரங்களும்

ராணி லட்சுமியின் வீரமும்

ராணி லட்சுமியின் வேகமும்

இயல்புக்கு மாறாக

மிக மிக மிகஅதிக தூக்கலாக இருக்கிறது

அப்படியிருக்கும் பட்சத்தில்

அட்டையில் திப்புவையோ

உள்பக்கங்களில்

திப்புவின் ஆட்சி வரைபடங்களையோ,

திப்புவின் நாணயங்களையோ,

திப்பு பயன்படுத்திய பொருட்களையோ,

பயன்டுத்தியிருப்பதுஎதோ ஒவ்வாத ஒரு செயல் போல தெரிகிறது

திலகவதியின் அற்புதமான முன்னுரை மட்டுமில்லாமலிருந்தால்

வரலாறு தெரியாமல் புதிதாய் புத்தகத்தை கையிலெடுப்பவர்களுக்கு........

''திப்பு ஒரு கேணக்காத்தான்'' என்றுதான் நினைக்கத்தோன்றும் என்பதை
இங்கே வருத்தத்தோடு பதிவு செய்ய விரும்புகிறேன்

திப்புவை தூக்கி நிறுத்தி திலகவதியின் முன்னுரை முதல் பதிப்பில் ஏற்பட்டஇருட்டடிப்பிற்க்கு
இரண்டாம் பதிப்பில் நாயுடுவுக்கு பிராயசித்தம் தேடிக்கொடுத்திருக்கிறது


விவேகானந்தரை வீழ்த்திவிட்ட வள்ளுவர் சிலை போல

August 16, 2007

என்ன வெங்காயாமோ எழவு கெரகம் - சோத்துக்கு.............. சாதிப்பெருமை மட்டும் அட்டாலிக்கு போகுது

இரட்டை டம்ளர்
இன்னும் இருக்கிறது
கோவை மாவட்டம்

கோவை புறநகர்

  1. மோளப்பாளையம்,
  2. சித்திரைச்சாவடி,
  3. வடிவேலம்பாளையம்,
  4. விராலியூர், நரசிபுரம்,
  5. அஜ்ஜனூர்,
  6. கண்டப்பாளையம்,
  7. காளப்பநாயக்கன் பாளையம்,
  8. ஜாகீர் நாயக்கன் பாளையம்,
  9. வெள்ளருக்கம் பாளையம்,
  10. சிலம்பனூர்.
  11. பெரியநாயக்கன் பாளையம்,
  12. காரமடை மேற்கு - புஜ்ஜனூர்,
  13. திம்மம்பாளையம்,
  14. கே.புங்கம்பாளையம்,
  15. புன்னையூர்,
  16. வெள்ளியங்காடு,
  17. கண்டியூர்,
  18. சின்னப்புத்தூர்,
  19. பெரிய புத்துர்,
  20. மங்களக்கரை புதூர்,
  21. மூலத்துறை,
  22. பாலப்பட்டி,
  23. வச்சினப்பாளையம்,
  24. கிட்டாம்பாளையம்,
  25. புதூர்.
  26. அன்னூர்
  27. :மோக்கனூர்,
  28. எ°. புங்கம்பாளையம்,
  29. பகத்தூர்,
  30. பல்லேபாளையம்.
  31. இரும்பொறை :
  32. கவுண்டன்பாளையம்,
  33. மீனம்பாளையம்,
  34. கனுவக்கரை,
  35. கள்ளப்பட்டி,
  36. சின்னரங்கம்பாளையம்,
  37. பெரியரங்கம்பாளையம்.
  38. அவிநாசி சேவூர்,
  39. நம்பியாம்பாளையம் (கருவலூர் சாலை),
  40. ராணியம்பாளையம்,
  41. தண்டுக்காரன்பாளையம்.ஈரோடு
  42. உட்கோட்ட எல்லைகாவிரி பாளையம்,
  43. குப்பன் துறை,
  44. உக்கரம்,
  45. கடத்தூர்,
  46. பனையம்பாளையம்.
  47. பல்லடம் பாப்பம்பட்டி,
  48. கண்ணம்பாளையம், சித்தநாயக்கன்பாளையம், லட்சுமி நாயக்கன்பாளையம், கரடிவாவி, பருவாய்,ஆராக்குளம், அனுப்பட்டி, லட்சுமி மில்ஸ், ஐயம்பாளையம், 11 சென்னிபாளையம், அப்பம்பாளையம், காளிகாளப்பட்டி,வேலம்பட்டி, மடுகபாளையம், எளவந்தி, துத்தாரிபாளையம்,கேத்தனூர், வெங்கிட்டாபுரம், பணப்பட்டி, பிரண்டம்பாளையம், சிக்கனத்தூர். மேட்டு கடை டீ கடை, பாரதியார் நகர், குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.ராமாத்தாள் டீ கடை, பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி அஞ்சல், சுல்தான்பேட்டை ஒன்றியம், கோவை - 641 016.ஆசாரி மணி கடை, கரும்புரவிபாளையம், வடவேடம்பட்டி அஞ்சல், கேத்தனூர் வழி, பல்லடம் தாலுக்கா, கோவை மாவட்டம்.பாலு உணவகம், கரடிவாலி, பல்லடம் , கோவை மாவட்டம்.வஞ்சியம்மன் உணவகம், லட்சுமி உணவகம், செம்மிபாளையம் அஞ்சல்,பல்லடம் தாலுக்கா, கோவை மாவட்டம்.குமார் உணவகம், சுக்கம்பாளையம், சுக்கம்பாளையம் அஞ்சல், பல்லடம், கோவை மாவட்டம்.அமாசையப்பன் கவுண்டர் உணவகம், காமராசர் நகர், கண்ணம்பாளையம் அஞ்சல், சூலூர் ஒன்றியம், பல்லடம் தாலுக்கா, கோவை மாவட்டம்.கவுண்டர் தேனீர் நிலையம், சிக்கனூத்து, சுல்தான் பேட்டை ஒன்றியம், கோவை மாவட்டம்.தெற்குப்பாளையம், பொங்கலூர் ஒன்றியம், கோவை மாவட்டம்.புத்தரச்சல் டீ கடை, குண்டடம் ஒன்றியம், தாராபுரம் தாலுக்கா.நடுகவுண்டர் பெரிய பாப்பா கடை, வடவேடம்பட்டி, வடவேடம்பட்டி அஞ்சல், கேத்தனூர் வழி, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.சுப்பையா கவுண்டர் டீ கடை, கிருஷ்ணா நகர், கரடிவாலி, பல்லடம் தாலுக்கா, கோவை.முத்தக்கா டீ கடை, அனுப்பட்டி, பல்லடம் தாலுக்கா, கோவை.பழனிச்சாமி கவுண்டர் டீ கடை, வெங்கிட்டாபுரம், பல்லடம் தாலுக்கா, கோவை.நடராஜ் டீ கடை, குள்ளம்பாளையம் மேற்கு, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.சுப்ரமணி டீ கடை, குள்ளம்பாளையம் மேற்கு, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.செந்தில் நாயக்கர் டீ கடை, துத்தாரிபாளையம் பிரிவு, பொங்கலூர் ஒன்றியம், பல்லடம் தாலுக்கா, கோவை.எலவந்தி வடுகபாளையம், மூன்று டீ கடை, பொங்கலூர் ஒன்றியம், பல்லடம் தாலுக்கா, கோவை.மாரப்பன் கவுண்டர் டீ கடை, காளிவேலம்பட்டி, சுக்கம்பாளையம் அஞ்சல், பல்லடம் தாலுக்கா, கோவை.கீர்த்திகா டீ கடை, வடவேடம்பட்டி, வடவேடம் பட்டி அஞ்சல், கேத்தனூர் வழி, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.தனி சுடுகாடு உள்ள இடங்கள்:இராஜீவ்காந்தி நகர் வடவள்ளி, கணுவாய், நாதேகவுண்டன்புதூர், மேட்டுக்காடு, முல்லைநகர்,புதூர் புதுக்காலனி, போளுவாம்பட்டி, தெனமநல்லூர், ஆலாந்துறை, செம்மேடு, ஆறுமுகனூர், பச்சாபாளையம், கோவைப்புதூர், இடையர்பாளையம், லிங்கனூர் ஆதி தமிழன் நகர்.பெருமநாயக்கன் பாளையம். பெருமாநாயக்கன்புதூர்,குண்டடம் ஒன்றியம்எடையபட்டி, குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.பாரபாளையம், கொடுவாய் ஒன்றியம், காங்கயம் வட்டம்.வலையபாளையம், குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.வெல்லநத்தம் கிழக்கு.வெல்லநத்தம் வடக்கு, குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.சாத்தநாயக்கன்பாளையம், குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.தீண்டாமை கடைபிடிக்கும் பொது கோவில் :காளப்பட்டி மாரி அம்மன் கோயில்மாகாளியம்மன் வீரமாத்தியம்மன் கோயில், பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி அஞ்சல், சுல்தான்பேட்டை ஒன்றியம், கோவைசலூன்வளர்மதி சலூன் - மல்லேஸ்வரி சலூன்,பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி அஞ்சல், சுல்தான்பேட்டை ஒன்றியம், கோவை.ஹீராட் சலூன், சித்நாயக்கன்பாளையம், சுல்தான்பேட்டை, கோவைநிலா நிரோஷா ஹேர் லைன்ஸ், குப்புசாமி நாயுடுபுரம், பல்லடம் தாலுக்கா, கோவை.

நன்றி பெரியார் முழக்கம்

August 14, 2007

1000ம் கோடி

கேபிள் டீவியை அரசே நடத்தும்
ஆனால்
டைட்டானியத்தை
டாட்டா நடத்தும்

கடன்வாங்கி
கார்ரோடு போட்டு

கால்ந்டையாளனிடம்

கட்டணம் கேட்கும்


August 13, 2007

நொய்யல் படம் -திருடப்பட்ட ஞானம்


1மணல் திருட்டு
2தண்ணி திருட்டு
3மூளைத்திருட்டு


நொய்யல் இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சிமலையில், முட்டத்தில் தொடங்கி தன்னுடைய வரலாற்றை ஒலித்தபடி... இன்னும் உறங்காமல் சென்று கொண்டிருக்கிறது. நொய்யலை வைத்து தண்ணீரை தனது பிடிக்குள் கொண்டுவர, வியாபார முகத்தை மறைத்து, சேவை முகமூடியை போட்டுக்கொண்டு ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறதென்றால் இன்னொரு திருட்டு ஆரவாரத்துடன் அரங்கேரியிருக்கிறது. அதுதான் நொய்யல் பற்றிய சேகரிக்கப்பட்ட புத்தித்திருட்டு. ஆம் கடந்த பத்தாண்டுகளாய், மிகவும் சிரமப்பட்டு ஆர்வத்தோடு நொய்யலை படமாக எடுக்க ஆவணங்களையும் ஆதாரங்களையும் சேர்த்து வைத்த, நொய்யல் படம் வர காரணமாக காட்சியமைப்பு முதல் களம் வரைக்கும் இருந்த, ஏன் நொய்யல் பற்றி இயக்குநர் என்று போட்டுக்கொள்கிற பாலமுருகனுக்கே பல பின் புலங்களைஅறிமுகப்படுத்தியவர் ர.முருகவேள் தான்.இந்தப்பெயர் எங்கேயோ கேட்டமாதிரி இருக்கிரதல்லவா? ECONOMIC HITMAN(ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்) மொழிபெயர்த்த அதே முருகவேள்தான் ஆனால் அவருடைய பெயரை ஒரு சம்பிரதாயத்துக்காகக்கூட அந்தப்படத்தில் பதிவு செய்யவில்லை என்பது வருத்தப்பட வைக்கிறது .
நொய்யல் என்றாலே திருட்டுதான் போலிருக்கு !
வெறும் சரக்குகளால்,
பணத்தால்.....
நொய்யலை மறைத்து விடமுடியாது என்பது காலம் கூவத்தொடங்கிய பின் தான் தெரியும் போல

August 10, 2007

1366


இந்த அறையில்
தற்கொலை செய்தவர்கள்
எண்ணிக்கை அதிகம்...
ஆனால்
இது
நான் மீண்டும்
உயிர்தெழுந்த இடம்

அங்கே
மார்கோபோலோக்களும்
மாமுனிகளும்
தீர்ந்துபோய் நிறைத்திருப்பார்கள்
எம்மை
ஒளிந்திருப்பார்கள்
கடவுள்கள்
கழிப்பறையில்

சிறுநீர் கழித்த
கிரீடங்களில் ஒலிக்கும் கீர்த்தனைகள்
வண்டுகள் துளைத்திட
காதுகள் விரியும்

சுதந்திரங்களின் முகவரியில் குவியும்
ஒலியும்
ஹேங்கரில் மாட்டப்பட்ட சிறகுகளும்
யாரும் தடுக்கமுடியாதபடிக்கு வளரும்

எல்லாம்...........குமாரசாமி
வாடகை கேட்கும்

பத்தாம் தேதிவரைக்கும்

August 05, 2007

கட்டை



ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறத்தில்
யாரும் வராத மாமரத் தோப்பில்
கூவும் குயிலின் தென்றல் பாட்டில்
ஆடும் இலைகளின் சலங்கை ஒலிப்பில்
தன்னை மறந்தது
தனியே கிடக்கும்
சின்னக் கவியே!
சிந்தனை பலமா?
என்ன செய்கிறாய்?ஏகாந்தத்தில்!
இன்னும் கற்பனைஎழுந்தபாடில்லையோ!?

தலைவனை பாடினாய்!தனிமையை பாடினாய்!
தனிமையின் தவிப்பை, தாகத்தை பாடினாய்!
கல்லைப்பாடினாய்! காற்றைப்பாடினாய்!
காற்றில் அலையும் கீற்றைப்பாடினாய்!
இளசின் அழகில் மயங்கிச்சாய்ந்து
இடையை,நடையை,தொடையை பாடினாய்!

அய். ஆர் இருபதை
ஆடுதுறை முப்பதை
விளைத்தவன் பசியிலே
உழழும் கொடுமையை
உன்
பாட்டிலெடுத்துக்
காட்டியதுண்டா-இல்லை
வியர்வை குலத்தின்
விலாதிருடும்
சதிகாரர்களை
சாடியதுண்டா

என்ன கிழித்தாய்
எழுத்துப்பணியிலே
எழுத்தெனுமாயுதம்
எதற்க்குனக்கு
எழுதுகோலை
எடுத்துவீசு
* * *
விரிந்து பரந்திருக்கும்
விஞ்ஞானத் தொழில்நுட்பம்
வானத்தில் உட்கார்ந்து
வா'வென்றழைக்கயிலே

இன்னும் நீ

இரண்டாம் நூற்றாண்டின்
இருட்டுக்குள்ளேயே

பசித்துயரம் தாழாமல் முரசத்தின் மேலேரி
படுத்துறங்கியெழுந்தபின்னும் மோசிக்கீரன்
பட்டினியைப்பற்றியொருவரிகூடப்பாடமல்
பாவெடுத்து மன்னனுக்கு கால்கழுவிவிட்டானாம்...................... * * *

காதிலிருந்தது கையிலிருந்த்தது
ஏதுமில்லாமல் ஆயினபின்னும்
கால் செருப்பை
கழட்டியடித்து
வீட்டுக்கு வெளியெ
விரட்டிவிடாமல்


'இந்தாருங்களத்தான்,இதையும் விற்று
சின்ன வீட்டுக்கு போய்வாருங்கள்'
என்ற
கண்ணகிப்பெண்ணெல்லாம்
கற்புக்கரசியாய்
பத்தினிதெய்வமாய்
பண்பாட்டு சின்னமாய்.
* * *
முல்லைக்கு தேர் கொடுத்த

முட்டாள்தனத்தையெல்லாம்
வள்ளளென்று யாத்துக்குவித்து
வரலாற்றின் பக்கங்களில்...சேறடித்துப்போனார்கள்
பொற்காலமென்றுபோற்றிய..
அவர்கள்ஆட்சியின் மறுபுரத்தில்
அவலமே வாழ்கை
* * *
சங்ககாலந்தான் இருட்டுக்குளென்றால்
இங்கென்ன வாழ்கிறதாம்

கொடுகின்றகாசுக்காய்
கொள்கைகளை விட்டெரிந்து
முதுகெலும்பை அடகு வைத்து
மூலையிலே உட்கார்ந்து
துறை தேடி தினை தேடி
துவக்க வரி தேடி..............

தெங்கிளநீர் கொங்கையினாள்
செங்கனிபோல் மங்கையினாள்
புணர்வதர்க்கு மெத்தையினாள்
புத்தம்புது தத்தையினாள்
என்றெல்லாம்
எழுதுகிற
மதனகாம பயல்களெல்லாம்
மண்ணிலே கவிஞராக
உலா வரும் போது
உள்ளுக்குள் எரிகிறது

விபத்திலொருத்தி
விழுந்துகிடந்தாலும்
மர்புதெரிய தொடை பிதுங்க
மல்லாந்து கிடந்தாள்
என்றுதான்
எழுதத்தோன்றும் இந்த
எழுத்தாளப்பயல்களுக்கு

இவர்கள்கையிலிருப்பது


காமனின் அம்பா!?
கேமலின் பென்னா!?
மைக்கு பதிலாய் ஊற்றி எழுதுவது
சாக்கடை நீரா?
முருங்கைக்காய் சாறா?
* * *
இந்த
எதார்தங்களை
எட்டிஉதைத்துவிட்டு
கனவுகளோடு
கட்டிப்புரளாதே

இலக்கிய வியாதிகளுக்கெதிராகஆயுதமெடுப்போம்
-நாமேஆயுதமாவோம்

இது மாமேதையின் வைரவரிகள்

-இதை
நாட்குறிப்பேட்டின் ஓரத்தில் அல்ல
இருதயத்தில் எழுதி வைத்துக்கொள்

சம்பாதிப்பதர்காக எழுதாதே
எழுதுவதர்காக சம்பாதி ....

* * *

Footer