May 13, 2007

சரசாள்

இரும்பு வாசம்
கமழும்வெளியை
நரம்புகளில் ஊடுருவிய
வெருமையை
சட்டென ஒரு புன்னகையில்
நிரப்பிவிட்டு புள்ளியாவாள்

என் நவீனங்களை விடவும்
பின்நவீனமானவை
அவளின் வார்தைகள்



கம்பத்தைப் பார்த்து
காகங்களைப்பார்த்து
உற்சாகமாய்............
உரையாடல்தொடரும்
அவள்
எப்போதும் திட்டிக்கொண்டிருப்பது
எனது
அலுவலகப்பணியாளர்களை
“மனிதர்களையும்”

மூளை குன்றிய கருப்பாளின்
அம்மா இறப்பிற்க்கு பிறகு
உறவுகள் வெட்டிவிட
ஊர்ச்ற்றித்திரிந்தவளை
மகளாக்கிக்கொண்டவளின்
மனதை
எப்படி வரையறுக்கமுடிகிறது
இவர்களால்இப்படி

எதையாவது தேடிக்கொண்டிருப்பதற்க்கான
அர்த்தம்
கருப்பாத்தாளின்
கனவுகளுக்கு......
புலப்படுவதாயிருக்கும்

இந்த பைத்தியகாரிக்குள்
உறங்கும் இலக்கியங்களை
உளறல்களாய்
மொழிபெயர்க்க அல்ல
அவள்
மொழிகற்று
வாசிக்க ... நானுமில்லை
கனவுகள் ஏதென்று
கண்டுணர
‘நான்’இல்லை

அவளிடமிருப்பது
அழுக்குமூட்டைகளாயிருக்கவாய்ப்பிலை
ஒரு கம்புயூட்டர் எஞ்சினியைர்
கனவுகளாகவுமிருக்களாம்
கடவுளுடையதாகவுமிருக்கலாம்

அந்த சாக்கடையை
ஒத்துக்கொண்டதேயில்லை
அது வீட்டுக்காரனின்
வங்கியென்பாள்

கான்சியஸ் x அன்கன்சியஸ்

யாருக்கு யாருடையது
அன்கன்சியஸ்
தீர்க்கமாக்கிப்போகிறாள்


தேவையாக இருக்கிறது
இந்த
ஆரம்பப்பள்ளி
எப்பொழுதும்
படுத்துக்கொண்டிருக்கும்
அந்த நாய்க்கும்..
அவளுக்கும்.

No comments:

Post a Comment

Footer