October 20, 2007




பைத்தியகாரி ....................


இப்படித்தான் எல்லோரும் சொல்லுவார்கள் சரசம்மாவை

எனது அலுவலகத்திற்க்கு அருகில் வீடுகளில்


பத்துபாத்திரம் தேய்ப்பது முதல் வாசல் தெளிப்பது வரைக்கும்

அவள்தான் செய்வாள்


முடிந்தவுடன் அவர்கள் கொடுப்பதை வாங்கி முந்தானையில்


முடிந்துகொண்டு தனது இருப்பிடத்துக்கு போய்விடுவாள்


அவளது இருப்பிடம் மிக எளிமையானது


யாருக்கும் தொல்லைதராத ஒதுக்குபுறமான ஒரு இளைஞர் மன்றம்


சரசம்மாவிற்க்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு


பசங்கள்ஒதுங்கிவிட்டார்கள்


இப்போது அவள்மட்டும்

தனிக்காட்டுராணி

ஒரு வருடத்திற்க்கு முன்பு ஒரு கிருஸ்துமஸ் நாளில் அலுவகத்தில்

எழுத்துப்பணியில்

நிமித்தமாக அமர்ந்திருந்தேன்


திடீரென கதவு திறக்கும் சத்தம்

சரசம்மாநின்றிருந்தாள்


என்ன சரசம்மா?

ஒரு புன்னகை

சாப்பீட்டீங்களா?

எங்கீங்க சோறு தின்னா கையீ அந்துழுந்துருது

ஓ!

அன்னைக்கு சின்னக்கா ஒரு புட்டு தந்தா

அததின்ன பொறக்கு வயிறு வீங்கி ஒரு கல்ல பெத்துபோட்டேண்

அந்தக்கல்லுலதான் இப்ப ஊரே தொவைக்குது!

நெத்தியில் இருந்த ஒரு ரூபாய் காசை அழுதிவிட்டபடி பேசினாள்

ஏம்மா இன்னைக்கு ஏசுக்காரங்களுக்கு நோம்பி

ஜெபா வீட்டுக்கு போனா எதாவது கெடைக்குமல்ல?

என் டிபனில் ஒன்றுமில்லாததை காட்டாமல் ஆற்றுப்படுத்தினேன்

அய்யோ அங்க போனா நம்மாளுக சோறுபோடமாட்டாங்க

ஏன்?

பாய்ஊட்டுக்கும்போவெங்...........

சிலுவைக்கும்போவெங்...........

அதெல்லாம் இவுனுகளுக்கு புடிக்காதுங்...

அப்புறம் இவுங்க சோரு போட மாட்டாங்க.....




தீடிரென த்தாவினாள்

நான் மகாராணியாதா மேட்டுப்பாளையத்துல இருந்தேன்

வேற நாட்டு ராசா வந்து என்ற பொடக்காழிய புடுச்சுட்டு

தொரத்திஉட்டுட்டான்

அவ அவ கைக்கே மோதுரம் போட வக்கில்ல அவஞ்....... மோதுரம்

வேணுமா?

பக்கத்திலிருந்த எல்லோரும் காணாமல் போனார்கள்

அவள் சோத்தை எப்போதும் ஒரு பொருட்டாக மதித்தவலுமில்லை

பின் எதுக்காக வந்தாள்

திடீர் நினைவு வந்தவளாக

அந்த சூரியன் நேத்திருந்து என்ற அடுப்புக்குள்ள போய் பூனைக்குட்டியாட்டா

படுத்து தூங்குது

அத கொஞ்சம் வந்து தொரத்தி உடறீங்களா

அட!

என்ன மாதிரியான கற்பனை இது

அன்றுமுதல் இருவருக்குமிடையே கவித்துவமான நெருக்கும்

தொடங்கஆரம்பித்தது

அவள் இருக்கும் இடத்திற்க்கு அருகில் தான் எங்கள்நிறுவனத்தின்

பயிற்சிஅறை

எல்லாபகுதியிலிருந்தும் வந்து பயிற்சி பெறுவார்கள்

இப்படி ஒருநாள் நடந்து கொண்டிருந்த போது..........

“ஆர ஏச்சு கூட்டமா அண்டா திருட வந்திருக்கே

என்ற கைய சோத்துக்குள்ள ஒளிச்சு வெச்சுருக்கே
முடிஞ்சா திருடிப்பாரு”

சன்னலை திறந்து பார்த்து சத்தம் போட்டாள்

இயக்குநர் அழைத்தார்


“கொஞ்சம் சத்தம் போடாம இருக்க சொல்லுங்க”

நான் ஏதோ சரசம்மாவின் அலுவலக உதவியாளர் போல் எண்ணி

கோரிக்கை வைத்தார்

கொஞ்ச நாளாகவே சரசம்மா நான் சொன்னால் பொட்டிபாம்பாட்ட அடங்கிவிடுவது பிரசித்தமாகியிருந்தது இதற்க்கு காரணம்

‘சரசம்மா’!

ஏனுங்க?....

மீட்டிங் நடக்குது


செரீங்...,,

அவ்வளவு தான்...,,

பயிற்சி தொடர்ந்தது

காரணம் நான் என்றுமே சரசம்மாவை பைத்தியகாரியாக பார்த்ததில்லை

அவளுக்குள் உறங்கும் இலக்கியத்தை மொழிபெயர்க்கிறவனாக


அவள் மனசை பிரதியெடுக்கிறவனாக

அவளோடு நெருக்கமாகியிருந்தேன்

அவளது sub consious பேசும் மொழி


எனக்கு மிகப்பரிச்சயமாகியிருந்தது

கம்பத்தோடு பேசுவது


மரத்தோடு சண்டை போடுவது

இப்படி நிறைய சம்பவங்களுக்கு பின் உள்ள காரணங்கள்

ஆராய்சிக்குறியவையாக இருக்கும்

சரி விசயத்திற்க்கு வருகிறேன்

புதிதாய் இப்போது ஒரு பெண்

அவளோடு காணப்படுகிறாள்

விசாரித்தேன்

பெயர் கருப்பாத்தாள்

மூளை வளர்ச்சி குறைவு

வயசு 11

ஊர் அதே

அம்மா புற்றுநோயாள் இறந்துவிட்டாள்

அப்பா இன்னும் நோயாளி

கருப்பாத்தளின் உறவினர்கள் ஓரளவு வசதியாகத்தான் இருக்கிறார்கள்

ஆனால்..........

அவர்கள் வீடுகளில் புறக்கணிக்கப்படுகிறாள்

அவர்களாள் கேலிக்குள்ளாக்கப்படுகிறாள்

அவர்களால் துன்புறுத்தப்படுகிறாள்

சரசம்மாளோ .....

அவளை அரவணைத்துக்கொண்டிருகிறாள்
அவளை சீராட்டுகிறாள்

சாப்பாடு

துணிமணிகள்

நொருக்குத்தீனிகள்

எங்கிருந்தாவது கொண்டுவந்து தினமும் கொடுகிறாள்


இதில்

யார் பைத்தியகாரர்!?

புறக்கணித்த உறவினரா?

அடைக்கலமாய் இருக்கும் சரசம்மாவா?

பைத்தியகாரர் என்று முத்திரை குத்தப்படுகிற அத்தனை பேரும்

நடிக்கதெரியாதவர்கள்

வஞ்சனை தெரியாதவர்கள்

இந்த சமூகத்தின் முகமூடிகள் அணியாமல் இருப்பவர்கள்

குறுக்கீடுகளின் அழுத்தம் தாங்காமல்

MAINSTREAM க்குள் இணைய முடியாமல்( MAINSTREAM என்பதே தனித்த


அடையாளங்களை ஒழிக்கிற வேலை


தனித்த அடையாளங்களை காயப்படுத்தி


அதை கேள்விக்குள்ளாக்குகிறபோதுதான் அவர்கள் இரண்டுக்குமிடையேயான


மனோநிலைக்கு தள்ளப்பட்டு நம்மாள் கேள்விக்குள்ளாக்கப்படுகிறீர்கள்)

விளிம்புக்குள் தள்ளப்பட்டவர்கள்

அவர்களை நெருங்கிப்பார்க்கும் பொழுது

இன்னும் நிறைய கிடைக்கும்

கற்றுக்கொள்ள

No comments:

Post a Comment

Footer