May 13, 2007

பலிபீடம்

பகலைஅரித்தபடி
முன்னேரிக்கொண்டிருந்தது
கரையான்

ஆலமரத்தின் கிளைகளில் உட்கார்ந்திருந்த
வேதாளங்கள்
பீடிபுகைத்துக்கொண்டிருந்தது


இடுகாட்டுக்குட்டையிலிருந்து
மண்ணெடுத்துப்போன
அம்மாசையின்
பானைக்குள்ளிருந்து
கேட்டுக்கொண்டே இருந்தது
சாமக்கோடாங்கியின்
குடுகுடுப்பை சத்தமும்
சடாமினிகளின் சிரிப்பும்
ஒரு
இளம் பெண்ணின் கதறலும்
ஒரு குழந்தையின் அழுகையும்

மரணம் தனது கிளகளிலிருந்த்து
இலையொன்றை உதிர்த்தது

காடு
அதிர வெங்கச்சாங்கல்லில்
கருப்பன் சவரக்கத்திகளை
தீட்டுசத்தம்
வழக்கமானதாக இல்லாமலிருந்தது


கண்ணம்மாள் தன் பிள்ளையோடு
பண்ணாடிச்சிகளின் தீட்டுத்துணியை
கடைசியாய்துவைக்கப்போனாள்



நாகன் சிரிக்கும்சுவர்களுக்குள்ளிருந்து
வாழ்வின் சோகம் பிழிந்து
கோடித்துணியை நெய்து கொண்டிருந்தான்

அண்டரண்டா பட்சிகளின்
சத்தம் ஒரு பறையொலியாய்எழும்பி
குஞ்சுகளாய் பொரித்தது


யாருமில்லா சோளக்காட்டில்
அவர்களின் தினவுக்கு இறையான
அவளின் நினைவுகளோடு

வருமீனுக்காக
சுடுகாட்டில்
உட்கார்ந்து காத்திருந்தது
நிலவைக்கொத்தியபடி
ஒரு
மொண்டிக்கொக்கு

No comments:

Post a Comment

Footer