கசிவுநீர்க்குட்டையை
அலகால்
உருஞ்சிய வெலுத்த நாரை
பறந்து போய் வானாமாகி ப்போனது
துடிப்பேரி கரையேறிய மீன்கள்
அந்நிய பயணத்தில்
லயித்துப்போய் காலனிகளுக்காக
செதுக்கிக்கொண்டிருந்தது
மண்ணை சடுதிவழி அடைய
குடைந்தது நண்டு
தவளைகள் மாற்று இருப்பிடங்களை
நோக்கிய பயணத்தில் களைத்திருந்தது
வனம் நொறுங்கிய பொழுதுகளை
எண்ணிய படி தள்ளாடிக்கொண்டிருக்கிறது
ஒரு
வண்ணத்துப்பூச்சி
முகத்தை மறைத்துக்கொண்டு
ஒரு
மரங்கொத்தி
அலகை உடைத்து
தற்க்கொலையில்
வீழ்ந்துகிடந்தது
கொடங்கு பள்ளத்திலிருந்து
சோளக்காட்டுக்கு வந்து
ஊளையிடும் நரிகள்
சத்தமடங்கி
ஈன வலியில் காற்றை கணமாக்கிக்கொண்டிருந்த்து
ஆறு தன் உயரத்தை குறத்துக்கொண்டது
அருவி பாதியில் உறைந்தபடி நின்றது
வானமே கூரையாச்சு
வையகமே வீடாச்சு
ஒரு
சிறப்பு பொருளாதார மண்டலம்
No comments:
Post a Comment