August 02, 2008

சிங்கிள் டீ


ஊரிக்கொண்டிருந்த அந்தஅதிகாலை
எல்லாவற்றையும்
காட்டிக்கொடுக்கிறது

ஒரு கிலோமீட்டருக்குள்

வான்முட்டும் கட்டிடங்களை
வாசலற்ற வீடுகளை
வீடற்ற வாசல்களை
குடிசைகளை

உடம்பிற்க்கு நடப்பவர்களை
நடக்க உடம்பில்லாதவர்களை

கடையின் தின்னைகளில்
உறங்கும் பைத்தியங்களை

இருட்டுக்குள்ளிருந்து ஒருத்தி புடவையை உதரி
அவளது நாளை உறுதிசெய்துகொண்டு

குயில் என்ன மயிருக்கு
இப்படி கூவவேண்டும்
சோடிய மரத்தில் இருந்துகொண்டு

July 30, 2008

மீளாத கணங்கள்



எஞ்சுருக்குபையிலிருந்து நிறய எடுப்பேன்
எல்லாமும் வெச்சிருக்கேன்
தொட்டுப்பாரு
உங்கயி
உங்காலு
***

எல்லாரும்
ஏந்தலக்குள்ளார உக்காந்து
மண்டைய இடுச்சு
மாவிளக்கு வெக்றாங்க
இப்பதா
செவுத்துல இடிச்சு
செங்கல்லாட்டம் கொட்டுனேன்

******
வயித்துக்குள்ளபோயி
வக்கப்போறாயா சூடு......
கொட்டாவுயுட்டாலே
கொட சாஞ்சுருவே
*********
வீட்டபுடுங்கி
வீதியிலபோட்டவ
கொலைய அறுத்து
கோவிலுக்கு கொண்டு போயி
மொளகா அரச்சு
மாசாணிதலையிளும்
எந்தலையிலும்

July 29, 2008

கூத்துக்கலைஞர்களுக்கு விஷம் கொடுத்துக் கொல்லுமா அரசு



ஒருத்தர்கிட்ட எதாவது வாய்ப்பு இருந்தால் அதைஎப்பிடிக்குப்பயன்படுத்துவது என்று யோசித்து பயன்படுத்திவிடுபவர்களுக்குமத்தியில் எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை தன் இலக்கியத்துக்கும்,உயிர்துடிப்பிற்க்கும் ரத்தமும் சதையும் தருகிற கூத்துக்குழுவிற்க்குஅர்பணித்துவிடுவதில் கில்லாடி 'மணல்வீடு ' பத்திரிக்கையின் ஆசிரியர் ஹரிகிருஷ்ணன்
அப்படித்தான் ஒருமாதமாக ஈவிரக்கமின்றி எனக்கு குடச்சல் கொடுத்துக்கொண்டே இருந்தார்‘நீங்க வந்து எங்க மக்கள் நடத்தும் கூத்தைஒருவீடியோபதிவுசெய்துகொடுக்கவேண்டும்’
'இருக்கிற பிக்கல் புடுங்கலில் இவன் வேற!
எனது இருப்பு ஆனைக்கட்டியாக மாறியதாலும் எங்கள் ஆவணப்படத்தின்படப்பிடிப்பு முழுக்க மேற்குதொடர்ச்சிமலையில் நடப்பதாலும் தப்பித்துக்கொண்டிருந்தேன்
மாங்கரை தாண்டினால் நாட் ரீச்சபுள்.....வீட்டுக்கு வந்தால் தான் ரீச்சபுள
ஹரிக்கோ .......................
அலுவலகம் போனால் தான் ரீச்சபுள...........
வீட்டுக்கு வந்தால் நாட் ரீச்சபுள்
அவர் வீட்டிலும் நான் அலுவலக்கத்திலும் மாறி மாரி ஒரு கண்ணாமூச்சிநடந்துகொண்டிருந்தது
இந்த கண்ணாமூச்சி முடிவுக்கு வந்தது கடந்த ஞாயிறு 11 ஆம் தேதி 5 மணிக்கேகூத்து நடக்கும் ஓலைப்பாளையம் சென்று விட்டேன்।வண்டியில் போகும்போதே 'இது கிராமம் மினிமம் பெசிலிட்டிதான் இருக்கும்அஜீஸ் பண்ணிக்குங்க 'என்று என்னை லார்ட் ஊட்டு கொளாப்புட்டாக்கினார்.அவருடைய நண்பர் வீட்டில் போய் டீயடித்துவிட்டு எனக்கு ப்பிடித்த காலேஜ்பீடியை கேட்கும்வரை இந்த லாபி தொடர்ந்தது

பின்னர் ஒரே கலாய்ப்புதான்
தலைவிரிக்கோலமாக வந்த ஒருவரைப்பார்த்து ‘இவன்தான் சேகர்’ முன்னால டெய்லரா இருந்தான் இப்போ கூத்துக்கலைஞனாகமாறிவிட்டான்
சேகர்தனது கொண்டையை அவிழ்த்துக்கொண்டே கைகுலுக்கினார்அவரோடு அதிக நேரம் செலவழிக்க முடிந்த்தது ஆனந்தமாயிருந்தது।கூத்துக்குள் பல புதுமைகளை புகுத்தும் ஆர்வம் கொப்பளிக்க பேசினார், ஆனால்புதிய கூத்துக்கு வரிவடிவம் கொடுத்து அவர்களை ப் பழக்கவைப்பது அவ்வளவுஎளிதான காரியம் அல்லகுறிப்பிட்ட வயதுடைய கூத்துக்கலைஞர்களின் உடம்பிலும் மூளையிலும்ஊரிப்போன அடவுகளையும் வசனங்களையும் பிரித்தெடுப்பது சரீரத்தின்பாகங்களை வெட்டியெடுப்பதற்க்கு ஒப்பானதென்றார் மேலும்கலைஞர்கள் எழுதப்படிக்க அறியாதவர்கள் ஆகவே இன்னும் சிரமம் என்றார்பெருசுகள் இசைக்கருவிகள் வைக்கிற மேசைக்கு பதிலாக ஏதாவது ஸ்டேண்டுமாற்றுவதற்க்கே அடம்பிடிக்கிறார்கள்புதுசாய் வந்த இளைஞர்கள் டேபிளை உயர்த்திக்காட்ட கல் எடுப்பதையேஒரு கவுரவப்பிரச்சனையாகவே பார்ப்பதாகவும் புலம்பினார்'அப்புறம் பாருங்க நான் டெய்ல்ரா இருந்தபோது பொண்ணுத்த்ர ரெடியாஇருந்தவங்க இப்ப மூஞ்யவே கட்டமாடீங்கறாங்க' என்று ஆதங்கப்பட்டார்“சாப்பாடு ரெடி, சாப்பிட்டு விட்டு வேசங்கட்ட ரெடியாகு” அவசரப்படுத்தினார் வாத்தியார்எனோ தயங்கியபடி என்னைப்பார்த்தார் சேகர்நான் ஹரிக்காக காத்திருந்தேன்பொதுவா கூத்து கலைஞர்களுக்கு வீட்டுக்கு வெளியிலேயோ?மாட்டுக்கொட்டகையிலேயோ! தான், இந்த உபச்சாரம் நடக்குமாம்இதற்கு சங்கடப்பட்டே அவன் என்னை அழைக்கத் தயங்கினான் என்று உணர்ந்தபோது எனோ மனசு கனத்தததுஒரு வார நிகழ்சியில் ஆர்க்கெஸ்ட்ரா சினிமா நடன நாட்டியம்ஆகியவை முடிந்து பெருசுகளுக்காகவே இதை ஏற்பாடு செய்ததாகஏற்பாட்டாளர் தெரிவித்தார்ஆனால் பொடிசுகள் ,பெண்கள் ,பெரிசுகள் என கிட்டத்தட்ட ஊரே கூடியிருந்ததுபத்துமணிக்கு களரிக்கூத்தோடு சேலம் சரஸ்வதி குழுவும் களரி அமைப்பும்வழங்கும் சராசந்திரன் பிறப்பு என்னும் தெருக்கூத்து தொடங்கியதுநிறைய தெருநாடகங்களில் பங்கேற்று வழிநடத்தியிருந்தாலும் ஒருதெருக்கூத்தை அன்றுதான் காணுகிற பாக்கியம் கிடைத்ததுஒவ்வொரு கதாபாத்திரமும் வந்து பாடலின் மூலமாகவே அறிமுகப்படுத்தியதுகோமாளி மாணிக்கம் வந்ததும் மைதானம் களைகட்டியதுஅவருடைய இரட்டை அர்தமற்ற ஜோக்குகளும் இரட்டை அர்தமுள்ள ம்க்கூம்இரட்டையாவது வெங்காயமாவது எல்லாம் நேரடியாக பச்சையாக உரிக்கப்பட்டவசனங்களுக்கு பெண்கள் பகுதியிலிருந்து பலத்த கரகோசமும் ஆதரவும் எனக்குஆச்சரியமாக இருந்ததுஅடுத்து காசிமாகாராஜனாக் வந்த கணேசன் நெருப்புப்பிழம்பாக கண்களை சுழட்டிஎழுந்துவரும்போது மிரண்டே போனேன்। அதுக்குன்னே பொறப்பெடுத்த மாதிரிநிஜ ராஜா இருந்தால் கூட இப்படியிருந்திருப்பாரா என்பது கொஞ்சம் சந்தேகமே।‘ஏன் ஹரி புல் தண்ணியாட்ருக்கு’ ‘'இல்லீங்க கூத்துமுடியுரவரைக்கும் தண்ணிய தொடமாட்டார் கண்ணுக்குள்ள மைதடவீட்டு வருவார் அதான்’பொற்பினியாக் சேகர் வந்தபோது பலத்த கரகோசம் அவர் பெண்ணாகவே மாறியிருந்தார்பெண்கள் முதல் குழந்தைகள்வரை அவ்ருக்கு பணம் குத்திவிட்டனர்ஒய்யாரக் குரலேடுத்து பாடியபடி செமத்தியாக வந்தார் அழும் காட்சிகளில் நிஜமாகவே அழுதார் சேகர் டோப்பாவிற்கு சம்மதிப்பதில்லை என்று சொன்னார் ஹரி¦சொற்பினியாக வந்த தட்சிணாமூர்த்திக்கு வயது 17 ஆக இருந்தாலும் தனது க்தாபாத்திரத்தை அழகாக முன்னிறுத்தினார் சராசந்திரனாக வந்த ரமேஷ் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு வந்த மாதிரி தெரிந்தது ।நடிப்பும, வேகமும், உடல்மொழியும் ,உரைவீச்சும, வார்ததைகளுக்குள் அடங்காத கட்டுப்பாடற்ற திறமைமைகளாள் நிலைகுலந்து போனேன்। சண்ட கெளசிகராக வந்த கோவிந்தசாமி வெகுவாக ப்பொருந்தினார் பார்வதியாக வந்த சுப்பிரமணி, சிவனாக வந்த கனகராஜ், மத்தளம் வாசித்தபெருமாள், குழல் ஊதிய சுப்பன் எல்லோரும் தன் பங்குக்குமேல் சாதித்தனர்

  • அற்புதமான உடல்மொழி!
    பழுத்த புலவர்களைப்போல் சீறும் வசனங்கள!
    தலைக்கனமில்லாத அணுகு முறை
    மக்களை கூத்தில் பங்கேற்க வைத்தல்
    உடனடி சமாளிப்புகள்
    வெளிப்படையான் காட்சி அமைப்பு

இப்படி அசாத்திய திறமைகளை வைத்துக்கொண்டு ஒரு எல்லைகளுக்குள் சுருங்கிக்கிடப்பத்ற்க்கு நாமும் ஒரும் காரணமாய் இருக்கிறோம் என்று குற்ற உணர்வு குத்தியது. அளப்பறிய அர்பணிப்பும், வேகமும் நடிப்பும் பலநேரங்களில் என்னை கேமராவை கையாளுவதிலின்றி விளக்கிவைத்தது
ராஜா தனது பத்திரம் முடிந்தவுடன் மிருதங்கம் அடிக்க வந்துவிட்டார் அவர்தோற்பாவைக்கூத்தும், பொம்மலாட்டம் கூட நடத்துவார் என்றுகேள்விப்பட்டபோது அதிர்ந்தேன்।எல்லோரும் இசைக்கருவிகளை கையாளுவது வியப்பாய் இருந்தது।கோமாளி தனது காட்சி இல்லாதபோது பார்வையாளர்களிடம் சென்றுபீடிவாங்கிகுடித்தபடி அவர்களது மனசை அளந்தது சூப்பர்।அதை விடவும்ஏற்பாட்டாளர் குறைந்த கட்டணத்தை தங்களைபுக் செய்திருக்கிறார் என்றுபாத்திரத்திலேயே கிண்டலடித்ததுதான் உச்சம்। கூத்து தொடங்கிய இரவு பத்துமணி முதல்கூத்து முடிந்த அதிகாலை ஆறு மணிவரை கூட்டத்தை தங்களது கூத்தால் கட்டிப்போட்டு வைத்திருந்தனர்। நிகழ்ச்சி முடிந்து பேருந்தில் ஏறும் வரை வினாடி ஓய்வில்லை எனறாலும்கூட
கடுகளவுகூட எனக்கு சலிப்பே வரவில்லை
மிகப்பெரிய ஒரு நாளை எனக்கு வழங்கிய அவர்களை தொழுதபடி மனமின்றி விடைபெற்றேன்
அவர்களுடைய வாழ்வு கூத்தில் இருக்கிறது
அதுதவிரவேறேதும் அறியாதவர்கள்
நம்மைப்போல் அல்லாமல் அவர்களுடைய வாரிசுகளையும் அதில் ஈடுபட வைக்கிறார்கள்
அதற்க்காகவே வாழ்வை அர்பணித்திருக்கிறார்கள்•

இவர்களைத்தத்தெடுக்கலாம்

இவர்களின் குழந்தைகளுக்கு கலைசம்பந்தமான படிப்புகளில் ஒதுக்கீடுதரலாம்•

இவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்சிகளில் வாய்ப்புததரலாம்

இல்லையென்றால் ஒரு குப்பி விஷம் வாங்கி எல்லோருக்கும் ஊத்திவிடலாம்

நீர்ச்சுழிகள்


புழுதிபடிந்த
கூரைகளில் நின்று
கரைந்துகொண்டிருக்கும் குருவிக்கு தெரிந்திருக்கிறது
மூச்சுக்காற்று

வயிற்றுக்கு
எதையும் செய்ததில்லை

எழுதிய அக்கி
நகர்ந்து
தேவதைகளாகி
காலத்தை
குடித்துத்தீர்க்கிறது
எரவாரங்களில் குடியிருந்துகொண்டு

எசகடவக்குதிரைகள்
இன்னும்
இரவுகளில்
இவ்வழியே ஓடிக்கொண்டிருக்கிறது

இன்னும்யாருக்கும் பிடிபடவில்லை

எருக்கம்பூவெடுத்து மாலையாக்கி
மரத்துக்குபோட்ட
ரகசியம்


நாக்கில் வந்து உட்கார்ந்து போகும்
எதிலும் ராமாப்பிள்ளைப்பாட்டிக்கு பங்கு உண்டு

இப்பவும்

February 13, 2008

ஆதாமின் பழமுதிர்ச்சோலை


மொழி பெயர்க்கப்பட்ட
அந்த ஒத்திகை
மூளைகளுக்குள் உட்கார்ந்து ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது
இன்னும்

அதிகாலை வெளிச்சத்தை
ஊடுருவிவந்த‌
அதிகாரம் சொட்டிய வார்த்தைகளின்
நாற்றம்
இன்னும்
மூக்குப்பொத்தி திரிகிறேன்

அடிபட்டுமரத்துப்போன
இருதயம்
மறுபடியும் வலித்தது

சுர‌ப்பிக‌ளின் ஊற‌லும்
ந‌ர‌ம்புக‌ளிட்ட‌ முடிச்சும்
சித‌றிய‌போது பிம்ப‌ங்க‌ள் த‌ந்த‌தும்

த‌னிம‌னித‌ சுத‌ந்திர‌த்தை விட‌வும் பெரிதில்லையே!

வ‌லைய‌ங்க‌ளுக்குள் நின்று
தாவுத‌ல்………..
த‌த்துத‌ல்…………….
ச‌ர்க்க‌ஸில் சாத்திய‌ம்
ந‌ம‌க்குமா?

நார்சிஸ் குள‌த்தில்
க‌ல்லெறிவ‌து
எல்லா க‌ட்ட‌த்திலும் ந‌ட‌ந்திருப்ப‌துதானே?

நிச்சயம் எனது
ஏதோவொன்றோ
எல்லாமுமோ
காயம் தந்திருக்கலாம்

என்ன‌ செய்ய‌
கால்க‌ளுக்கு சொல்ல‌லாம்
ம‌ன‌சுக்கு?
நானே முடியாது…..!

உங்களின்
தனிமனிதசுதந்திரத்தை
உங்களைவிடவும்
நேசிப்பதால்
விடைபெறுகிறேன்

குப்பைகளுக்காக‌
அசிங்கமான பரிசோதனைகளின் போதே
அந்நியம் உணர்ந்தேன்

உங்களுக்காக யாரையுமோ
யாரோவிற்காக‌
உங்களையுமோ
காட்டிக்கொடுக்க முடியாது

துரோகம் எனக்கு கைவந்த கலையல்ல‌ ...

உங்களுக்கான இடம் எனக்குள் எப்போதுமே....................

Footer