May 06, 2009

தேர்தல் கூத்தும் சதிகார கோமாளிகளும்

கொங்குவேளாளர் இப்போது கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள்!

குடும்பம் குடும்பமாகரியேறுறார்கள்

சிலிண்டர்கட்டி !சிலிர்க்கிறார்கள்!

கொடியேற்றி கொப்பளிக்கிறார்கள்!

அள்ள ஒரு பிடி மண் கூட இல்லாத சாதி!

தொழில் அதிபர்களே இல்லாத ஒரு சாதி!

மந்திரிகளோ மற்ற கட்சிகளில் மாவட்ட செயளாலர்களோ இல்லாத சாதி!


தினம் தினம் ஒடுக்கப்படுகிற ஒரு சாதி!


மற்ற சாதியினரால் அடக்கப்படுகிற சாதி!


கூழுக்கு வழியின்றி கிடக்கும் சாதி !

கொடுமைகளை எதிர்த்ததால் தென்னை மரத்துக்கு வெட்டி புதைக்கப்பட்ட சாதி!

இப்படியெல்லாம் கொடுமைகளை அனுபவித்த ஒருசாதி இந்த கொங்கு

மண்ணில் உண்டென்றால் அது கவுண்டர் சாதியாகத்தான் இருக்கும்


எங்கே இவர்களின் பிரதிநிதித்துவம் இல்லையென்று

கொட்டமொடா
மாதிரி கத்துகிறார்கள்

கொங்கு மாவட்டங்களின் திமுக செயலாளர்கள்

கொங்கு மாவட்டங்களின் தி மு தலைவர்கள்

கொங்கு மாவட்டங்களின் கம்யூனிஸ்ட் தலைவர்கள்

கொங்கு மாவட்டங்களின் காங்கிரஸ் பெரும் புள்ளிகள்

நேற்று ஆரம்பிக்கப்பட்ட தே மு தி வரை

எல்லாவற்றிலும் அதிகாரம் மிக்க பொறுப்புகளில் இருப்பவர்கள் இவர்களே

இதில் எதற்க்கு தனியாக ஓரு கட்சியென்று தெரியவில்லை

ஒரு வேளை இவர்களுக்குள் ஏற்பட்டிருக்கிற அதிகார

போட்டியாகவேண்டுமானால் இருக்கலாம்

இதிலும்கூட தேர்தல் வேட்பு மனுவிலேயே வெள்ளையாய் ஐம்பது கோடி

கணக்கு காட்டும் ஈஸ்வரன் போன்றவர்கள்தான் வேட்பாளராகமுடிகிறது

என்பதை பார்க்கும் போது கவுண்டரை விட பெரிய சாதி கரன்சி என்று

தோன்றுகிறது .{இந்த இடத்திலும் மார்க்ஸ்தான் ஜெயிக்கிறார்}ஒருவேளை சட்டசபைதேர்தலின் போது எல்லா

ஏழைக்கவுண்டர்களையும் வேட்பாளராக்கி பணக்கார கவுண்டர்கள் செலவு

செய்தால் ....................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!??????????????????????

கவுண்டர் சாதியில் சேர்ந்து கலக்கலாம் என்றிருக்கிறேன்

வாரீர்களா ?
---------------------------------

மற்ற ஊர்களில் அ தி மு க

எங்களூரைப்பொருத்தவரை
இதில் இணைந்திருப்பவர்கள் திமுகவில் இருந்த கவுண்டர்களே!

நேற்று, திமுக கூட்டணி வேட்பாளர் வரும்போது அதற்க்கு அல்லும் பகலும்

வேலை செய்தவர்கள் வெறும் மூன்றுபேர்தான்

இதற்க்கு முன்பு தேர்தல் என்றால் நூற்றுக் கணக்கான இளைஞர்களோடு

வலம்வந்த திமுக படை இப்போது நொருங்கிப்போய் சுருங்கியிருக்கிறது

கருணாநிதிக்கு ஆரத்தி எடுத்து அட்சதை போட்ட கவுண்டச்சிகள்

'நாசுவப்பாம்புடிக்கு எவ ஓட்டுப்பொடறது' என்று கச்சை கட்டுவதை பார்க்கமுடிகிறது

தனது
தொண்டர்களுக்கு பெரியாரையாவது சரியாக
அறிமுகப்படுத்தியிருந்தால்

கொஞ்சம் தப்பித்திருக்கலாம் ஆனால் தலைவர்கள் சிக்காமலிருக்க பெரிசை

இருட்டடிப்பு செய்ததன் விளைவை கஸ்தூரிநாயக்கன் பாளையம் கிளை

அனுபவித்துக்கொண்டிருக்கிறது .கஸ்தூரி நாயக்கன் பாளையம் மட்டுமல்ல!

திமுக,அதிமுக தே தி முக ,இப்படி எந்தக்கட்சியின் உறுப்பினராக இருந்த
போதும் தொடர்ந்து அவர்கள் கவுண்டர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள்
என்பதற்க்கு இதுவே சாட்சி !!!!!!!!!!!!!!!!!!!!
___________________________

இதில் உச்சகட்ட தொட்டபெட்டா தமாஷ் நீலகிரிதான் , எனென்றால் அது

தனித்தொகுதி. அதில் கொ.முபே பத்திரன் என்ற தலித்தை

நிறுத்தவேண்டியதாகிவிட்டது . தலித்துகளுக்கே பெரிதும் உதவாத பிசிஆர்

சட்டத்தை நீக்குவதை தனது தேர்தல் அறிக்கையிலேயே வைத்திருக்கிற


கட்சிக்கு இப்படியொரு சோதனை வந்திருக்கிறது


நீலகிரிதொகுதிக்கு உட்பட்ட கவுண்டர்கள் பத்திரனை தனது வீடுகளுக்கு

அழைத்துபோய் டைனிங் டேபிளிள் சாப்பாடு போட்டாலோ?


அவர்கள் குடிக்கும் தேநீர்க்குவளைகளில்பத்திரனுக்கு சுக்கு டீ கொடுத்தாலோ!

அங்கே தலித்துகளை கோயிலுக்குள் அழைத்துப்போய் கோயில்

நுழைவுப்போராட்டம் நடத்தினாலோ?

தேர்தல் பாதை திருடர் பாதை என்றிருக்கும் கொள்கையை மாற்றி

கொ
மு பே வுக்கு வக்களிக்கலாம் என்றிருக்கிறேன்

நீங்கள்
என்ன சொல்கிறீர்கள்?
1 comment:

  1. அருமை, யாருமே எளுதலைனு இருந்தேன், மிக கடுமையாக துரட்தவேன்டும் இவர்களை

    ReplyDelete

Footer