May 13, 2007




ஊருக்கு வெளியெ ஒத்துக்குப்புறத்தில்

யாரும் வராதா மாமரத் தோப்பில்
கூவும் குயிலின் தென்றல் பாட்டில்
ஆட்ம் இலைகளின் சலங்கை ஒலிப்பில்
தன்னை மறந்து
த்னியே கிடக்கும்
சின்னக் கவியே!
சிந்தனை பலமா?
என்ன செய்கிறாய்?
ஏகாந்தத்தில்!
இன்னும் கற்பனைஎழுந்தபாடில்லையோ!?
தலைவனை பாடினாய்!தலைவியைப்பாடினாய்
தனிமையின் தவிப்பை, தாகத்தை பாடினாய்!கல்லைப்பாடினாய்! காற்றைப்பாடினாய்!
காற்றில் அலையும் கீற்றைப்பாடினாய்!
இளசின்அழகில் மயங்கிச்சாய்ந்து
இடையை,நடையை,தொடையை பாடினாய்!
அய். ஆர் இருபதை
ஆடுதுறை முப்பதை
விளைத்தவன் பசியிலே
உழழும் கொடுமையை
உன் பாட்டிலெடுத்துக் காட்டியதுண்டா-இல்லை
வியர்வை குலத்தின்
விலாதிருடும்
சதிகாரர்களை
சாடியதுண்டா
என்ன கிழித்தாய்
எழுத்துப்பணியிலே
எழுத்தெனுமாயுதம்
எதற்க்குனக்கு
எழுதுகோலை
எடுத்துவீசு
* * *
விரிந்து பரந்திருக்கும்
விஞ்ஞானத் தொழில்நுட்பம்
வானத்தில் உட்கார்ந்து
வா'வென்றழைக்கயிலே
இன்னும் நீ
இரண்டாம் நூற்றாண்டின்
இருட்டுக்குள்ளேயே
பசித்துயரம் தாழாமல்முரசத்தின் மேலேரி
படுத்துறங்கியெழுந்தபின்னும மோசிக்கீரன்
பட்டினியைப்பற்றியொருவரிகூடப்பாடமல்
பாவெடுத்து மன்னனுக்கு கால்கழுவிவிட்டானாம்...................... * * *
இதைவிட்டால்
காதிலிருந்தது கையிலிருந்த்தது
ஏதுமில்லாமல் ஆயினபின்னும்
கால் செருப்பை
கழட்டியடித்து
வீட்டுக்கு வெளியெ
விரட்டிவிடாமல்
'இந்தாருங்களத்தான்,
சிலம்பை விற்றேனும்
சின்னவீட்டுக்கு போய்வாருங்கள்'என்ற
கண்ணகிப்பெண்ணெல்லாம்
கற்புக்கரசியாய்
பத்தினிதெய்வமாய்
பண்பாட்டு சின்னமாய்.
* * *
முல்லைக்கு கொடுத்த
முட்டாள்தனத்தையெல்லாம்
வள்ளளென்று யாத்துக்குவித்து
வரலாற்றின் பக்கங்களில்...சேறடித்துப்போனார்கள்
பொற்காலமென்று
போற்றிய..அவர்கள்
ஆட்சியின் மறுபுரத்தில்
அவலமே வாழ்கை
* * *
சங்ககாலந்தான் இருட்டுக்குளென்றால்
இங்கென்ன வாழ்கிறதாம்
கொடுகின்றகாசுக்காய்
கொள்கைகளை விட்டெரிந்து
முதுகெலும்பை அடகு வைத்து
மூலையிலே உட்கார்ந்து
துறை தேடி தினை தேடி
துவக்க வரி தேடி.............
.தெங்கிளநீர் கொங்கையினாள்
செங்கனிபோல் மங்கையினாள்
புணர்வதர்க்கு மெத்தையினாள்
புத்தம்புது தத்தையினாள்
என்றெல்லாம்
எழுதுகிற
மதனகாம பயல்களெல்லாம்
மண்ணிலே கவிஞராக
உலா வரும் போது
உள்ளுக்குள் எரிகிறது

விபத்திலொருத்தி
விழுந்துகிடந்தாலும்
மர்புதெரிய தொடை பிதுங்க
மல்லாந்து கிடந்தாள்
என்றுதான்
எழுதத்தோன்றும் இந்த
எழுத்தாளப்பயல்களுக்கு

இவர்கள்கையிலிருப்பது
காமனின் அம்பா!?
கேமலின் பென்னா!?
மைக்கு பதிலாய் ஊற்றி எழுதுவது
சாக்கடை நீரா?
முருங்கைக்காய் சாறா?
* * *
இந்த எதார்தங்களை
எட்டிஉடைதுவிட்டு
கனவுகளோடு
கட்டிப்புரளாதே
இலக்கிய வியாதிகளுக்கெதிராக
ஆயுதமெடுப்போம்-நாமேஆயுதமாவோம்

இது மாமேதையின் வைரவரிகள்-
இதைநாட்குறிப்பேட்டின் ஓரத்தில் அல்ல
இருதயத்தில் எழுதி வைத்துக்கொள்
சம்பாதிப்பதர்காக எழுதாதே
எழுதுவதர்காக சம்பாதி ....

1 comment:

  1. Its very true. the so called journalists and writes turn numb towards the real issues. they serve for the flesh of the affluent and thereby themselves. Shame on them.

    ReplyDelete

Footer