
புழுதிபடிந்த
வீட்டின் கூரைகளில் நின்று
கரைந்துகொண்டிருக்கும் குருவிக்கு தெரிந்திருக்கிறது
அவளது மூச்சுக்காற்று
வயிற்றுக்கு
ஒருபோதும்
எதையும் செய்ததில்லை
எழுதிய அக்கி
நகர்ந்து சென்று
சுவர்களுக்குள் புகுந்து
தேவதைகளாகி
காலத்தை
குடித்துத்தீர்க்கிறது
எரவாரங்களில் குடியிருந்துகொண்டு
எசகடவக்குதிரைகள்
இன்னும்
இரவுகளில்
இவ்வழியே ஓடிக்கொண்டிருக்கிறது
எருக்கம்பூவெடுத்து மாலையாக்கி
மரத்துக்குபோட்ட
ரகசியம்
இன்னும்யாருக்கும் பிடிபடவில்லை
அந்த இடங்களில் முளைத்திருக்கும்
குழந்தைகளைப்பார்த்து
சிரித்துக்கொண்டிருக்கிறாள்
ஆவரம்பூ இடித்து காப்பி கொடுத்தபடி
நாக்கில் வந்து உட்கார்ந்து போகும்
எதிலும் ராமாப்பிள்ளைப்பாட்டிக்கு பங்கு உண்டு
No comments:
Post a Comment