June 24, 2007

தூதூ








மொக்கே பொருச்ச குஞ்சு
நீராடுகாக்கு
கருவேல மரமொடுச்சு
கொடிங்கரக்கு போகாரூ

நெலாபுள்ளயொடாஞ்சு
கள்ளிமரக்கே
பாலே வடிக்கூ

எல விரிச்சு சொக்குகா
பயிரமரம்
கேளயாடுகா கத்தூ சத்தம் கேக்காக்கு

கொளாப்ப கண்ணுல வெச்சு
ஊரெல்லாம் சோருந்தண்ணியும் தேடுகே
நீர் வெக்க கெசங்கு
ஏங்குங்கெடாக்கலே


கப்பே என் காலு மேல
குதிக்கா
நாக்குல குந்திரிக்கே
கொத்துகா


தொம்தொம்.தொம் ..தொம்
தொம்தொம்.தொம்....
தொம்தொம்.தொம் ..தொம்
தொம்தொம்.தொம்

பட்டிசால வண்டாரி
பொறயடிக்கா
வெங்கச்சா மேட்டுல
வெடிபோடுகா குறுதலே
குள்ளாங் கொழலோட
குக்கிக்கெடாக்கா
என்னே வெராட்டகாக்கு


சோலகே கெடாந்து போனா
நாயீ லொண்டி
எம்ம பாத்து கொலக்கூ


நித்துத திருடி
நின்ன தெகேய் மேலெ போட்டு
தொரைகா சேத்து வச்ச
பணத்த தின்னே... ந்தப்பா


ஒம்பது உருப்படியும்லெத்து
ஒண்டியாகி வருகேமு
ஒன்னா நிப்பாமா

ரேசா
கீழ்நாட்டுகயிருந்து
வெராட்டகாக்கு வருகாரூ
எம்ம

கும்கிகா.....


ஆதியில ஆங்கிருந்து உன்ன
இப்போ ஈங்கிருந்தூ என்ன
அப்பரோ உன்ன

பலரின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்விளக்கம்

தன்னை விரட்டுகிற இருளர்களுக்கு யானை விடுக்கும் தூதாக ஆதி பழங்குடிமக்களான இருளர்களின் மொழியிலே எழுதப்பட்டது. அவர்களின் மொழி தென்னிந்திய மற்றும் சங்கேத மொழிகளின் கலப்பு. குறிலை நெடிலாகவும் நெடிலை குடிலாகவும் பயன் படுத்துகிறார்கள் எ.கா

அங்கெ - ஆங்கே இங்கே- ஈங்கே

மொக்கே-மலைக்கரடு

தெகேய் அனாதையாய்

கப்பே -தவளை

குந்திரிக்கே-தேள்

நீர்வெக்க கெசங்கு-நீர்முள்ளிகிழங்கு ( ந்நீருக்கு பதிலாய் காட்டுக்குள் பயன்படுத்தும் கிழங்கு)

வண்டாரி,குறுதலை ,மூப்பன் - ஊர் தலைவர்கள்

பொறை-அவர்களின் இசைக்கருவி(மத்தாளம்)

கொழல்-துப்பாக்கி

சோலகேகெடந்து போன -காட்டுக்குள்ளிருந்து பழகி வீட்டுப்பிராணியான

லொண்டி- ஒதுங்கி

கொடிங்கரை- நீர் ஓடும் பள்ளம்

மொழி விளக்கம் கொடுக்கச்செய்த

சரண்யாSaranya M
Illinois அவர்களுக்கு நன்றி

No comments:

Post a Comment

Footer