May 23, 2010
லும்பினி குறித்த விவாதம்- முக நூலிலிருந்து பிளாக்கிர்க்கு
லும்பினி, நேபாள நாட்டின் கபிலவஸ்து மாவட்டத்தில் உள்ள ஒரு புத்தமத யாத்திரைத் தலமாகும். இது நேபாள - இந்திய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இவ்விடத்திலேயே அரசி மாயாதேவி, பிற்காலத்தில் ஞானம் பெற்றுக் கௌதம புத்தர் ஆன, சித்தார்த்த கௌதமரைப் பெற்றெடுத்தார். இவரே புத்த மதத்தைத் தோற்றுவித்தவர் ஆவார். புத்த மதத்தினரைப் பெருமளவில் கவரும் நான்கு புனித யாத்திரைத் தலங்களுள் லும்பினியும் ஒன்று. ஏனைய மூன்றும் குஷிநகர், புத்த காயா, சாரநாத் என்பனவாகும். லும்பினி இமய மலை அடிவாரத்தில் உள்ளது. இது கௌதம புத்தர் தனது 29 ஆவது வயது வரை வாழ்ந்ததாகச் சொல்லப்படும் கபிலவஸ்து நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. லும்பினியில், மாயாதேவி கோயில் உட்படப் பல கோயில்களும் புஷ்கர்னி எனப்படும் புனித ஏரியும் உள்ளன. இவ்வேரியிலேயே புத்தரைப் பெற்றெடுக்குமுன் மாயாதேவி மூழ்கி எழுந்ததாகக் கூறப்படுகிறது. புத்தரின் முதற் குளியலும்கூட இந்த ஏரியிலேயே இடம்பெற்றது. இங்கே கபிலவஸ்து அரண்மனை இடிபாடுகளையும் காணமுடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
Myilvannan Periyasamy
ReplyDeletesuper.....
Laksh Manan
ReplyDeleteஎந்த லும்பினியோடும் இதற்க்கு தொடர்பில்லை
வேறெங்கும் கிளைகள் கிடையாது
Elango Raghupathy
ReplyDeletewww.lumpini.in
இது வேற அது வேறே
ReplyDeleteபெளத்த நாடான இலங்கையிலிருப்பர் தலைமை கொடுப்பதால் இந்த லும்பினியோடு சம்பந்தமிருப்பதாக கருதிக்கொண்டாள் அது அடியேன் தவறில்லை
May 13 at 7:51pm ·
Elango Raghupathy
ReplyDeleteoh! appediya.....
May 13 at 8:17pm
Laksh Manan
ReplyDeleteஇளங்கோ உங்க //அப்படியா // எதோ ரெண்டு லும்பினிக்கும் தொடர்பு இருப்பது மாதிரி தொனிக்கிறதே
Kavin Malar
ReplyDelete@லக்ஷ்மணன்! புத்தர் பிறந்த இடம் என்பதால் தான் www.lumpini.in..
அக்கறையான விளக்கத்துக்கு நன்றி கவின்
ReplyDeleteஆனால் நிறுவனமயக்கப்பட எந்தமதமும் இருதியில் கோரத்தை நோக்கியே செல்லும்
புத்தம் இதற்க்கு விதிவிலக்கல்ல
... See More
ஆனால் இலங்கயில் பிறந்த ஒருவர் இப்படிப்பட்ட ஒரு பெயரை தேர்ந்தெடுப்பதை எப்படி பார்க்க
May 14 at 2:39pm ·
இலங்கையிலும் வருணாசிரம இந்து மதம் தானே தமிழர்கள் மத்தியில் செழித்தோங்கி இருக்கிறது. இந்தியாவாக இருந்தாலும், இலங்கையாக இருந்தாலும். இந்து மதத்தை வெறுக்கும் ஒருவருக்கு புத்தமதம் மாற்றாக தெரிவது நியாயம்தானே?
ReplyDeleteஇலங்கையின் அதிகாரபூர்வ மதம் அது என்பதால் அது சிங்களர்களுக்குரியது அல்ல. அதிகாரபீடத்தின் தவறுகளுக்கு மதம் என்ன செய்யும்? இலங்கையில் மட்டும் மதமில... See More்லை தோழரே! சீனத்தில்..ஜப்பானில்..என்று உலகம் பூராவும் பரவியிருக்கிறது. ஒரு மதத்தை ஒரே ஒரு நாட்டின் நிகழ்வுகளோடு பொருத்திப்பார்ப்பது நியாயமில்லை தோழர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பேசும் ஒருவருக்கு புத்தமதம் முற்போக்கான மதமாகவும் புத்தர் முற்போக்குவாதியாகவும், லும்பினி முக்கிய இடமாகவும் படுவதில் வியப்பொன்றுமில்லை.
May 14 at 2:57pm
Laksh Manan
ReplyDeleteம் பொருத்த்திருப்ப்போம் இந்த லும்பினி எங்கே போகிறதென்று
மதங்கள் அதிகார பீடத்தின் ஒரு காலாக நிற்க்குமே அல்ல்லாமல் இரண்டையும் வேறுபடூத்தி பார்க்க ஏலுமா
அப்ப்புறம் சோபா ஜப்பானில் இல்லைதானே
May 14 at 3:08pm ·
Laksh Manan
ReplyDeleteஈழத்தில் ஒடுக்கப்படுகிற தலித்துகள் பக்கம் புத்த மதம் ஆத்ஹரவாக செயல்படுகிறதா என யான் அறியேன் விளக்கினால் சந்தோசம்
May 14 at 3:10pm ·
Kavin Malar
ReplyDeleteமதங்கள் அபின் போன்றது என்ற மார்க்சின் கூற்றோடு ஒத்துப்போகிறேன் தோழர். மதங்கள் அழிக்கப்ப்ட வேண்டியவைதான். ஆனால் இந்து மதம் என்ற சனியனை தொலைத்து கட்ட இப்போதைகு புத்தமதத்தை கொண்டாட வேண்டியிருக்கிறது.
ஷோபாசக்தியின் எழுத்துக்களை, நாவல்களை, சிறுகதைகளை, கட்டுரைகளை வாசித்திருக்கிறீர்களா தோழர்! ஏன் கேட்கிறேன் என்றால் ஷோபாசக்தி குறித்த அவதூறுகளை மட்டுமே நிற... See Moreைய பேர் படித்திருக்கிறார்கள். அவருடைய எழுத்துக்களை படித்திருந்தால் இந்த கேள்வி உங்களுக்கு எழுந்திருக்காது என்று நான் நம்புகிறேன்.
ஒருவேளை வாசித்திருந்தால் விட்டு விடுங்கள். இல்லையெனில் “குண்டு டயானா” என்ற அற்புதமானதொரு சிறுகதை..
http://www.shobasakthi.com/shobasakthi/?p=233
May 14 at 3:15pm ·
Laksh Manan
ReplyDeleteஇல்லை நான் அவரை முழுமையாக அறிகிலேன் பின் சந்திக்கிறேன்
May 14 at 3:18pm ·
Ramasamy Duraipandi
ReplyDeleteநல்ல விவாதம் அன்பின் கவின்
காயப்படுத்தாத நல்ல எழுத்து
அன்பின்
துரை
May 14 at 7:39pm ·
சோபாசக்தியின் புதுவிசையில் வந்த கதை ஒன்று படித்திருக்கிறேன் நீலப்படம் குறித்து
ReplyDeleteMay 17 at 7:38pm ·
Laksh Manan
ReplyDeleteமகாபோதி சபை என்ற நிறுவனம்தான் லும்பினியில் சாலை மற்றும் கட்டுமானப்பணிகளை செய்துவருகிறது இது முழுக்க இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது இந்த சபை தமிழகத்திலும் சில ஒடுக்கப்பட்ட இயக்கங்களை குரிவைத்து அவ்வியக்கங்களை பலிகொண்டுவருகிறது இந்தநேரத்தில் லும்பினி எனக்கு பலத்த அதிர்வாயிருக்கிறது
May 17 at 8:06pm ·
Kavin Malar
ReplyDeleteலும்பினி நேபால் நாட்டில் இருக்கிறது. அங்கே எப்படி இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள ம்காபோதி சபை எப்படி அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறது என்பது புரியவில்லையே?
May 17 at 9:06pm ·
Laksh Manan
ReplyDeleteஎங்கோ இருக்கும்சில நிறுவனங்கள் இங்கே சிலகட்டுமானப்பனிகளை செய்வது இந்தியாவில் மட்டுமல்ல நேபாளிலும் சாத்த்யம்தானே அதுவும் ம் இலவசமாக செய்தால்யார் வேண்டாமென்று சொல்லுவார்கள் அதுவும் புத்தரின் பெயரில் செய்யும்போது
the Economic hit man படித்திருக்கிறீர்களா??
Kavin Malar
ReplyDeleteபடித்ததில்லை.. ஆனாலும் நீஙகள் இதற்கும் இணையத்திற்கும் முடிச்சு போடுவது சரியல்ல.
May 17 at 11:28pm ·
Laksh Manan
ReplyDeleteநான் முடிச்சுப்போடவில்லை கவின்
மேலே குறிபிட்டுல்லவிசயங்கள் தெரிந்த எல்லோருக்கும் இயல்பாக எழும் சந்தேகத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் அவ்வளவே
அப்புறம் இப்படிவிவாதிப்பது ஆரோக்கியமான விசயாமாக இருக்குமென்று நம்புவதாலும் ... See More
பல்வேறு உள்ளூர் பிரச்சனைகளுக்குள் ஒளிந்திருக்கும் நிரைய விசயங்கள் விவாதத்தின் மூலம் வெளிவந்தவை என்று அறிவதாலும்
எதயும் சந்தேகப்படுவது மார்கிசியர்கள் அடிப்படை என்பதாலும் தோண்டத்தூண்டுகிறது
உங்களைக் காயப்படுத்தியிருப்பின் மன்னிக்க
Kavin Malar
ReplyDeleteஇதில் காயப்பட ஏதுமில்லை லஷ்மணன். எதற்கு மன்னிப்பு போன்ற பெரிய வார்த்தைகள் ? வேண்டாமே!