February 13, 2008

ஆதாமின் பழமுதிர்ச்சோலை


மொழி பெயர்க்கப்பட்ட
அந்த ஒத்திகை
மூளைகளுக்குள் உட்கார்ந்து ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது
இன்னும்

அதிகாலை வெளிச்சத்தை
ஊடுருவிவந்த‌
அதிகாரம் சொட்டிய வார்த்தைகளின்
நாற்றம்
இன்னும்
மூக்குப்பொத்தி திரிகிறேன்

அடிபட்டுமரத்துப்போன
இருதயம்
மறுபடியும் வலித்தது

சுர‌ப்பிக‌ளின் ஊற‌லும்
ந‌ர‌ம்புக‌ளிட்ட‌ முடிச்சும்
சித‌றிய‌போது பிம்ப‌ங்க‌ள் த‌ந்த‌தும்

த‌னிம‌னித‌ சுத‌ந்திர‌த்தை விட‌வும் பெரிதில்லையே!

வ‌லைய‌ங்க‌ளுக்குள் நின்று
தாவுத‌ல்………..
த‌த்துத‌ல்…………….
ச‌ர்க்க‌ஸில் சாத்திய‌ம்
ந‌ம‌க்குமா?

நார்சிஸ் குள‌த்தில்
க‌ல்லெறிவ‌து
எல்லா க‌ட்ட‌த்திலும் ந‌ட‌ந்திருப்ப‌துதானே?

நிச்சயம் எனது
ஏதோவொன்றோ
எல்லாமுமோ
காயம் தந்திருக்கலாம்

என்ன‌ செய்ய‌
கால்க‌ளுக்கு சொல்ல‌லாம்
ம‌ன‌சுக்கு?
நானே முடியாது…..!

உங்களின்
தனிமனிதசுதந்திரத்தை
உங்களைவிடவும்
நேசிப்பதால்
விடைபெறுகிறேன்

குப்பைகளுக்காக‌
அசிங்கமான பரிசோதனைகளின் போதே
அந்நியம் உணர்ந்தேன்

உங்களுக்காக யாரையுமோ
யாரோவிற்காக‌
உங்களையுமோ
காட்டிக்கொடுக்க முடியாது

துரோகம் எனக்கு கைவந்த கலையல்ல‌ ...

உங்களுக்கான இடம் எனக்குள் எப்போதுமே....................

No comments:

Post a Comment

Footer