May 22, 2010

கூப்பிடுவது எமனாகவும் இருக்கலாம்-வா மு கோமுவின்நேற்று இரவு கோவையில் ஒரு கூட்டத்திலிருந்து வந்தேன் ஜெயக்குமார் கடலையில் ஆழ்ந்திருந்தார் பாம்ஸ், மயில் எல்லாம் ஒரு திருமணத்துக்காக மதுரையில் இருந்தார்கள் நமக்கு சம்பந்தமிலாத விஷயமென்று இப்படி பலதிருமணங்களை சொல்லாமல் டீலாவில் விட்டுவிடுவார்கள். நண்பர் செந்திலின் திருமணத்தையும் அப்படியே விட்டுவிட்டார்கள் சொன்னாலும் நான் போவேன் என்பது நிச்சயமல்ல ஆனால் அந்த fuel கடன்கழிக்கவாவது போய்ருக்கனும்

வெறுமை அறையிலிர்ந்த உடைந்த சேரின் மேல் உட்கார்ந்து தம்மடித்துக்கொண்டிருந்ததது ஏதாவது மனம் அரிக்கத்தொடங்கியது. தட்டுப்பட்டது வா மு கோமுவின் கூப்பிடுவது எமனாகவும் இருக்கலாம் சரி வீடுபோய்ச்சேர்ந்ததும் கருமாந்திரம்புடித்த மாத்திரையை முழுங்கிவிட்டு புத்தகத்தை எடுத்தேன்
அம்புட்டுதான் சாரயம் மாதிரி பத்திகிச்சு

புத்தகத்துக்குள்ளிருந்து ஏதோ உருவங்கள் கரப்பான் பூச்சிபோல் இறங்கி ஓடியது. அது கரப்பான் பூச்சியாய் இருக்க வாய்ப்பே இல்லை கரப்பானோ, பாச்சையோ இருமுவதற்க்கு வாய்ப்பில்லை எனது மனது ஊறத்தொடங்கியது ஆனால் தேட மனதில்லை அப்படியே கட்டிலில் படித்தவாறு படிக்கத்தொடங்கினேன்

தன் உடைகளையும் தோலையும் உரித்துப்போட்டுவிட்டு நிர்வாணமாயிருந்த அவரது நாவல் என்னை படாதபாடு படுத்தியது துண்டுதுண்டாய் அக்குஅக்காய் எங்கிருந்துவேண்டுமானாலும் படிக்கச்சொல்லி எங்கிருதோ ஒரு குரல் கேட்டுக்கொண்டேயிருந்தது பல்லிகளுக்கு மனச்சிதைவு ஏற்படுமாஎன்று ருத்திரன் வந்து சொன்னால் நல்லயிருக்கும்

அதை அதட்டிவிட்டு ஒரு நேர்கோட்டில் படித்துக்கொண்டிருந்தேன் அப்புறம் 120 ம் பக்கம் கைடைசி பேராவிலிருந்து தொடங்கினேன் அப்புறம் கடைசியாய் அவருடைய முன்னுரை படித்துவிட்டு மூத்திரம் போய் இதுவரை சொல்லிவந்த பக்கங்களை தின்று தண்ணிகுடித்தேன் மணி இரண்டாகும்போது நாவல் இருதியில் வந்து கோமு கைகுழுக்கிவிட்டு தம்கேட்டார் திரும்ப்பிப்பார்த்தேன்

அங்கே நீட்சே, பிராய்டு பிளாட்டோ ஒரு கவிஞி ஷராஜ் அகப்பேய் சித்தர் செக்ஸ்வைத்தியர் சிவராஜ் எல்லாம் தண்னியத்துக்கொண்டிருந்தார்கள்

வக்காளி உன்னாலதான் இப்படி புத்தி கெட்டுப்பாயிட்டான் ராசமைந்தன் என்று நீட்சே பிராய்டை திட்டிக்கொண்டிருந்தார்

உன் ஜருதுராஷ்டிரன் ஜட்டியோடவந்து அவமுன்னால நின்னதுதான் இத்தனைக்கும் காரணம்

சண்டை முற்றிப்போய் எல்லோரும் அடித்துகொண்டு குற்றாயிரானபின் அவர்களை கோமு சாந்தமணியைப்போல் தின்னத்தொடங்கினார்

ஏப்பம் விட்டுவிட்டு தனது குறியை அறுத்து வெளியில் கத்திக்கொண்டிர்ந்த பூனைக்கு போட்டுவிட்டு எங்கேயோ நடந்துபோனார்

கோமு...

என்ன?

என்ன இது

குறிகளற்ற சமூகம் உனக்கும் எனக்கும் விடுதலையதரலாம்

முயன்றுபார்

ஏன் இப்படி

ஆம் நீ எங்கிருந்து தொடங்கவேண்டும் எங்கிருந்து முடிக்கவேண்டும் எனபதை ஹறிகிருஷ்ணன் முடிவு செய்யமுடியாது எட்கர் தாஸ்டன் வேண்டுமானால் முடிவு செய்யலாம்

வேண்டுமானால் சுதீரை கேட்டுப்பார்

பாலியல் அந்தரங்கங்கள் ரகசியத்திலிருக்கும்வரை இங்கே பீடங்கள் உருவாகும் அது அம்பலத்திலேயே இருக்கும்போது பீடங்கள் உருவாகாது

தான் நிறங்கள் பெற்றிருந்த சனிக்கிழமைகளை மாதங்கள் தின்றுவிட்டதாய் புகார்தரமுடியாது எந்த ஆண்டுகளிடமும் பாலை நிலவா

விஜயமங்கலத்துக்காடுகளில் கழட்டிப்போட்ட ஆணுரைகளுக்குள் கிடக்கின்ற ஆட்களின் அதிகாரம் உயிர்பெற்று வீதிகளிகலிருந்து எதிர்பட்ட விக்டரை ஏன் என்று கேட்கிறது

மகேஸ்வரி காத்திருக்கும் பெஞ்சுகளில் யாரோ ஒரு குறியை வரைந்துவிட்டது சின்னபப்பாவுக்கு பிரச்சனையாய் இருக்காமல்போனதற்க்கு மருத நாய் எப்படி காரணமாகமுடியும் அந்த அல்சேசன்வேண்டுமானால் விலைவாகலாம்

கடைசியாய் எப்படியோ கொ மு ச ஈஸ்வரன் வந்து எல்லாத்தையும் தன் துண்டுக்குள் போட்டு எடுத்துகொண்டுபோகயில் நீட்சே கத்தினான்

டே தாயோளி ராசமைந்தா நீ மட்டும் தப்புச்சிட்டியே


தொடர்புகளுக்கு
உயிரெழுத்து பதிப்பகம்


1 comment:

 1. வாழ்வு சங்கலி
  குருஅருள் கொண்டு கடக்கலாம்
  ஆதி சூரியன் இன்னும் இளமையை தன் வசம் கொண்டு
  மேகமாய் மாயை கொண்டு வாழும் மானுடனே
  மஞ்சள் பந்து குருவாய்
  சொன்ன சேதி
  யானைக்கு அதன் மதி
  அங்குச பாகன் குருவாய் நின்று ஓம் எனும் மந்திரம் சொன்ன
  நேரத்தில் திருவனை காவல் புவனமாதா காதில் இருக்கிறது
  உன் மந்திரம் ஸ்ரீ சக்கரம் !!!!!!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete

Footer