June 15, 2007

ஓர் பார்நாள் இரவு

இலைகளில் ஒழுகிக்கொண்டிருந்த
இருட்டு
மேசைகளை மூழ்கடித்தது

கொட்டுகிற சாக்கணாக்களை
கொரித்தபடி மேசைக்கு கீழ்
எதையோ தேடிக்கொண்டிருக்கிறது
பூனை


தோல்களை உரித்துப்போட்டுவிட்டு
எழும்புக்கூடாய்
அமர்ந்திருக்கிறது
சுயம்





முகமூடிகள் தொலைத்து
நிஜம் அணிந்து கொண்டு
நடமாடுகிறது
காற்று

பிழிகிற சோகத்தை
அனுமதிக்காமல்
மகிழ்சியை தினித்த
அதிகாரப்பொழுதுகளில்
ஆடியபடியிருந்த வேப்ப மர நிழலில்
உறங்காத
பறவையை தேடிக்கொண்டுருந்தது
மனப்பொந்து
உதிர்த இலைகளில்
முகம் தேடியது
பூனைக்குட்டி



நானும் இல்லாத
நீயுமில்லாத
வெற்றிடத்தில்
எப்போதும் நிறைந்துகிடக்கிறது
எதோ ஒரு கோப்பை


யாருக்குமிருப்பதில்லை
விருப்பம்
முழுநேர வேசமிடுதலில்


சேகரித்து வைத்திருக்கிற ஒப்பனைகளை
வார்த்தைகளை
வர்ணங்களை
உள் மண்டிய கற்க்களை
மேலே கொண்டுவந்து துப்ப
தேவையாயிருக்கிறது
இது


எல்லாவற்றிலும்
ஏற்றதாழ்வுகளை
விதியாக்குகிற பூதங்களின்
விரல்களின் அழுத்தத்தில்
கொப்புளங்கள்

No comments:

Post a Comment

Footer