
எத்தனையோ
எனக்குள் கிடந்தாலும்
சில கண்ணாடிகள் பற்றிய பிம்பங்கள்
துடைத்து விட முடியாதபடிக்கு
உறைந்து போய்விடுகிறது
உறுப்பாய்....
அறிவின் குறியீடு
கண்ணாடிகலென்றிருந்தவனை
உடைத்த கணக்குவாத்தியுடையதும்
சாராய மணத்தோடு வந்தாலும்
நானாகவே வளரவிட்ட
நேசம் பூக்கும் வார்த்தைகள்
கொண்டுவரும் மாமாவினுடையதும்
நொறுங்கிக் கிடப்பனவற்றையும்
உருவமாய் பிரதிபலிக்கும்
அக்காவுடையதும்
அமானுசியமாய்
கோவிலுக்குளிருக்கிற
ஆளுயரமான
சாமிகளுடையதும்
இன்னும் உடையாமல்.................
அத்தையை கண்காணிக்கும்
மாமாவின் பைக் கண்ணாடியும்.................
இப்படியாக
பிம்பங்களை விட்டுவிட்டுஉறைந்து போய்விடுகிறதுஉறுப்பாய்....
No comments:
Post a Comment