September 20, 2007

என்ன எழவு கெரெகம் இது


ராகங்களின் தலையில்

சொட்டிக்கொண்டிருக்கிறது

எச்சங்கள்


கவிதையிலிருந்து

காட்டுக்கும்

சிறகிலிருந்து

வானத்திற்க்கும்


நீயும் புண்ணாக்கும்


அலுவலகத்திலிருந்து

வந்தவுடன்

வாசனை நுகர்ந்து

வாலைக்குழைத்து

கால்களைநக்கி

கவுந்தடித்து


வறுக்கிகிடைத்தவுடன்


காணாமல் போய்விடுகிறது


என் நாய்

September 07, 2007

RED TEA-ரெட் டீ-முருகவேள்


தோழர் முருகவேளோடு ஒரு இரவு முழுக்க கோபநாரியின் காட்டுப்பகுதிகளில் வெளிச்சம் ஒழுகும் இரவில் நிழல்களின் அசைவுகளில் கேளையாடுகளின் சத்தங்களோடு RED TEA யின் உள்ள கவிதைகளை மொழிபெயர்க்க அமர்ந்தபோது நாவலின் பக்கங்களை படிக்கக்கொடுத்தார் கொஞ்சம் பக்கங்களுக்குள் மனதைபிழிந்து போட்டுவிட்டது அதன் இயல்பான சம்பவங்கள்


இப்போது தேயிலை மலைகளை பார்க்கும் போதெல்லாம் லட்சக்கணக்கான மனிதர்களைதின்று வயிறு வீங்கி படுத்திருப்பது போலவே தெரிகிறது
ஆங்கில மொழியில் வெளிவந்து கேட்பாரற்று கிடந்த மிகச்சிறந்த இந்த நாவல்,வெகு விரைவில் முருகவேளின் மொழிபெயர்ப்பில், விடியல் பதிப்பக வெளியீடாக வரவிருக்கிறது. இந்நாவல் புதிய அலைகளை தருவதற்கான அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கிறது
இது வெளிவரும்போது நிச்சயம் தலித் நாவல்கள் புதிய பரிமாணத்தை எட்டும்

தமிழின் பல மாற்று சிறுபத்திரிகைகளையும் ஒருசேர வாசிக்கும் தளமாக விளங்குவது 'கீற்று' இணையத்தளம். மார்க்சியம், பெரியாரியம், பெண்ணியம், தலித்தியம், மனித உரிமைகள் என பல்வேறு அரசியல் பார்வைகளை அடிப்படையாகக் கொண்ச இத்தளத்தை நடத்திவருபவர் இளைஞரான தோழர்.ரமேஷ். இந்தத் தளத்தின் மூலம் எந்த ஆதாயமும் பெறாத அதேநேரத்தில் கடுமுழைப்பையும் செலுத்திவருபவர். இப்போது கீற்று இணையத்தளத்தில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போன்றவர்களின் நூல்களையும் சமகால இலக்கிய மற்றும் அரசியல் நூற்களையும் ஏற்றவுள்ளார் ரமேஷ். ஆனால் இதற்கென ஒரு நபரை நியமித்து அவருக்கான சம்பளம் மற்றும் தொலைபேசி போன்ற பல்வேறு செலவுகள் அவரை எதிர்நோக்கியுள்ளன. மேலும் கீற்று இணையத்தளம் குறித்த அறிமுகத்தையும் அனைத்துத் தமிழர்களுக்கும் கொண்டு செல்வதற்கான ஆலோசனைகளையும் வேண்டுகிறார் தோழர்.ரமேஷ். மாதம் அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலக்கியம் மற்றும் அரசியலில் ஆர்வமுள்ள நண்பர்கள் தங்களால் இயன்ற அளவில் மாதம் ஒரு தொகையைப் பகிர்ந்துகொள்ளலாம்.
மேலும் தொடர்புக்கு ரமேசின் தொலைபேசி: 9940097994, அவரது மின்னஞ்சல் editor@keetru.comரமேஷின் வங்கிக் கணக்கெண் : 603801511669iciici bank, chennai branch.

Footer