May 13, 2007

சொல்லாடு

எங்கிருந்தோ... சாரைசாரயாக
வந்துகொண்டே இருக்கிறது
ஒரு முடிவுமில்லாமல்..............

மையிலுமில்லாத பேனாவிலுமில்லாத
வார்த்தைகள்
முகமூடிகழட்டி அதிர்சியில்
உறைகிறது

அலமாரிகளிலிருந்து
உதிரத்தொடங்கிய வாக்கியங்கள்
சருகுகளாக
சுழலத்தொடங்கியது

சிதரி வர்த்தைகளாகி
ஒவ்வொரு எழுத்தாய் வடிந்து
பாம்பாய் நீண்டுபோய்விடுகிறது

சராலென எழுந்து
ரீங்காரித்தபடி
மரத்தில் கூடாகத்தொடங்குகிறது
சொட்டய் வடிந்து மீண்டு மையாகி
பேனாக்களை நிரப்புகிறது

அது நடந்துபோன சுவடு
வரிகளாகிறது

பச்சக்கொலைகளை
நனைந்தபின்னும்
இன்னும் எழுதித்தான் கொண்டிருக்கிறேன்


அப்பறம்
ஊர்ந்துபோய்.......
மறைந்துபோகிறது
பிச்சைகாரியின் பாத்திரங்களில்
ஒட்டியிருக்கிறவை

எலியட்டின் வரிகள்
வார்த்தைகளற்றுப்போய்
ஒவியமாகி கரைகிரது

எதிரொலிகளில்
காணாமல் போகிற்து
உன் indlectuaal திடங்கள்

யாரும் அறியாதபடி
மேய்ந்துபோகிறது
உன்னயும்
என்னையும்
எல்லவற்றையும்



கூட்டமில்லாத இரவுகளில்
யாருமில்லாத கணங்களில்
ஒருவேளை
“நான்” மறந்த பொழுதுகளில்
வார்த்தைகளை உரித்துப்போட்டுவிட்டு
வரலாம் உயிர்ப்புள்ள ஒன்று
ஆம்
‘எதுவுமே’
இல்லாதபோதுதான்
இருக்கிறது உயிர்ப்பு

எனக்கான காயங்களில்
உனது குருதியோ
உனது கலவியில்
எனது விந்தோ

பாய்வதற்க்கு சாத்தியங்கலில்லை

ஆத்மநாமின் வேலிகளுள்ளிருந்து
கவிதை
பறக்கிறது
பட்டாம்பூச்சியாய்

ஒலிபெருக்கிகளிலிருந்து
மீண்டும் கொட்டத்தொடங்குகிறது
வருடக்கணக்கில் சேகரிக்கப்பட்டகுரல்கள் மழையாக

No comments:

Post a Comment

Footer