May 23, 2010

ஓர் அமைச்சரின் உதவியாளரோடு ஒரு இரவும் இரண்டு பகலும்

வெள்ளிக்கிழமை ஒரு தொலைபேசி


வணக்கம், லட்சுமணனா?


ஆமாம்


சோளகர் தொட்டி பாலமுருகனிடம் பேசினேன் ......அவர் உங்கள் எண் கொடுத்தார் .......ஒடியன் புத்தகம் உங்களுடையதா?


மக்களுடையது நான் பதிவு செய்திருக்கிறேன்


நீங்கள்?


நான் நீலகிரிதொகுதி பாரளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவின் அரசியல்

உதவியாளர் லட்சுமணன் பேசுகிறேன்


சொல்லுங்கள்


உங்கள் புத்தகத்தையும் குறிப்புகளையும் படித்தோம்


அவை சரியா என அப்பகுதி ஆசிரியரை படிக்கச்சொல்லி விசாரித்தோம்


ம் சொல்லுங்க


அவை அத்தனையும் சரி இன்னும் நீங்கள் கடுமையை குறைத்து பதிவு செய்திருக்கிறீர்கள் என்றார்



அமைச்சர் கூடுதல் அக்கறையோடு அவர்கள் பிரச்சனையை கவனிக்கச்சொல்லி இருக்கிறார்


உங்களை சந்தித்து பேச விரும்புகிறேன்


சரிங்க சந்திப்போம்



சந்தித்தோம் இது குறித்து ஆழமான உரையாடல் நடத்தினோம்


பத்து கிராமத்திற்க்கு ஒரு முதல் உதவி ஆரம்ப சுகாதாரம் உருவாக்குவது

நீரில் புளூரைடு அளவை சரி செய்வது


குழந்தைக்களுக்கு இரட்டை கல்வி வழங்க குழந்தைகள் அதிகமுள்ள கிராமங்களில் மாலை வகுப்புகளை அறிமுகம் செய்வது


மாதம் ஒரு முறை குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சிகள் நடத்துவது


பத்தாம் நிலை மற்றும் 12 ஆம் நிலை மாணவ மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பை ஏற்பாடு செய்வது


இளைஞர்கள் நிறைய வேலையின்றி இருப்பதால் அவர்களுக்கு வேலை வாய்ப்புள்ள இடங்களை கண்டரிந்து வாய்ப்புகள் ஏற்படுத்துவது


இடையில் பல்வேறு காரணங்களால் பத்தாம் வகுப்பு மற்றும் பணிரெண்டாம் நிலையில் விடுபட்ட
மாணவ மாணவிகளுக்கு மேல் படிப்புக்கான பயிற்சி மையம் ஏற்படுத்துவது


பணிரெண்டாம் நிலையோடு படிப்பை கைவிட்டவர்களுக்கு தொலைதூரக்கல்விகளுக்கு வசதி ஏற்படுத்தி தருவது


5 கிராமங்களுக்கு ஒரு கணிணிமையம் ஏற்படுத்துவது


மின்சாரம் இன்னும் இல்லாத கிராமங்களில் மின்வசதி ஏற்படுத்துவது


சூரி ஒளி வேலிகள் மூலம் அவர்கள் விவசாயத்தை பாதுகாப்பது


விதைவங்கிகள் உருவாக்குவது


கிராமங்களுக்கென ஒரு ஆட்டுபண்ணை அமைப்பது


தேனி வளர்ப்பில் பயிற்சியும் ஆய்வு மையமும் ஏற்படுத்துவது


இனச்சான்றுகள் முழுமையாக கொடுக்க முயற்சி எடுப்பது


·அவர்களுக்கான பாரம்பரிய தலைமத்துவத்தை நிலைநாட்ட முயல்வது


அவர்களின் பண்பாட்டை காப்பது


வனச்சட்டம் 2005 ன் அமுலாக்கப்பணிகள் பற்றி..........



இதில் அவர்கள் அதிகாரத்துக்குட்பட்ட அனைத்தையும் செய்யத்தயாராக இருப்பதாக தெரிவித்த கையோடு அப்பகுதிகளுக்கு ஒரு நாள் பயணம் செல்ல முடியுமா ?என்றார்


தாராளமாக....


14.5.2010 மற்றும் 15,10,2010 வெள்ளி சனிக்கிழமை முடிவானது



முதலில் அத்திக்கடவை தாண்டி சிறு கிணறு இறங்கியதும் அறிமுகத்துக்கு பின் அவர் மக்களோடு அக்கறையோடு விசாரணை செய்தார் அவரது அக்கறை எனக்கு ஆச்சரியமாயிருந்தது அது நிச்சயமாக ஓட்டுப்பொறுக்கும் மனநிலையிலில் இருக்கவில்லை


தோண்டை

வேப்பமரத்தூர்

சுண்டைப்பட்டி

நெல்லிமரத்தூர்

வேப்பமரத்தூர்

பில்லூர் டேம்


14 ம் தேதி பயணம் முடித்து

பில்லூர் ஓய்வு இல்லத்தில் இரவை கழித்தோம் அதிகாலை ஆறு மணிக்கு சில ஊராட்சித்தலைவர்கள் அவருக்காக காத்திருந்தனர்


இவர்களுக்கு எப்படி தகவல்?


நாந்தான் அழைத்திருந்தேன் என்றவர் அவர்களோடு இப்பிரச்சனைகளை குறித்தும் அதிலிருக்கும் முட்டுக்கட்டைகளையும் ஆலோசித்தார்

  • யானைப்பள்ளம்
  • சொரண்டி
  • கொரவன்கண்டி
  • புதுக்காடு


புதுக்காட்டிலிருந்து கூடப்பட்டிக்கு செல்லும் 8 கிலோ மீட்டர் அடர்காட்டுப்பகுதியில் ஒரு யானைக்கூட்டத்திடம் சிக்கி தடுமாறி கூடப்பட்டியை 7 மணிக்கு அடைந்தோம் அங்கே காட்டெருமைகண்டு திடுக்கிட்டோம் சமாளித்து


அரக்கடவை அடையும்போது மணி 8.30


சாதரணமாக சொல்லிவிட்டாலும் இந்த ஊர்கள் அடர்ந்த அத்துவானமான வனத்துக்குள் இருப்பவை எல்லாவிதமான ஆபத்துகளும் நிறைந்தவை


இந்த இரண்டு நாளில்


கோவைக்கு குடி நீர் அளிக்கும் பில்லூர் டேமின் அருகில் வசிக்கும் ஆதிவாசிமக்கள் குடி நீர் இல்லாமல் தவிக்கின்ர நிலையை பார்த்து ஆதங்கப்பட்டார்


மின்சாரம் தயாரிக்கும் பிளாண்ட்க்கு அருகில் இருந்தும் மின் விளக்கு காணத கிராமங்களை பார்த்து அதிர்ச்சியானார்


நிலத்தில் முதலீடு போட்டு விளைந்தபின் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஆதிவாசியை ஒட்டாண்டியாக்கும் நிலைகண்டு பதறினார்


பத்தாவது படிக்கும் ஆதிவாசி குழந்தைகள் ரிசல்ட்டை காரணம் காட்டி பாதியில் நிறுத்தப்பட்டவர்களிடம் சந்திந்த்து உரையாடினார்


சாதி சான்றிதழ்கிடைக்காமல் மேல்படிப்புக்கு செல்லாமல் வீட்டில் காத்திப்போரிடம் கலந்துரையாடினார்


இப்படி முழுக்க அவர்களிடம் நல்ல அன்போடு இருந்தார்


ஆதிவாசி கிராமங்களில் இரண்டு நாள் முழுதும் இருந்து அவர்களுடைய பிரச்சனைகளை பேசியும் உடனுக்குடன் அதிகாரிகளிடமும் பதிலைப்பெற்று மக்களிடம் அளித்தார்


வனத்துறை அலுவலரை சந்தித்து உரையாடினார் .முகத்திற்க்கு நேராகவே கேட்கத்தயங்கும் சில கேள்விகளை கேட்டு அவரை அதிர்சிக்குள்ளாக்கினார் மின்துறை தலைமை அதிகாரியை தொடர்புகொண்டு மின்சாரம் வழங்குவதில் உள்ள சாத்தியங்கள் குறித்து உரையாடினார்


எல்லாம் முடித்து எம் பியின் அலுவலகத்தை அடைந்து அமைச்சரின் நேர்முக உதவியாளர் ஆ.நடராஜை சந்திக்க ஏற்பாடு செய்தார்கள்

அவர் மிகவும் அக்கறையோடு இவற்றை கேட்டுக்கொண்டு இவற்றை தொடர்ந்து

எனக்கு நினைவுபடுத்துங்கள் ...என்ன பிரச்சனை? யார் அதிகாரி ?அவருடைய எண் இது மூன்றும் போதுமானது எனக்கு


தினம் இப்படி ஒரு காரியம் செய்தாலே மனதுக்கு நிம்மதியென்றார்

விடைபெற்றேன்


17 ஆம் தேதி மீண்டும் அரசியல் உதவியாளர் லட்சுமணனிடமிருந்து தொலைபேசி அழைத்தது


மின் வாரியத்திடம் பேசியாச்சு அவர்கள் சம்மதித்துவிட்டார்கள் கேரளமின்துறை அமைச்சருக்கான கடிதம் அனுப்பியாயிற்று அப்புறம் நம்மால் முடிந்த இடங்களில் மின்சாரம் தரவும் ஆணைகள் தயாராகிட்டு ருக்கு ,அவர் செயல்பாடுகளை பட்டியலிட்டார்


அவருக்கு நன்றி சொல்லும் முன்பே எனக்கு நன்றியென்றார்


தொடர்ந்து தொடர்பிலிருந்து என்னென்ன பணிகள் நடந்துகொண்டிருக்கிறது என்பதை பகிர்ந்துகொண்டிருக்கிறார்


நான் இன்னும் பிரம்மிப்பிலிருந்து விடுபடவில்லை

11 comments:

  1. புனைவொன்றும் இல்லையே... கனவிலிருந்து விழித்தேன் என்று முடித்து விடுவீர்களென நினைத்தேன் ... லேபிள் சிறுகதையா என தேடினேன் ...
    சந்தோசம் தோழரே ... நன்றிகளும் வாழ்த்துக்களும் அமைச்சரின் உதவியாளர்களுக்கும் உங்களுக்கும் ... பிரமிப்புகள் தொடரட்டும் ...

    ReplyDelete
  2. நன்றி நியோ அந்த பயணம் ஒரு உதவியாளர் எப்படி இயங்கவேண்டும் என்பதற்க்கான உதாரணமாய் இருந்தது
    அப்புறம் விசாரித்தேன் அவர் பெரியாரின் பாசறையில் புடம் போடப்பட்டவர் என அறிந்தேன்
    அவருக்கு என் சல்யூட்


    பாராளுமன்ற உறுப்பினரின் அம்பேத்கார் குறித்த ஆழமான படிப்பும் பெரியாரியம் குறித்த தெளிவும் அக்கறையும் இன்னொரு பிரமிப்பு

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  4. பகிர்விற்கு நன்றி லட்சுமணன்.

    அமைச்சரின் உதவியாளருக்கும், மற்றவர்களுக்கு இம்மக்களின் தேவையை அறியத்தரும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    இப்பதிவின், எழுத்துருக்களின் வடிவம் (format)படிப்பதற்கு சற்றே சிரமமாக உள்ளது. முடிந்தால் மாற்றியிடுங்கள்.
    நன்றி.

    ReplyDelete
  5. நன்றி பதிக்கும் கோபால் அண்னனுக்கும்

    ReplyDelete
  6. வாவ்! வாழ்த்துகள் ஒடியன் மூலமாக சாதிக்கும் லட்சுமணனுக்கு! மகிழ்ச்சியாக இருக்கிறது!

    ReplyDelete
  7. நாடு என்ன செய்தது என்று கேட்காமல் நம் நாட்டிற்க்கு எதாவது செய்யவேண்டும் என்ற உங்களை போன்ற எழுச்சி மிக்க செயல் வீரர்கள் இருப்பதால் இன்னும் பிழைத்தது என் சமூகம்
    அரசு என்ன செய்தது என்று கேள்வி கேட்காமல் இருக்கும் இல்லாத சூழலை ஆதாரபூர்வமாக விளக்கி அரவணைக்க அரசை நாடும் தன்மை சிறப்பானது உங்களை போன்று ஒவொவ்று தமிழனும் நினைத்தாள் நம் தாய் மகளை காப்பற்றலாம் எங்கோ கேட்கும் அவலங்கள் பெரிதாக தெரிகிறது உங்கள் காலுக்கு அடியில் நசுங்கி கொண்டிருக்கும் நம் இன மக்களை காப்பாற்ற தலைபடதவன் என் தாய் தமிழின் புதல்வனாக இருக்க முடியாது. அமைசர் அவர்களும் லக்ஸ்மணன் போன்றோரும் தமிழ் தாய் பெற்றெடுத்த தவ புதல்வர்கள் என்பதில் ஐயம் இல்லை வாழ்க உங்கள் எண்ணங்கள் வளர்க உங்கள் பணிகள்

    ReplyDelete
  8. உண்மையிலேயே வாழ்த்துக்கு உரியவர்கள் அமைச்சரும் அவர் உதவியாளர்களும்தான்

    ReplyDelete
  9. எங்கிருந்தாலும் பெரியார் தொண்டன் என்ற அடையாளத்தோடு பணியாற்றும் தோழர் இலட்சுமணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

Footer