May 30, 2009

குப்பைத்தொட்டியில் கிடக்கிறது ஒரு கருப்பை





தீண்டப்படாத இடம் யாதுமில்லையென்றபோதும்

பிளவுபட்ட நாக்குகளை தின்றுவிடும் அகோர வெரியோடு

ஊர்கிறது


சமாதிகளில் வழியும் உயிரை நக்கும்

அதன் நகர்வுகளில் நெரிகிறது குழந்தைகளும்

அதன் பொம்மைகளும்


சாட்சியமே அழித்ததற்க்காய்

பிராந்திய வேசம்கட்டி

சதையையும் பிட்டுத்தருகிற

கொடூரங்களைக் கேட்டு உதிர்ந்த காதுகள்

உடலமெங்கும் முளைக்கிறது



ஏலாமையில்வடிந்தகுற்றவுணர்வில்

குதித்து

வலியின் வேர்கள் பிளக்க

தவணையில் சாகிறது மனசு


‘கசப்பில் வழிந்த துளிகள்

இறுகி படிக்கட்டுகளாகும்’


நம்பிக்கையின் கீற்று அற்றுப்போன

சிதிலங்களில் பெய்கிற பேரிடியில்

பிணவாசனையெழும்பி உலகத்தில் ஒவ்வொருவனின் நுரையீரலையும் நிரப்பும்

அண்டெனும்

எட்டிப்பாருங்கள்

சர்வதேசத்தின் குப்பைத்தொட்டியை

5 comments:

  1. நண்பா உங்களை தெரியும் என்பதால், நிச்சயம் இந்த கவிதை சிறப்பானதாக இருக்கும் என்று முழுமையாக நம்புகிறேன், எனக்கு உண்மையில் புரியவில்லை என்ற போதிலும்.

    மீண்டும் ஒரு முறை மன்றாடி கேட்டு கொள்கிறேன் - font'i சரி செய்யுங்கள்..

    -மயில்வண்ணன்..

    ReplyDelete
  2. :(

    ஏதும் செய்யவியலாமல் போன வலி வரிகளில் தெரிகிறது !

    ReplyDelete
  3. //கசப்பில் வழிந்த துளிகள்
    இறுகி படிக்கட்டுகளாகும்//
    இதுதான் அதிகாரத்துக்கு எதிரான நம்பிக்கையின் அவதாரம்.
    அப்புறம்.... உங்க பேருக்காகவே இந்த வலைமனைக்கு வந்தேன்!!

    ReplyDelete
  4. :((( தாங்க முடியாததாய் இருக்கிறது கவிதையின் வலி!

    ReplyDelete

Footer