 
   
  மே13அல்லது 14 ஆம் தேதி இரவு நெருங்கிய,(EPRLF) ஈ பி எல் எப் ன் ஆதரவாளர் ஒருவர் திடுக்கிடும் செய்தியை சொன்னார் 
  ‘ஈழத்தின் முக்கியமான தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார் தேர்தலில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்க்காக அரசு அதை மறைத்துவைத்திருக்கிறது தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பார்கள்’ என்பதுதான் அந்த திடுகிடும் செய்தி
  அந்த முக்கியமான தலைவர் பிரபாகரன். 
  எனக்கு பெரிய அதிர்சி ஏற்படவில்லை.
  அப்படியா? 
  ஆம், நானும் எங்கேயோ படித்தேன் இந்திய இலங்கைக்கு இருக்கும் ரகசியஒப்பந்தமே அதுதானே! 
  ஆனால் பிரபாகரன் அங்கில்லை என்று சொல்கிறார்களே?
  அவருக்கு தெரிந்த செய்தியின் மேல் லேசான சந்தேகத்துடன் ‘பார்ப்போம்’ என்றார் 
  பின்பு 17 ஆம் தேதி அவரே அழைத்தார் 
  நல்ல தூக்கத்தில் இருந்தேன் 
  ‘பிரபாகரன் இறந்துவிட்டார் CNN IBN ல் பாருங்கள்’ என்றார்
  ‘அப்படியா பார்க்கிறேன்’ 
  ஆனால் பார்க்கமுடியவில்லை
  மாலையில் நிதானமாக எனதுவேலைகளை முடித்துவிட்டு 
  அவரோடு இருந்த மற்ற தோழர்களையும் சந்தித்தேன்
  மலை மலரைக்காட்டினார்கள்
  மாலைமலரை விரித்துக்காட்டி ‘இதோ பேப்பரில் போட்டுவிட்டார்கள்’ என்று காட்டினார்கள்
  ‘வேனில் தப்பிக்கும்போது ஏவுகணை வீச்சில் அனைத்துமுன்ணனி தலைவர்களோடு பிரபாகரனும் கொல்லப்பட்டார்’ 
  தோழர் எனக்கு நம்பிக்கையில்லை
  மாலைமலரில் இவ்வளவு பெரிசாய் போட்டிருக்கிறான் நம்பமாட்டீங்களா?
  மாட்டேன்,! இதே போல் நான்குமுறை போட்டிருக்கிறான், நானும் படித்திருக்கிறேன்! 
  அப்புறம் மாலைமலரில் போடுவதையெல்லாம் நம்பவேண்டிய அவசியம் இல்லையென்றேன் அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்
  பிரின்டேடு மேட்டர் எல்லாம் உண்மை என்று நம்பும் அறிவின் வயதை கடந்து வெகுகாலமாகிவிட்ட எனக்கு அவர்களின் போக்கு ஆச்சரியமளிக்கவில்லை.
  அவசரமாக வந்த  ஒரு தொலைபேசி அழைப்பு என்னை அங்கிருந்து நகர்த்தியது
  அப்புறம் எனது வேலைகளில் மூழ்கிவிட்டேன்
  இரவு மக்கள் தொலைக்காட்சியில் நெடுமாறன் மறுத்தார்
  பிறகு அடுத்த நாள் காலை11மணிக்கு முக்கியமான விடுதலைப்புலிகளின் அன்புக்கு பாத்திரமான ஒரு நேர்மையான தலைவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அவர் சொன்ன தகவல்
  ஆண்டணிகூட இறந்திருக்க வாய்ப்பிருக்கிறது 
  பிரபாகரன்?... 
  கிட்டதட்ட 30 நாட்களுக்குமுன்பே சகபோராளிகளால் வலுக்கட்டாயமாக பாதுகாப்பான இடத்திற்க்கு அழைத்துகொண்டு செல்லப்பட்டுவிட்டார் தம்பி நலமாய் இருக்கிறார்
  அன்று நண்பகல் இரண்டு மணிக்கு தொடக்கத்தில் சொன்ன வட்டத்திலிருந்து ஒரு தோழர் எனக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தார்
  அது 
  We are sorry to inform that LTTE leader prabhakaran died 
  Breakingnews:Prabhakaranbodyfound
கிட்டதட்ட எல்ல தொலைகாட்சிகளும் அறிவித்துவிட்டது
  நிறைய அழைப்புகள் எனக்கு வந்தது ஆச்சரியமாய் இருந்தது
  எல்லா அழைப்பும் மிக பதட்டத்தோடும் அதில் பிரபாவின் மரணம் நிகழ்திருக்கக்கூடாது என்ற அக்கரையோடும் இருந்தது இதில் காங்கிரஸ்காரர்களும் உண்டு என்பதுதான் ஆச்சரியம்.
   நான் எல் டி டி யின் ஆதரவாளனுமல்ல. சொல்லப்போனால் நான் ஈபியின் ஆதரவாளானாய் ஒரு கட்டத்தில் இருந்திருக்கிறேன். கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘வேலிகள் தகர்த்து’ என்ற எனது நீள் கவிதை வெளியீடு புலிகளுக்கு எதிரானது
  இந்த அரக்கத்தனமான போர் தொடங்கும் வரை எனக்கும் புலிகளின் மேல் கடுமையான விமர்சனங்கள் உண்டு அதை அழைத்தவர்களோடு பகிர்ந்துமிருக்கிறேன் 
  பிறகு எப்படி இத்தனை அழைப்புகள்... 
  எதற்கு  இத்தனை அழைப்புகள்
  பிறகு மதியம் காந்திபுரம் சென்றுவிட்டு வருகிற வழியில் மீண்டும் அவர்களை சந்திக்கநேர்ந்தது
  இப்போது 
  மாலைமலரோடு TIMESNOW ம் 
  இப்பவாவது நம்பறீங்களா?
  அது சட்சாத் பிரபாகரன் மாதிரியே இருந்தது 
  பார்த்தவுடன் தெரிந்தது 
  மிகவும் இளமையான முகம்,
  மெழுகுபோல் பளபளவென்று அவ்வளவு அழகு,! 
  புலிகளுக்கு வயதாவதில்லை என்று சிங்கள அரசு அறிவித்தாலும் அறிவிக்கும்!
  அனேகமாய் அது 93 ல் எடுக்கப்பட்டிருக்கலாம்,! 
  அப்புறம் அவர் சமீப காலமாக மீசை வைப்பதில்லை
  இங்கே ட்ரீம் செய்யப்பட்ட மீசை 
  அப்படியே மீசையை விட்டிருந்தால் தாடியையும் விட்டிருப்பார்தானே
  எனக்குள் சின்னசந்தேகம் துளிர்விடத்தொடங்கியது
  இப்பவாவது நம்பறீங்களா?
  இல்லை !!!
  அரசாங்கமே சொல்லுகிறது...
  அரசு, குடும்பம் தனிச்சொத்து பற்றி ஏங்கல்ஸே வந்து சொல்லுவார்
  நீங்க எப்பதான் நம்புவீர்கள்?
  புலிகள் அறிவித்தால்.....
  அவர்கள் அறிவிக்க மாட்டார்கள்.....
  நானும் நம்பமாட்டேன் 
  நல்லதுதான் அஞ்சலிகூட்டம் நடத்தமாட்டீர்கள்... 
  அவர்பேச்சில் விசம் இருந்தது
  தோழர் நீங்கள் அவரது சாவை எதிர்பார்த்துக்காத்திருக்கிறீர்கள்... அதனால் நீங்கள் நம்பவேண்டியிருக்கிறது
  நீங்கள் எதிர்பார்க்கவில்லை ஆகவே நம்பமாட்டீர்கள்
  நான் சாதாரண மனநிலையில் இருந்து பார்க்கிறேன் என்னை நம்பவைக்கும் நம்பகத்தன்மை அந்த படத்தில் அந்த வீடியோ காட்சிகளில் இல்லை 
  அது என்ன சாதரண மனநிலை ? 
  சோவை ஆதரிக்கிறவர்கள் இப்படி ஒரு மனநிலையில் இருந்து பேசுவதை மறுக்கிறார்கள் என்பது முரண்நகை
  இல்லை நீங்கள் புலிகளின் தீவிர ஆதரவாளர் அன்னைக்கு அப்படித்தான் கருணாவின் பேட்டியை ஜெரக்ஸ் எடுக்க வண்டிகூட கொடுக்கமாட்டேன் என்று மறுத்தீர்கள்?
  (தினமலரில் வந்திருந்த கருணாவின் பேட்டியை ஜெராக்ஸ் எடுத்து சமரச சன்மார்க்க சங்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் விநியோகிக்க ஏற்பாடு செய்திருந்தனர்) 
  ஆம், மக்கள் மோசமாக செத்துக்கொண்டிருக்கும் போது அதை முன்னிறுத்தாமல் அது பற்றிய செய்திகளை வெளியிடாமல் புலிகளை விமர்சிக்கும் அப்பேட்டியை வெளியிடவேண்டிய அவசியம் என்ன? இது எந்தவகை அரசியல் ?
  ‘நீங்கள் என்னமோ சொல்லிக்கொண்டுபோங்கள் செத்தாச்சு பிரபாகரன் இனி அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது’ 
  தனிமனித கொலையும்   இந்த சமுதாயத்தை மாற்றுவதில் சிறிய பங்குவகிக்கும் என்று நக்ஸலைட்டுகள் நம்புவது தவறு என்ற கருத்தை வைத்திருக்கிற இவர்கள் இப்படி பேசுவது எந்த மேல் கட்டுமானம் என்று தெரியவில்லை 
  டைவட் ஆகுது.. சரி ரூட்டுக்கு வருவோம் 
  சரி தோழர் நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் அது இந்திய அரசுக்கு பேரிழப்பு..இந்திய அரசு அவர்களுக்கான ஒரு channel ஐ இப்பவரை ஓப்பன் செய்து 
  வைத்திருப்பார்கள் முற்றும் முழுதாக இந்தியா ராஜபக்ஸேவை நம்பியிருக்காது இலங்கைக்குள் தனது பொருளாதார விளையாட்டை தொடங்கியிருக்கும் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு counterஆக அங்கு இவர்களின் பலவீனப்பட்ட அல்லது இந்தியாவை சார்ந்திருக்கிற ஆதரவு சக்தி இருப்பதை விரும்புவார்கள்
  புலிகள்  அப்படி யாருக்கும் கைப்பாவையாய் இருக்காதவர்கள்,.அடங்கமறுத்து அத்துமீறுபவர்கள் ,மிக அர்பணிப்பு உள்ளவர்கள், தனதுமண் அடுத்த நாடுகளின் மார்கெட்டாக மாறுவதை அனுமதிக்காதவர்கள்.. 'இம்' என்று ஒருவார்த்தை சொன்னால் இப்போதே எல்லாமே தலைகீழ் ஆகிவிடும் ...
  அடுத்த கூட்டத்தில் வாய்ப்பிருந்தால் அதுகுறித்து விரிவாக பேசுகிறேன்
  இலங்கை அதிகாரிகளின் முரண்பட்ட பேட்டிகள்,
  ஒவ்வொரு நாளும் புது புதுசாய் பிரபகரனைக்கொல்வது,
  இன்ஸ்டண்ட் டி என் ஏ டெஸ்டுகள்,
  எனக்கு நம்பிக்கையில்லை இதில் சந்தேகங்கள் இருக்கிறது...
  புறப்பட்டுவிட்டேன்
  இன்று 21.5.2009
  நக்கீரன், இயக்கத்தின் தலைவர் உயிரோடு இருப்பதை 1000 மடங்கு நம்பகத்தன்மையோடு சொல்லியிருக்கிறது 
  எனக்கு இருக்கும் சந்தேகங்கள்
  1 30 நாட்களுக்கு முன்பே பாதுக்காப்பான பகுதிக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்ட பிரபா நக்கீரனின் கட்டுரைப்படி அங்கேயே எப்படி இருந்திருப்பார் 
  2 தேர்தலுக்கு முன்பு அறிவித்தால் முடிவுகள் பாதிக்கும் என்று ஆளும் கட்சிகள் நினைத்து வெளியிடாமல் வைத்திருந்தது என்று சொல்கிறார்கள் இதை வெளியிட்டால் தமக்கு சாதகமான முடிவு உறுதியாக கிடைக்கும் நிலையில் உள்ள ஆதரவு கட்சிகள் வெளியிட்டிருக்கலாம்தானே! அப்படி நடந்திருந்தால் நடேசன் இதைக்கூடவா சொல்லியிருக்கமாட்டார்?
  3 கருணா ராஜீவ்கொலை நடந்த சூழல் பற்றி ராகுலுக்கும் பிரியங்காவிற்கும் விளக்குவேன் என்று இப்பொழுது சொல்லுவானேன்?
  4 அம்பாரையில் சீனாவால் உருவாக்கப்பட்டிருந்த அல்லது சீனாவின் உதவியால் அமைக்கப்பட்டிருந்த கடற்படைதளம் ஒருமாதத்துக்கு முன்னால்புலிகளால் சுக்குநூறாக தகர்க்கப்பட்டது புலிகளோடு மேலும் வேறு யாருக்கு சாதகத்தை கொடுத்திருக்கும்?
  5 ஒரு வல்லாதிக்க அரசால் முன்னெடுக்கப்பட்டு, ஒரு பேரினவாத  அரசால் சனம் வேட்டையாடப்படுகிற போரில் ஒரு நேர்மையாளன் எந்தப்பக்கம் நிற்கவேண்டும், யார் சொல்வதை நம்பவேண்டும்? 
  அதே தோழர்கள் இக்கட்டுரையை முடிக்கும் முன்பு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியிருக்கிறார்கள்
  ‘PRABHAKARAN ALIVE I READ A NEWS IN NAKEERAN. IS IT POSSIBLE’ ?
  நானும் பதில் அனுப்பியிருக்கிறேன்
  அந்த பதில்...
  இதற்க்கெல்லாம் பதிலை பிரபாகரன் வந்து சொல்லுவார்