May 13, 2007

குரோமோசோம்கள் 1992





குரோமோ..சோம்.கள்(1992)---------------------






எனக்குள் நானே.


ங்
கி
ப்
பார்க்கிறேன்


நான்..யார்

எது ..எனது முகம்

எது எனது சுயம்

எனக்குள் நானே..


ங்
கி
ப்
பார்க்கிறேன் * * *

மூக்கின் வழியே
மூளைக்கு ..யாத்திரை
நுட்பமாய்.. தவழ்ந்து
நுழைந்து களைத்தேன்
அங்கே............................................
என்றோ படித்த

‘எஸ்ஸே’ சிதிலம்
சாலிடரி ரீப்பர்
கொங்கு தேர் வாழ்கை அஞ்சிரை தும்பி......
உடைந்து போன
பிப்பெட்...

பீயுரெட்....
a2+b2=2ab..
ஈடிபஸ் x எலக்ட்ரோ
அய்யனார் குதிரை
அமோனியம் குளோரைட்
பானிப்பட்டு....

பைராம்கான் கோவணம்.....
கீரீன்விச் கோடு............
சதுப்பு நிலக்காடு
நிறைய....களிமண்....
வழுக்கி...
நுரையீரலுக்கும்
இதயத்திற்கும்
இடையில் விழுந்தேன்.....

* * *
தவளையின் தொண்டையாய் ....விரிந்து சுருங்கும்
இதுவா இதயம்

என்ன
ஒரே இருட்டாய் இருக்கிறது
வார்த்தைகள்மட்டும்
எப்படி
வெளிச்சமாய்வந்து விழுகிறது........


எங்கே? எவளையும் காணோம்!
தட்டச்சு கூடத்து
தடபுட ஒலியையே
சமிக்ஞையைகளாக்கி
சந்தித்து கொண்டதும்..
வனக்கல்லுரியின்
வளாகங்களில்
மரங்கள்நிறுவிய
மங்கிய இருட்டில்
காலார நடந்தே

காதலையளந்ததும்..

நடுங்கும் இரவில்
நிலவின் புழுக்கைகளை
எண்ணியபடியே
ஏகாந்தம் கலைத்ததும்
வெறும்..காமம்தானா

உள்ளம்கொடுத்து
உருகிவழிந்து
ஐ லவ் யூ வென்று

அருவியை பொழிந்த..
மார்வாடி ரீனா
மறைந்து புள்ளியாய்....
உறைந்து கிடந்தது..
உடலின் அரசியல்......
* * *
தூய்மைமுழக்கிகளால்
தூசுபடிந்து கிடந்த
நுரையீரலுக்குள்
நுழயத்தொடங்கினேன்

பணியுரைந்த
பள்ளத்தாக்காய்
பூத்திருந்தது
புகை வெண்படலம்
கருப்பாய் திட்டு

என்ன இது?
இந்தியழிப்பா?
ஓ!'யோகி' விளைவு’...

கவலைகள் சுமந்துவந்தது
ஒரு
ஏக்கப்பெருமூச்சு
சிதரியது
சாம்பல் மேடு

வெளியேற்றினேன்

* * *
பிச்சை காரனின் பாத்திரம் போலிருந்த
இரைப்பைக்குள்
மெல்லமாய்
எட்டிப்பார்தேன்

நியாய விலைக்கடையை
எடைபோட்டபடி
......................
பழையசோறு
பாண்டியன் ஊறுகாய்

கருவாட்டுத்துண்டு..........
பொரித்துளிகள்..........
தேங்கிய பன்
மற்றும்
சமூக அவலம்
சகித்துப்போக
நோய்க்கு அல்லாமல்
நோய்க்குறிக்குத் தந்த
குளோரோபுரோமசைன்
கரையாமல்.......

குடலை புரட்டியதுநேற்றடித்தது...


நேற்றடித்துநொதித்த.
நெப்போலியன் வாசம்

ழு
வி
னே
ன்


வேலைக்கு விற்ற
சிறு நீரகத்தின்
தழும்பு உறுத்தியது


வேலித்தோல்களில்
வெள்ளை சிவப்பணுக்கள்
அலையாகிப்புரண்டு
அடித்துக்கொண்டிருக்க

நுரைத்துக்கொண்டிருந்தது
எண்டோசல்பான்

.....................மி த ந் தபடி
பார்த்தேன்
... ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

மலப்பைக்குள்
ஜீரணமாகமல்.......
வார்த்தைக்குவியல்கள்
தேர்தல் முழக்கங்கள்
கடவுள்களின் பிம்பங்கள்
அப்புறம்
ஆசையாய் வளர்த்த
ஆட்டின் கறித்துண்டு


று
க்
கி
னே
ன்

சொர்க்கம் பலிதம்
சொப்பன ஸ்கலிதம்
சித்த வைத்தியர்
சிவராஜ் சிவக்குமார்
ப்ராப்தம்
x
y
x
y
x X y
ஆணா?பெண்ணா? தீர்மானிக்கிற....
அதிகார அணுக்கள்
விந்துப்பைகளில்
விராலாய் நீந்தின

டக் டக் டக் டக் க் க் க் க் கு

உபயோகம் குறைந்து
உருவம் தொலைத்த
முதுகெலும்புக்காக
முயன்று விழுந்தேன்


எழுந்து
தேடினேன்
தே
டி
னே
ன்
தே
டி
னே
ன் தே டி ன்

னே


தே டி னே ன்

தே டி னே ன்
தே டி னே ன்
தே டி னே ன்
அனுக்கள் .. திசுக்கள்
எழும்புகள்..எங்கும் தேடினேன்
எங்கும்

என் சாதியின் பெயரோ
என் மதத்தின் பெயரோ.
பொறிக்கப்படவே இல்லை
* * *
என்புதோல்போர்த்த
எதற்க்கோ பழகிய
இநத உடம்பு
என்னுடையதல்ல


கட்டப்பட்ட
கதவுகள்முட்டி
வெடித்துக்கிளம்பி
வெளியேறப்போகிறேன்

சமூகமனிதனென்ற
சத்தியம் தின்று
எனக்குளென்
எதிரைத்திணித்தபடி
முன்னேறிவருகின்ற
மாயப்பிசாசை

உள்ளும் வெளியிலும்
பிடரியிலறைய
நார்சிஸஸ்இருப்பை
நசுக்கிபோட

ஊன் கொடுத்து
உயிர்கொடுத்து


கட்டப்பட்ட
கதவுகள்முட்டி
வெடித்துக்கிளம்பி
வெளியேறப்போகிறேன்

வருகிற பொழுதில்
தயாராக வையுங்கள்
ஒரு
துவக்கை

துவக்குகளால்பிளப்பதை
பூத்துண்டுகளால்
இனியும்
துடைத்துக்கொண்டிருக்க முடியாது

No comments:

Post a Comment

Footer