May 31, 2010

கோவையின் வரலாற்று முடிச்சும் கோவமூப்பனும் - ச பாலமுருகன் அணிந்துரையின் ஊடாக

வரலாற்றின் துவக்க காலத்தில் அந்த மலைகள் சூழ்ந்த கோவை வனப்பகுதியை கோவன் என்ற இருளன் தலைவன் ஆண்டு வந்தான் அவன் பெயரிலேயே கோவன் பதி என்று அழைக்கப்பட்டது சோழ மன்னனின் ஆட்சி விரிவாக்கத்திற்க்குவேண்டியும் சேர நாட்டின் படையெடுப்புக்கு ஒரு தாங்கு தளம் வேண்டியும், அவன் யாருக்கும் கெடுதல் செய்யாத பழங்குடி அரசன் மீது போர் தொடுத்தான் சோழனின் வன்முறையில் பழங்குடி அரசு வீழ்ந்தது கோவன் மூப்பன் அழிக்கப்பட்டான் தலைமையை பறிகொடுத்த அவன் குடிகள் அடர்வனங்கள் மிக்க மலைகளின் மேல் விரட்டப்பட்டனர் அவர்கள் இருள்சூழ்ந்த வனத்தில் பதுங்கிக்கொண்டனர் பழங்குடி தெய்வங்கள் மட்டுமே அங்கு மிஞ்சி நின்றது இயற்கையைச் சூறையாடும் சோழனின் வன்முறையை கண்டு அவள் கொதிப்புற்று அவனிடம் நியாயம் கேட்டது. இராஜதந்திரங்களை கற்றறிந்த சோழன், தெய்வத்துக்கு பலிகொடுத்து அவளை தன்னவளாக மாற்ற நினைத்தான். ஒவ்வொரு அரசும் அவளுக்கு புதுபுதுப்பெயர்கள் சூட்டியது. காலத்தின் சக்கரங்கள் சுழன்றடித்தது அவள் குடிகளை இழந்து அனாதையாய் நிற்பதாகவே உணர்ந்ததால் தொடர்ந்து அவள் தன் பழங்குடிகளைத் தேடிக்கொண்டே இருந்தாள். மலைகளில் பதுங்கிய தோல்வியுற்றவர்கள் மீது, வெற்றி பெற்றவர்கள் தொடர் பகைமை காட்டத்தொடங்கினர் பல்வேறுபட்ட முகங்களில் பல்வேறு தளங்களிள் அந்த போரும் வன்முறையும் இன்று வரை தொடர்கிறது

கோவன் பதி என்ற கோயமுத்தூரை குறிக்கும் பல அடையாளக்குறியீடுகளை நீக்கி வாசித்தால் உலக பழங்குடி வரலாற்றின் ஒரு பிரிக்க இயலாத கண்ணிதான் இருளனின் வரலாறும். வரலாற்றில் தோல்வியுற்றவர்களின் வரலாறுகள் வெளிவருவதில்லை வரலாறுகள் எப்போதும் வெற்றி பெற்றவனால் மட்டுமே எழுதப்படுகிறது தோல்வியுற்ற கோவமூப்பனின் வாரிசுகளின் வரலாறுகளை, வலிகளை, வார்த்தைகளில் வெளிப்படுத்தும் ஓர் அரிய முயற்சிதான் இக்கவிதைத் தொகுப்பின் ஒரு பகுதி

பழங்குடிகளின் தாய்மொழியில் அவன் கோபப்படவும் கொலைவெறியைக் காட்டவும் அழவும், ஆனந்தப்படவும் முடியுமென்றால் அந்த வெளிப்பாடு வீரியமிக்கது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மொழிகள் இன்று உயிரோடு உள்ளது ஆனால் பல, நாள்தோறும் வெற்றிபெற்றவர்களின் மொழிவருகை வாயினுள் வீழ்ந்து செரிக்கப்படுகிறது இருளர்களின் மொழியும் இதற்க்கு விதிவிலக்கல்ல

இப்பழங்குடிளின் மொழிகளை பாதுகாக்க நம்மிடம் எந்தத் திட்டமும் இல்லை மேலும் பாதுகாக்க வேண்டிய தேவையைப்பற்றியும் நம்மிடம் எந்த அக்கறையும் இல்லை தோல்வியுற்றவனின் மொழிகள் மீது யாருக்குதன் கரிசனம் வரும் ஆனால் கவிஞர் லட்சுமணன் அதனை தன்னால் முடிந்த அளவு பதிவு செய்துள்ளார்

பழங்குடி வாழ்கையில் மொக்கே என்ற மலைகள் காணுயிர்கள், யானைகள், மனிதர்கள் எல்லாம் ஒரே நிலைதான் மனிதனுக்கு அவஃறிணையும் யானைக்கு உயர்திணையும் வழங்கவேண்டிய செம்மை இலக்கணம் பழங்குடிகளுக்கு தெரியாது எனவே தன்னை போலவே காணுயிர்களை காண்கிறான். சாமிகூட அவனுக்கு அதுபோன்றதுதான்

பழங்குடிகளின் வாழ்க்கையில் எங்கும் நிறைந்திருக்கும் தொன்மங்கள் அவர்களுக்கு நம்பிக்கை தருபவை இத்தொன்மங்கள் அவர்கள் வார்த்தைகளில் பின்னிப்பிணைந்து வெளிப்படுபவை. முயல்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு அருகில் வந்து புல் கடிப்பதும்,சகுனா குருவி கத்துவதும் செம்போத்து குறுக்கே போவதும் பாம்புகளை காண்பதும் துர் சகுனகுறிகள், பெருமாட்டி குருவி கத்துவது, இருளத்தொடங்கும் நேரத்தில் வாசலில் வந்து கிளி கத்துவது நல் சகுன குறிகள் என்ற பல்வேறு தொன்மங்களின் தொடர்ச்சிகள் இக்கவிதைகளில் வெளிப்பட்டுள்ளது

ஒருவட அமெரிக்க செவ்விந்திய பழங்குடிகதை ஒன்றில் ஒரு கிழவனும், அவன் மகளும் தனித்து பூமியில் விடப்பட்டார்கள் கிழவன் பூமிக்கு கீழ் இருக்கும் உலகத்திலிருந்து ஆவிகள் வந்து புதைக்கப்பட்ட எலும்புகளில் இரவு புகுந்து பகலில் மறைந்து ஓடிவிடுவதைக்கண்டான் எலும்புகளைத்தோண்டி தனது மரத்தால் செய்த கூடையில் பெரும் இடருக்கு பின் எடுத்துவந்து அதை பூமியில் வீசி எறிந்தனர் புதைந்தவர்களின் ஆவிகளிலிருந்து அவர்கள் தங்கள் எலும்புகளில் புகுந்து மீண்டும் உலக்குக்கு வந்தார்கள் என்று உள்ளது அது போன்று இருளர்களின் தலைவனான கோவ மூப்பன் எலும்புகளில் தசை வைத்து உயிர் பெற்று தன் காடுகளையும் தன் குடிகளின் வாழ்வையும் முடமாக்குபவர்களை பழிவாங்க வருகிறது என்று கவிஞர் லட்சுமணன் கூறுகிறார்

இக்கவிதை தொகுப்பில் பிற தமிழ் கவிதைகளும் முக்கியமானவை. தன்னை சுற்றி நிகழும் அரசியலை உள்வாங்கிக்கொள்ளும் ஒரு உயிர்ப்பு மிக்க மனநிலையுடன் இக்கவிதைகள் இயங்குகின்றன க்யூ பிரிவு போலீஸ், ,என்கவுண்டர் கொடுமைகள் போன்றவை தமிழில் அதிகம் வரவேண்டியது

கோவை நகரம் சந்தித்த கொடூரமான காயங்களில் ஒன்று இந்து மதவெறியின் அரசியலும் அதன் எதிர்வினையான குண்டுவெடிப்புகளும், பிற வன்முறைகளும். ஒடுக்கப்பட்ட தலித் மக்களையும் அவர்களைப்போன்ற முஸ்லீம்களையும் இந்த கோர மதவெறி அரசியல் எதிரிகளாக்கி குளிர்காய்ந்தது ‘’நேற்று வரை பிரியாணி தந்தவனின் கைகளை வெட்டித்தின்றது கலவரம்’’ என்ற கவிஞனின் எதிர்வினையும் பிற கவிதைகளும் ஆற்றல்மிக்க சமூக அக்கறையுள்ள படைப்பு மனநிலையின் வெளிப்பாடுகள். என் இனிய நண்பரின் கவிதைகளுக்கும் வாசகர்களுக்கும் என் வாழ்த்துக்கள்
அன்புடன்
ச பாலமுருகன்
ஒடியன் கவிதை தொகுதியின் அணிந்துரைக்காக

May 23, 2010

ஓர் அமைச்சரின் உதவியாளரோடு ஒரு இரவும் இரண்டு பகலும்

வெள்ளிக்கிழமை ஒரு தொலைபேசி

வணக்கம், லட்சுமணனா?

ஆமாம்

சோளகர் தொட்டி பாலமுருகனிடம் பேசினேன் ......அவர் உங்கள் எண் கொடுத்தார் .......ஒடியன் புத்தகம் உங்களுடையதா?

மக்களுடையது நான் பதிவு செய்திருக்கிறேன்

நீங்கள்?

நான் நீலகிரிதொகுதி பாரளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவின் அரசியல்

உதவியாளர் லட்சுமணன் பேசுகிறேன்

சொல்லுங்கள்

உங்கள் புத்தகத்தையும் குறிப்புகளையும் படித்தோம்

அவை சரியா என அப்பகுதி ஆசிரியரை படிக்கச்சொல்லி விசாரித்தோம்

ம் சொல்லுங்க

அவை அத்தனையும் சரி இன்னும் நீங்கள் கடுமையை குறைத்து பதிவு செய்திருக்கிறீர்கள் என்றார்

அமைச்சர் கூடுதல் அக்கறையோடு அவர்கள் பிரச்சனையை கவனிக்கச்சொல்லி இருக்கிறார்

உங்களை சந்தித்து பேச விரும்புகிறேன்

சரிங்க சந்திப்போம்

சந்தித்தோம் இது குறித்து ஆழமான உரையாடல் நடத்தினோம்

பத்து கிராமத்திற்க்கு ஒரு முதல் உதவி ஆரம்ப சுகாதாரம் உருவாக்குவது

நீரில் புளூரைடு அளவை சரி செய்வது

குழந்தைக்களுக்கு இரட்டை கல்வி வழங்க குழந்தைகள் அதிகமுள்ள கிராமங்களில் மாலை வகுப்புகளை அறிமுகம் செய்வது

மாதம் ஒரு முறை குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சிகள் நடத்துவது

பத்தாம் நிலை மற்றும் 12 ஆம் நிலை மாணவ மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பை ஏற்பாடு செய்வது

இளைஞர்கள் நிறைய வேலையின்றி இருப்பதால் அவர்களுக்கு வேலை வாய்ப்புள்ள இடங்களை கண்டரிந்து வாய்ப்புகள் ஏற்படுத்துவது

இடையில் பல்வேறு காரணங்களால் பத்தாம் வகுப்பு மற்றும் பணிரெண்டாம் நிலையில் விடுபட்ட
மாணவ மாணவிகளுக்கு மேல் படிப்புக்கான பயிற்சி மையம் ஏற்படுத்துவது

பணிரெண்டாம் நிலையோடு படிப்பை கைவிட்டவர்களுக்கு தொலைதூரக்கல்விகளுக்கு வசதி ஏற்படுத்தி தருவது

5 கிராமங்களுக்கு ஒரு கணிணிமையம் ஏற்படுத்துவது

மின்சாரம் இன்னும் இல்லாத கிராமங்களில் மின்வசதி ஏற்படுத்துவது

சூரி ஒளி வேலிகள் மூலம் அவர்கள் விவசாயத்தை பாதுகாப்பது

விதைவங்கிகள் உருவாக்குவது

கிராமங்களுக்கென ஒரு ஆட்டுபண்ணை அமைப்பது

தேனி வளர்ப்பில் பயிற்சியும் ஆய்வு மையமும் ஏற்படுத்துவது

இனச்சான்றுகள் முழுமையாக கொடுக்க முயற்சி எடுப்பது

·அவர்களுக்கான பாரம்பரிய தலைமத்துவத்தை நிலைநாட்ட முயல்வது

அவர்களின் பண்பாட்டை காப்பது

வனச்சட்டம் 2005 ன் அமுலாக்கப்பணிகள் பற்றி..........

இதில் அவர்கள் அதிகாரத்துக்குட்பட்ட அனைத்தையும் செய்யத்தயாராக இருப்பதாக தெரிவித்த கையோடு அப்பகுதிகளுக்கு ஒரு நாள் பயணம் செல்ல முடியுமா ?என்றார்

தாராளமாக....

14.5.2010 மற்றும் 15,10,2010 வெள்ளி சனிக்கிழமை முடிவானது

முதலில் அத்திக்கடவை தாண்டி சிறு கிணறு இறங்கியதும் அறிமுகத்துக்கு பின் அவர் மக்களோடு அக்கறையோடு விசாரணை செய்தார் அவரது அக்கறை எனக்கு ஆச்சரியமாயிருந்தது அது நிச்சயமாக ஓட்டுப்பொறுக்கும் மனநிலையிலில் இருக்கவில்லை

தோண்டை

வேப்பமரத்தூர்

சுண்டைப்பட்டி

நெல்லிமரத்தூர்

வேப்பமரத்தூர்

பில்லூர் டேம்

14 ம் தேதி பயணம் முடித்து

பில்லூர் ஓய்வு இல்லத்தில் இரவை கழித்தோம் அதிகாலை ஆறு மணிக்கு சில ஊராட்சித்தலைவர்கள் அவருக்காக காத்திருந்தனர்

இவர்களுக்கு எப்படி தகவல்?

நாந்தான் அழைத்திருந்தேன் என்றவர் அவர்களோடு இப்பிரச்சனைகளை குறித்தும் அதிலிருக்கும் முட்டுக்கட்டைகளையும் ஆலோசித்தார்

  • யானைப்பள்ளம்
  • சொரண்டி
  • கொரவன்கண்டி
  • புதுக்காடு

புதுக்காட்டிலிருந்து கூடப்பட்டிக்கு செல்லும் 8 கிலோ மீட்டர் அடர்காட்டுப்பகுதியில் ஒரு யானைக்கூட்டத்திடம் சிக்கி தடுமாறி கூடப்பட்டியை 7 மணிக்கு அடைந்தோம் அங்கே காட்டெருமைகண்டு திடுக்கிட்டோம் சமாளித்து

அரக்கடவை அடையும்போது மணி 8.30

சாதரணமாக சொல்லிவிட்டாலும் இந்த ஊர்கள் அடர்ந்த அத்துவானமான வனத்துக்குள் இருப்பவை எல்லாவிதமான ஆபத்துகளும் நிறைந்தவை

இந்த இரண்டு நாளில்

கோவைக்கு குடி நீர் அளிக்கும் பில்லூர் டேமின் அருகில் வசிக்கும் ஆதிவாசிமக்கள் குடி நீர் இல்லாமல் தவிக்கின்ர நிலையை பார்த்து ஆதங்கப்பட்டார்

மின்சாரம் தயாரிக்கும் பிளாண்ட்க்கு அருகில் இருந்தும் மின் விளக்கு காணத கிராமங்களை பார்த்து அதிர்ச்சியானார்

நிலத்தில் முதலீடு போட்டு விளைந்தபின் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஆதிவாசியை ஒட்டாண்டியாக்கும் நிலைகண்டு பதறினார்

பத்தாவது படிக்கும் ஆதிவாசி குழந்தைகள் ரிசல்ட்டை காரணம் காட்டி பாதியில் நிறுத்தப்பட்டவர்களிடம் சந்திந்த்து உரையாடினார்

சாதி சான்றிதழ்கிடைக்காமல் மேல்படிப்புக்கு செல்லாமல் வீட்டில் காத்திப்போரிடம் கலந்துரையாடினார்

இப்படி முழுக்க அவர்களிடம் நல்ல அன்போடு இருந்தார்

ஆதிவாசி கிராமங்களில் இரண்டு நாள் முழுதும் இருந்து அவர்களுடைய பிரச்சனைகளை பேசியும் உடனுக்குடன் அதிகாரிகளிடமும் பதிலைப்பெற்று மக்களிடம் அளித்தார்

வனத்துறை அலுவலரை சந்தித்து உரையாடினார் .முகத்திற்க்கு நேராகவே கேட்கத்தயங்கும் சில கேள்விகளை கேட்டு அவரை அதிர்சிக்குள்ளாக்கினார் மின்துறை தலைமை அதிகாரியை தொடர்புகொண்டு மின்சாரம் வழங்குவதில் உள்ள சாத்தியங்கள் குறித்து உரையாடினார்

எல்லாம் முடித்து எம் பியின் அலுவலகத்தை அடைந்து அமைச்சரின் நேர்முக உதவியாளர் ஆ.நடராஜை சந்திக்க ஏற்பாடு செய்தார்கள்

அவர் மிகவும் அக்கறையோடு இவற்றை கேட்டுக்கொண்டு இவற்றை தொடர்ந்து

எனக்கு நினைவுபடுத்துங்கள் ...என்ன பிரச்சனை? யார் அதிகாரி ?அவருடைய எண் இது மூன்றும் போதுமானது எனக்கு

தினம் இப்படி ஒரு காரியம் செய்தாலே மனதுக்கு நிம்மதியென்றார்

விடைபெற்றேன்

17 ஆம் தேதி மீண்டும் அரசியல் உதவியாளர் லட்சுமணனிடமிருந்து தொலைபேசி அழைத்தது

மின் வாரியத்திடம் பேசியாச்சு அவர்கள் சம்மதித்துவிட்டார்கள் கேரளமின்துறை அமைச்சருக்கான கடிதம் அனுப்பியாயிற்று அப்புறம் நம்மால் முடிந்த இடங்களில் மின்சாரம் தரவும் ஆணைகள் தயாராகிட்டு ருக்கு ,அவர் செயல்பாடுகளை பட்டியலிட்டார்

அவருக்கு நன்றி சொல்லும் முன்பே எனக்கு நன்றியென்றார்

தொடர்ந்து தொடர்பிலிருந்து என்னென்ன பணிகள் நடந்துகொண்டிருக்கிறது என்பதை பகிர்ந்துகொண்டிருக்கிறார்

நான் இன்னும் பிரம்மிப்பிலிருந்து விடுபடவில்லை

லும்பினி குறித்த விவாதம்- முக நூலிலிருந்து பிளாக்கிர்க்கு

லும்பினி, நேபாள நாட்டின் கபிலவஸ்து மாவட்டத்தில் உள்ள ஒரு புத்தமத யாத்திரைத் தலமாகும். இது நேபாள - இந்திய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இவ்விடத்திலேயே அரசி மாயாதேவி, பிற்காலத்தில் ஞானம் பெற்றுக் கௌதம புத்தர் ஆன, சித்தார்த்த கௌதமரைப் பெற்றெடுத்தார். இவரே புத்த மதத்தைத் தோற்றுவித்தவர் ஆவார். புத்த மதத்தினரைப் பெருமளவில் கவரும் நான்கு புனித யாத்திரைத் தலங்களுள் லும்பினியும் ஒன்று. ஏனைய மூன்றும் குஷிநகர், புத்த காயா, சாரநாத் என்பனவாகும். லும்பினி இமய மலை அடிவாரத்தில் உள்ளது. இது கௌதம புத்தர் தனது 29 ஆவது வயது வரை வாழ்ந்ததாகச் சொல்லப்படும் கபிலவஸ்து நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. லும்பினியில், மாயாதேவி கோயில் உட்படப் பல கோயில்களும் புஷ்கர்னி எனப்படும் புனித ஏரியும் உள்ளன. இவ்வேரியிலேயே புத்தரைப் பெற்றெடுக்குமுன் மாயாதேவி மூழ்கி எழுந்ததாகக் கூறப்படுகிறது. புத்தரின் முதற் குளியலும்கூட இந்த ஏரியிலேயே இடம்பெற்றது. இங்கே கபிலவஸ்து அரண்மனை இடிபாடுகளையும் காணமுடியும்.

May 22, 2010

கூப்பிடுவது எமனாகவும் இருக்கலாம்-வா மு கோமுவின்

நேற்று இரவு கோவையில் ஒரு கூட்டத்திலிருந்து வந்தேன் ஜெயக்குமார் கடலையில் ஆழ்ந்திருந்தார் பாம்ஸ், மயில் எல்லாம் ஒரு திருமணத்துக்காக மதுரையில் இருந்தார்கள் நமக்கு சம்பந்தமிலாத விஷயமென்று இப்படி பலதிருமணங்களை சொல்லாமல் டீலாவில் விட்டுவிடுவார்கள். நண்பர் செந்திலின் திருமணத்தையும் அப்படியே விட்டுவிட்டார்கள் சொன்னாலும் நான் போவேன் என்பது நிச்சயமல்ல ஆனால் அந்த fuel கடன்கழிக்கவாவது போய்ருக்கனும்

வெறுமை அறையிலிர்ந்த உடைந்த சேரின் மேல் உட்கார்ந்து தம்மடித்துக்கொண்டிருந்ததது ஏதாவது மனம் அரிக்கத்தொடங்கியது. தட்டுப்பட்டது வா மு கோமுவின் கூப்பிடுவது எமனாகவும் இருக்கலாம் சரி வீடுபோய்ச்சேர்ந்ததும் கருமாந்திரம்புடித்த மாத்திரையை முழுங்கிவிட்டு புத்தகத்தை எடுத்தேன்
அம்புட்டுதான் சாரயம் மாதிரி பத்திகிச்சு

புத்தகத்துக்குள்ளிருந்து ஏதோ உருவங்கள் கரப்பான் பூச்சிபோல் இறங்கி ஓடியது. அது கரப்பான் பூச்சியாய் இருக்க வாய்ப்பே இல்லை கரப்பானோ, பாச்சையோ இருமுவதற்க்கு வாய்ப்பில்லை எனது மனது ஊறத்தொடங்கியது ஆனால் தேட மனதில்லை அப்படியே கட்டிலில் படித்தவாறு படிக்கத்தொடங்கினேன்

தன் உடைகளையும் தோலையும் உரித்துப்போட்டுவிட்டு நிர்வாணமாயிருந்த அவரது நாவல் என்னை படாதபாடு படுத்தியது துண்டுதுண்டாய் அக்குஅக்காய் எங்கிருந்துவேண்டுமானாலும் படிக்கச்சொல்லி எங்கிருதோ ஒரு குரல் கேட்டுக்கொண்டேயிருந்தது பல்லிகளுக்கு மனச்சிதைவு ஏற்படுமாஎன்று ருத்திரன் வந்து சொன்னால் நல்லயிருக்கும்

அதை அதட்டிவிட்டு ஒரு நேர்கோட்டில் படித்துக்கொண்டிருந்தேன் அப்புறம் 120 ம் பக்கம் கைடைசி பேராவிலிருந்து தொடங்கினேன் அப்புறம் கடைசியாய் அவருடைய முன்னுரை படித்துவிட்டு மூத்திரம் போய் இதுவரை சொல்லிவந்த பக்கங்களை தின்று தண்ணிகுடித்தேன் மணி இரண்டாகும்போது நாவல் இருதியில் வந்து கோமு கைகுழுக்கிவிட்டு தம்கேட்டார் திரும்ப்பிப்பார்த்தேன்

அங்கே நீட்சே, பிராய்டு பிளாட்டோ ஒரு கவிஞி ஷராஜ் அகப்பேய் சித்தர் செக்ஸ்வைத்தியர் சிவராஜ் எல்லாம் தண்னியத்துக்கொண்டிருந்தார்கள்

வக்காளி உன்னாலதான் இப்படி புத்தி கெட்டுப்பாயிட்டான் ராசமைந்தன் என்று நீட்சே பிராய்டை திட்டிக்கொண்டிருந்தார்

உன் ஜருதுராஷ்டிரன் ஜட்டியோடவந்து அவமுன்னால நின்னதுதான் இத்தனைக்கும் காரணம்

சண்டை முற்றிப்போய் எல்லோரும் அடித்துகொண்டு குற்றாயிரானபின் அவர்களை கோமு சாந்தமணியைப்போல் தின்னத்தொடங்கினார்

ஏப்பம் விட்டுவிட்டு தனது குறியை அறுத்து வெளியில் கத்திக்கொண்டிர்ந்த பூனைக்கு போட்டுவிட்டு எங்கேயோ நடந்துபோனார்

கோமு...

என்ன?

என்ன இது

குறிகளற்ற சமூகம் உனக்கும் எனக்கும் விடுதலையதரலாம்

முயன்றுபார்

ஏன் இப்படி

ஆம் நீ எங்கிருந்து தொடங்கவேண்டும் எங்கிருந்து முடிக்கவேண்டும் எனபதை ஹறிகிருஷ்ணன் முடிவு செய்யமுடியாது எட்கர் தாஸ்டன் வேண்டுமானால் முடிவு செய்யலாம்

வேண்டுமானால் சுதீரை கேட்டுப்பார்

பாலியல் அந்தரங்கங்கள் ரகசியத்திலிருக்கும்வரை இங்கே பீடங்கள் உருவாகும் அது அம்பலத்திலேயே இருக்கும்போது பீடங்கள் உருவாகாது

தான் நிறங்கள் பெற்றிருந்த சனிக்கிழமைகளை மாதங்கள் தின்றுவிட்டதாய் புகார்தரமுடியாது எந்த ஆண்டுகளிடமும் பாலை நிலவா

விஜயமங்கலத்துக்காடுகளில் கழட்டிப்போட்ட ஆணுரைகளுக்குள் கிடக்கின்ற ஆட்களின் அதிகாரம் உயிர்பெற்று வீதிகளிகலிருந்து எதிர்பட்ட விக்டரை ஏன் என்று கேட்கிறது

மகேஸ்வரி காத்திருக்கும் பெஞ்சுகளில் யாரோ ஒரு குறியை வரைந்துவிட்டது சின்னபப்பாவுக்கு பிரச்சனையாய் இருக்காமல்போனதற்க்கு மருத நாய் எப்படி காரணமாகமுடியும் அந்த அல்சேசன்வேண்டுமானால் விலைவாகலாம்

கடைசியாய் எப்படியோ கொ மு ச ஈஸ்வரன் வந்து எல்லாத்தையும் தன் துண்டுக்குள் போட்டு எடுத்துகொண்டுபோகயில் நீட்சே கத்தினான்

டே தாயோளி ராசமைந்தா நீ மட்டும் தப்புச்சிட்டியே

தொடர்புகளுக்கு
உயிரெழுத்து பதிப்பகம்

May 16, 2010

PUCL

கட்டுரையாளர் - ச பாலமுருகன்
தஞ்சாவூர் மாவட்டம், வடசேரி கிராமத்தில் இயங்கும் M/s Kings India Chemicals Corporation Ltd என்ற தனியார் தொழிற்சாலை, அந்த ஆலையின் வளாகத்திலேயே புதிதாக சாராய ஆலை ஒன்று அமைப்பது தொடர்பாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், பாதிப்புக்கு உள்ளாகும் உள்ளூர் மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்தை, கடந்த ஏப்ரல்-9, 2010 அன்று, Kings ஆலையின் வளாகத்தில் நடத்த ஏற்பாடு செய்திருந்தது.
நிலத்தடி நீர் வற்றி விடும் அபாயம், ஆலையின் கழிவு நீரால் வரும் ஆபத்து மற்றும் நீராதரங்கள் மாசடையும் வாய்ப்பு ஆகியவற்றை காரணங்காட்டி உள்ளூர் மக்கள் இந்த சாராய ஆலை, வடசேரியில் வருவதை எதிர்த்துக் கொண்டிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை, Kings ஆலையின் வளாகத்திலேயே நடத்துவது எந்த விதத்திலும் சரியில்லை என்றும், அப்படி நடந்தால் வெளியாட்கள் மூலம் வன்முறை நடக்கும் அபாயம் உள்ளது என்றும் கூறி, 300க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள், கருத்துக் கேட்புக் கூட்டத்தை வேறிடத்திற்கு மாற்றச் சொல்லி, மாவட்ட நிர்வாகத்திடமும், தமிழக அரசிடமும், இது தொடர்பான மற்ற அரசுத் துறைகளிடமும் எழுத்துப் பூர்வமான கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், இவற்றுக்கு செவி சாய்க்காமல் மாவட்ட நிர்வாகம், Kings ஆலையின் வளாகத்திலேயே பொது விசாரணையை ஏற்பாடு செய்தது.
வடசேரி கிராம மக்கள் பயந்தது போலவே, ஏப்ரல்-9, 2010 அன்று,ஆயுதங்களுடன் வந்திருந்த வெளியாட்கள், உள்ளூர் மக்களை கடுமையாகத் தாக்கினர்.இதனால், உள்ளூர் மக்களில் பலர், பலத்த காயமடைந்தனர். கிராம மக்கள் முறையிட்ட பிறகும், அங்கிருந்த காவல் அதிகாரிகள், வெளியாட்கள் வருவதை தடுக்கவோ, வன்முறையை அடக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள் மீது தடியடி (லத்தி சார்ஜ் ) நடத்தினர். பெண்கள் கூட கடுமையாகத் தாக்கப்பட்டனர். கண்டனத்துக்குரிய வகையில், மனித உரிமைகள் மீறப் பட்டிருக்கின்றன.
சமீப காலமாக, சுற்றுச் சூழல் தொடர்பான பொது விசாரணைக் கூட்டங்களில், பாதிக்கப்படும் மக்கள் தங்கள் கருத்துக்களைக் கூறமுடியாத வகையில், கம்பெனிகள் வெளியாட்களைக் கொண்டு வந்து மக்களை அடக்கும் போக்கு அதிகரித்துக் கொண்டிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. இந்த பின்ணணியில், ஏப்ரல்-9, 2010 அன்று வடசேரியில் நடந்த சம்பவங்கள் பற்றிய உண்மையான தன்மையை அறிய PUCL-உண்மை அறியும் குழு கடந்த ஏப்ரல் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் வடசேரி சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் பாதிக்கப் பட்டவர்களிடமும், பெண்கள் மற்றும் முதியோர்களிடமும், குறிப்பாக பஞ்சாயத்துத் தலைவர். திரு. இன்ப மூர்த்தி, துணைப் பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோரிடமும் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரித்தது.
இந்த உண்மை அறியும் குழுவில் கீழ் கண்டோர் இடம் பெற்றிருந்தனர்:
முனைவர். வீ.சுரேஷ், வழக்கறிஞர் மற்றும் தலைவர்,சென்னை, PUCL-தமிழ்நாடு
ச.பாலமுருகன், வழக்கறிஞர் மற்றும் பொதுச் செயலாளர், பவானி, PUCL-தமிழ்நாடு
பேராசியர். கோச்சடை, சிவகங்கை, PUCL-தமிழ்நாடு
எஸ். கிருஷ்ணன்,வழக்கறிஞர், சிவகங்கை, PUCL-தமிழ்நாடு
ஸ்வேதா நாராயணன், சுற்றுச் சூழல் ஆர்வலர், சென்னை
தஞ்சாவூர் மாவட்ட SP, டாக்டர். செந்தில் வேலனையும், DRO. திரு. கருணாகருனையும் சந்திக்க PUCL-உண்மை அறியும் குழு முயற்சி செய்தது. ஆனால், SP, தஞ்சாவூரில் இல்லாத காரணத்தினாலும், DRO, மீட்டிங்கில் இருந்த காரணத்தினாலும், இருவரையுமே அன்று சந்திக்க முடியவில்லை. மீண்டும் மே.3 ஆம் தேதி, உண்மை அறியும் குழுவில் இடம் பெற்றிருந்த எஸ். கிருஷ்ணன்,வழக்கறிஞர், அதிகாரிகளைச் சந்திக்க முயற்சி செய்தும், அன்றும் அவர்களைப் பார்க்க முடியவில்லை. மின்னஞ்சல் மூலமாகவும், தொலை நகல் மூலமாகவும், SP க்கு அனுப்பியிருந்த கடிதத்திற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.
இந்த சூழலில், PUCL-உண்மை அறியும் குழு கண்டறிந்தவற்றை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். அவை:
பொது விசாரணை நடைபெறும் இடத்தை வேண்டுமென்றே மாற்றாமல் இருந்தது- Part II Stage (3) of the EIA (Environment Impact Assessment) Notification, 2006 மற்றும் அதன் பிற்சேர்க்கை IV ஆகியவை, தவிர்க்க முடியாத காரணங்கள் இருப்பின், பொது விசாரணை நடை பெறும் இடம், நேரம் ஆகியவற்றை மாற்ற இடம் அளிக்கிறது. மாவட்ட நிர்வாகத்திடமும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமும், வெளியாட்கள் மூலம் வன்முறை நடக்கும் அபாயம் இருப்பதைக் காரணங்காட்டி, பொது விசாரணை நடைபெறும் இடத்தை மாற்ற வேண்டும் என்று வடசேரி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்தும், அதற்கு எந்த பலனும் இல்லை. பாதிக்கப்படும் மக்களின் கோரிக்கையை வேண்டுமென்றேதான் அதிகாரிகள் நிராகரித்திருக்கிறார்கள். இது அவர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலாகும்.
அதிகாரிகள், பாரபட்சமற்ற, வெளிப்படையான வகையில் சட்டத்தை செயல்படுத்தாமல், சட்ட விரோதமாக, ஒரு சார்பாகவும், வேண்டுமென்றேவும் செயல்பட்டிருக்கிறார்கள்- பொது விசாரணையின் இடத்தை மாற்றாமல் இருந்தது, வெளியாட்கள் ஆயுதங்களுடன் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தும், மக்கள் சொல்லியும் DRO.கருணாகரன் , SP. டாக்டர். செந்தில் வேலன், DIG திருஞானம் மற்றும் ADSP. ராஜேந்திரன் மற்றும் புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் DSPக்கள், வன்முறையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது, மேலும் மக்கள் மீதே, தடியடி நடத்தக் காரணமாக இருந்தது- இதற்கெல்லாம் காரணம் M/s. Kings கம்பெனி, முன்னால் மத்திய அமைச்சரும், மக்களவையின் தற்போதைய உறுப்பினருமான T.R.பாலுவின் மகன் ராஜ்குமாருக்குச் சொந்தமானது என்பதே. நமக்குக் கிடைத்துள்ள வீடியோ ஆதாரங்கள், SP. செந்தில் வேலன் முன்னின்று தடியடியை நடத்தியதை நிரூபிக்கின்றன. மேலும் பொது வாழ்க்கையிலிருக்கும் வடசேரியின் முக்கிய மனிதர்களான ஜெகவீரபாண்டியன் உட்பட பலர் குறிவைத்து தாக்கப்பட்டிருக்கின்றனர். அதிகாரிகள் அத்தனை பேரும், வேண்டுமென்றே மனித உரிமைகளை மீறி இருப்பதால், Protection of Human Rights Act மற்றும் உள்ள சட்டங்களின் படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழியுள்ளது.
அதிகாரிகள் சரியான நேரத்திற்கு, சரியான முறையில் செயல்படாமல் இருந்தது அரசியல் காரணங்களுக்காவேயன்றி சட்ட காரணங்களுக்காக அல்ல- ஏப்ரல்-9, 2010 அன்று பொது விசாரணை நடந்த இடத்திற்கு வந்த SP. டாக்டர். செந்தில் வேலன், பொது மக்கள், வெளியாட்கள் ஆயுதங்களுடன் வந்திருப்பதை சுட்டிக் காட்டிய பிறகு, நண்பகலில்தான் PSG திருமண மண்டபத்திற்கு சென்று அங்கிருந்து ஆயுதம் ஏந்தியவர்கள், பொது விசாரணை நடை பெறும் இடத்திற்கு செல்லும் ரோட்டில் வராதவாறு காவலர்களை நிறுத்தினார். ஆனால், அந்த வெளியாட்கள், வயல் வழியாக வருகிறார்கள் என்று உள்ளூர் மக்கள் முறையிட்ட பிறகும், அதைத் தடுக்க, SP எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உள்ளூரைச் சார்ந்த ராஜேஷ் மற்றும் திருவள்ளுவன் ஆகியோர் வெளியாட்களால் பீர் பாட்டில்களாலும், அரிவாளாலும் தாக்கப்பட்டதை காவல்துறை தடுக்கவுமில்லை, தாக்கியவர்கள் மீது FIR பைல் செய்யவுமில்லை, தாக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்யவுமில்லை.இந்த அளவுக்கு வேண்டுமென்றே, மாவட்டக் காவல்துறை செயல்படாமல் இருந்ததை PUCL வன்மையாகக் கண்டிக்கிறது. IG.திருஞானம் மற்றும் SP. செந்தில் வேலன் ஆகியோர் ஒருசார்பாக செயல் பட்டது அரசியல் காரணங்களுக்காவே என்று இந்த உண்மை அறியும் குழு நம்புகிறது.
தடியடி நடத்துவதற்கான விதிமுறைகளோ மற்ற சட்ட வழி முறைகளோ பின்பற்றப் படவில்லை- காவல்துறை தடியடி நடத்துவதற்கு முன் பொது மக்களைக் கலைந்து போகச் சொல்லி எந்த அறிவிப்பும் செய்யவில்லை; அறிவிப்பு செய்யக் காவல்துறையிடம் எந்த ஒலிப் பெருக்கியுமில்லை; அங்கே மக்கள் கூடியிருந்தது சட்ட விரோதமானது என்றும் அறிவிக்கவுமில்லை. இப்படி செய்திருந்தால், பெண்களும், முதியோரும் கலைந்து போக வாய்ப்பு இருந்திருக்கும். மாறாக, இவர்களும் காவல் துறையால் கடுமையாகத் தாக்கப் பட்டனர்.வீடியோ ஆதாரங்களின்படி, தாக்கியவர்களையும், விதிகளின்படி, முழங்காலுக்கு கீழே தாக்காமல், தலையிலும், பின்புறமும் தாக்கியிருப்பது, நிச்சயம் கூட்டத்தைக் கலைப்பது மட்டுமே காவல்துறையின் நோக்கமில்லை என்பதை நிரூபிக்கிறது. கலைச்செல்வி(க/பெ. ராஜேந்திரன், வயது. 45), ஏப்ரல்-9, 2010 சம்பவத்தின் போது, காவலர் ஒருவரின் லத்தியால் தாக்கப்பட்டதால், அவருடைய வலது கண் பார்வை பறிபோய்விடும் அபாயம் இருப்பதாக அரவிந்தர் கண் மருத்துவமனை கூறியுள்ளது. எனவே, தமிழக அரசு கலைச்செல்விக்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும்,அவரைத் தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் PUCL கோருகிறது.
கம்பெனிக்கு எதிராக இருந்த கடையிலிருக்கும் பொருட்களை காவலர்கள் காசு கொடுக்காமல் அபகரித்துச் சென்றுள்ளனர்-சிப்ஸ்,பழங்கள், சிகரெட் மற்றுமுள்ள பொருட்களை பணியிலிருந்த காவலர்கள் பணமே தராமல் அபகரித்துச் சென்றிருக்கின்றனர்.இந்தக் கடையின் உரிமையாளரான, குண்டன் வீடு சுப்பிரமணி என்பவருக்கு இதனால் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. சட்டத்தைக் காக்க வேண்டிய காவலர்களே இப்படி செயல்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது, மிரட்டல், திருட்டு ஆகிய காரணங்களுக்காக தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென PUCL வலியுறுத்துகிறது.
பொது மக்கள், RDO மற்றும் அய்யாவு என்பவரின் கார்களை மறித்து, அவற்றிற்கு சேதம் விளைவித்தாகச் சொல்லப் படுவது குறித்து பாரபட்சமற்ற ஒரு விசாரணை தேவை- வெளியாட்கள் ஆயுதங்களுடன் வந்திருப்பதை பொது மக்கள், SP யிடம் தொடர்ச்சியாக சுட்டிக் காட்டிய பிறகும், உள்ளூரைச் சார்ந்த ராஜேஷ் மற்றும் திருவள்ளுவன் ஆகியோர் வெளியாட்களால் பீர் பாட்டில்களாலும், அரிவாளாலும் தாக்கப்பட்டதை காவல்துறையும் மற்ற அதிகாரிகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததைத் தொடர்ந்து, ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், மேற்குறிப்பிட்ட நபர்களின் கார்களை மறித்தாக ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் அவற்றின் கண்ணாடி உடைந்தது மற்றுமுள்ள சேதங்களுக்கு தாங்கள் காரணமல்ல என்றும், வேண்டுமென்றே வெளியாட்கள்தான் இதைச் செய்திருக்கிறார்கள் என்றும், காரில் இருந்தவர்கள் காயப்படமால் பார்த்துக் கொண்டதே தாங்கள்தான் என்றும் உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். அவர்கள் கார்களை மறித்தது சரியில்லை என்றாலும், இப்போது கைது செய்யப்பட்டவர்களுக்கும், இந்த நிகழ்வுகளுக்கும் எந்த தொடர்புமில்லை.
இந்தப் பிண்ணனியில், PUCL-ன் வேண்டுகோள்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் Article. 21படி, மாசடையாத, சுகாதராமான நீரும், ஆரோக்கியமான சுற்றுச் சூழலும், வாழுவற்கான உரிமையின் அங்கங்கள் என்று உச்ச நீதி மன்றம் கூறியிருப்பதின்ப்டி, இவற்றை பெறுவதற்கான முயற்சியாக, அடிப்படையில் வேளாண்மை தொழிலாகக் கொண்ட வடசேரி ஊர் மக்கள், பொது விசாரணையில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைக் கூற உரிமை இருக்கிறது. எனவே, மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், சுற்றுச்சூழல் அமைச்சகமும், வடசேரி மக்கள் பங்கேற்கும் வகையில், வேறொரு பொதுவான இடத்தில் பொது விசாரணையை மீண்டும் நடத்த வேண்டும்.
காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம், வன்முறையைக் கட்டுப்படுத்தாததுடன், பொதுமக்கள் மீது தடியடி நடத்தியது, அப்படி நடத்தியபோது எந்த சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாதது, மற்றும் EIA விற்கான பொது விசாரணையின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து விசாரிக்க, நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்படக்கூடிய தனிநபர் கமிஷன் ஒன்றை அரசு அமைக்க வேண்டும். இல்லையென்றால், EIA விற்காக நடத்தப்படும் பொது விசாரணைகள் கேலிகூத்தாகிவிடும்.
மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்காமல், அவற்றைப் பறிக்கும் வகையில் காவல்துறை செயல்படுவது சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. வடசேரியில், காவல்துறை நடந்து கொண்ட விதம் பற்றி அரசு விசாரித்து, சட்டத்தை மீறி, காரணமில்லாமல், தடியடி நடத்திய காவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென PUCL வலியுறுத்துகிறது.காவல்துறை மக்கள் உரிமைகளைக் காக்க உள்ளதேயன்றி, தனியாரின் நலன்களைக் பாதுகாக்க அல்ல என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
குண்டன் வீடு சுப்பிரமணியின் கடையில் சிப்ஸ்,பழங்கள், சிகரெட் மற்றுமுள்ள பொருட்களை பனியிலிருந்த காவலர்கள் பணமே தராமல் அபகரித்துச் சென்றதை அரசு விசாரித்து, அவர்கள் மீது த்குந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடையின் உரிமையாளருக்கு நஷ்ட ஈடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
கலைச்செல்வி(க/பெ. ராஜேந்திரன், வயது. 45), ஏப்ரல்-9, 2010, காவலர் ஒருவரின் லத்தியால் தாக்கப்பட்டதால், அவருடைய வலது கண் பார்வை பறிபோய்விடும் அபாயம் இருப்பதாக அரவிந்தர் கண் மருத்துவமனை கூறியுள்ளது. எனவே, தமிழக அரசு கலைச்செல்விக்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும்,அவரைத் தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் PUCL கோருகிறது.

சென்னை, 11, மே, 2010.
(9 ஏப். 2010/ வடசேரி பொது விசாரணையின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து PUCL உண்மையறியும் குழுவின் அறிக்கைச் சுருக்கம்)
ஞ்சாவூர் மாவட்டம், வடசேரி கிராமத்தில் இயங்கும் M/s Kings India Chemicals Corporation Ltd என்ற தனியார் தொழிற்சாலை, அந்த ஆலையின் வளாகத்திலேயே புதிதாக சாராய ஆலை ஒன்று அமைப்பது தொடர்பாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், பாதிப்புக்கு உள்ளாகும் உள்ளூர் மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்தை, கடந்த ஏப்ரல்-9, 2010 அன்று, Kings ஆலையின் வளாகத்தில் நடத்த ஏற்பாடு செய்திருந்தது.

Footer