October 07, 2010

புலிகளின்மூச்சைஉங்களிடம் ஒப்படைக்கப்போவதில்லை- லட்சுமணன்



கொன்றை மரத்தின் கீழே
ஒரு புலி
மனிதனின் தோல் பரப்பி உட்கார்ந்திருந்தது

நைந்திருந்த அந்த தோல்
உதயபூர் ம்காராசாவுடையதோ
காட்ரன் துரையுடையதோ அல்ல

புலியை குலக்குறியாகக்கொண்ட
கோண்டுவினுடையது

இப்போது
இலைகளை காரி
துப்பத்தொடங்கியது


தாமஸ் கிளப் ஏனோ இன்றைக்கு மர்மமானதாக காட்சியளித்தது .அந்த சந்துக்குள் புலியொன்று தீடிரென பாய்ந்து தாக்குமோ என்ற அச்சத்துடன் இருவர் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தனர்


சேகர் தத்தாத்திரியின் மிஸ்டரீஸ் ஆப் டைகர் திரையிடுவதாக எனக்கு வந்த தகவலோடு கணத்துக்கிடந்தேன்

எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என முயன்றேன் ஆனால் கடைசி வரை படம் பற்றிய எல்லா தகவல்கள்களும் கிடைத்ததே ஒழிய குறுந்தகடு
கிடைக்கவில்லை। கிடைத்த தகவல்கள் அதிர்சியாக இருந்தது

பெரும்பாலானவர்கள் தத்தாதிரியின்
புலிகள் பற்றிய நல்ல அபிப்ராயம் சொல்லவில்லை. ஆனால் ஆண்டோவின் புலிமேல் நல்ல அபிப்ராயம் சொன்னார்கள்

காலை 10 மணீக்கு தொடங்கவேண்டியகூட்டம் பதினொன்றுக்கு வழக்கமாக தொடங்கியது

அங்கே ‘சோலைக்காடுகள்’ திரையிடப்பட்டது

அது குறித்த கருத்துகள் மிக சாதுவான முறையில் வைக்கப்பட்டது நல்லமுறையில் படமாக்கப்பட்டிருக்கிறதென்றும், இப்படி ஒரு இடம் 40 கிலோ மீட்டரில் இருப்பது ஆச்சரியமாக இருப்பதாகவும் பாம்புகளை பற்றியும் பறவைகளின் குணம் பற்றியும் குறிப்பாக அட்டைகளைப்பற்றியும் தெரிந்துகொண்டதாக ஒரு வட்டம் தெரிவித்தது

இன்னொரு வட்டம் புலிகள் சரணாலயத்தினை எதிர்த்துபோராடும் மக்களுக்கு பின்னே ரிசாட் முதலாலிகள் இருக்கிறார்கள் என்று அரிய கண்டுபிடிப்புகளை சொன்னார்கள்

மிகப்பெரும் போராட்டம் நடக்கயில் சிலருடைய வெஸ்டேடு இன்ட்ரஸ்டுகளும் அதில் இருக்கத்தானே செய்யும். சரி, அந்த ரிசாட்டுகளையும் சேர்த்து தூக்கியடிக்கும் வாய்ப்புகள் தருகிற 2006 வனச்சட்டத்தினை அமுல்படுத்த அழுத்தம் தரும் போராட்டங்களில் இந்த அதிமேதாவிகளின் பங்கு ஏன் ஒரு கிராம்கூட இல்லாமல்போனது

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் மு ஆனந்தனும், வெங்கடேசும் மட்டும் மக்களின் பார்வையிலிருந்து மிகக்கூர்மையான சில கேள்விகளை அரங்கத்துக்கு எழுப்பினார்கள்

ஒரு ஆவணப்படத்துக்கக்காக நானும் தோழர் முருகவேளும் அம்மக்களோடு இரண்டு நாட்கள் தங்கியிருந்தபோது அவர்களிடமும், கூடலூர் செல்வராஜிடவிடமும் ஏகப்பட்ட தரவுகளை வாங்கியிருந்தோம் அதனால் எனக்கு கொஞ்சம் டென்சன் தலைக்கேறியது

நான் எழுந்துபோனேன்

நான் இங்கு ட்ரூத் அபௌட் டைகர் திரையிடுகிறார்கள் என்று கேள்விப்பட்டு வந்தேன் நல்லவேளையாக அது திரையிடப்படவில்லை ஆனாலும்அதுகுறித்த எனது கருத்துகளை இந்த சோலைக்காடுகள் படத்துக்கும் பொருத்தமானவையாக இருக்கும் என கருதுவதால் உங்களோடு பகிர்ந்துகொள்ள விருப்பப்படுகிறேன்

இடதுசாரிகளுக்கும் சூழலுக்கும் சம்பந்தமில்லை என்ற மூடநம்பிக்கைகளை உடைத்து இங்கிருந்து ஒருவர் தீவிரமாக இது குறித்த ஒரு பயணத்தை துவங்கியிருப்பது ஆறுதல் அளிக்கிறது। ஆனால் சுத்த சூழல் வாதிகள் நம்மைபோன்றவர்களிடம் உள்ள அமைப்பையும் ஆர்வத்தையும் சாதகமாக பயன்படுத்தும் போக்கு தீவிரமாகி வருகிறது அதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்

புலியின் பல்லிடுக்கில் எல்லாம் போய் சதைத்துனுக்குகளை ஆராயும் இவர்களின் கேமராவுக்கு லட்சக்கணக்கான ஏக்கரில் வெறும் நூறுக்கும் இருநூறுக்கும் 100 ஆண்டுகள் குத்தகை என்ற பெயரில் காடுகளை கபளீகரம் செய்துவிட்ட செய்கின்ற
காப்பித்தோட்டங்களோதேயிலைத்தோட்டங்களோ தெரிவதில்லை அந்நிய செலவாணிகள் வேண்டும் என்பதற்க்காக மக்களுக்கு களவாணிப்பட்டம் சூட்டி வெளியேற்றத்துடிக்கும் இவர்களின் லென்சுகளில் தேக்குக்காடுகளும் யூக்கலிப்டஸ் காடுகளும்கூட என்றும் பதிவாவதில்லை
மிஸ்டிரிஸ் ஆப் டைகர் ஆவணப்படத்தில் குதிரைமுக்கில் பாக்ஸைட் தோண்டுவதை காண்பிக்கிறோம் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்

1ஒன்னறை மணிநேரம் புலிகளைபற்ரிய phd யில் அதற்க்கு காரணமான கொள்ளையர்களையும் அவர்கள் தொழிற்சாலைகளையும் ஒருவிநாடிமட்டும் காட்டிவிட்டு 89 நிமிடம் 99 விநாடிகள் புலிகளின் அழிவுக்கு காரணமாகாத பழங்குடிகளையுமே காரணமாக காட்டுவது அயோக்கியத்தனமாக இருக்கிறது

2 புலிகளின் போரனாக இருந்து அதன் சகலபருவங்களையும் சல்லடைகளால் துளைத்து ஆராய்ந்த அளவு பழங்குடிகளின் வாழ்வும் அவர்கள் நிலத்திலிருந்து அந்நியமானல் உண்டாகும் விளைவுகள் பற்றியும் ஆராயவில்லை அதில் அவருக்கு அக்கறையுமில்லை

3 மனிதனும் புலிகளும் ஒருக்காலும் சேர்ந்திருக்கமுடியாது எனென்றால் புலிகள் தேவலோகத்தில் மட்டுமே உயிர்வாழக்கூடிய பிராணி
இப்படியாக நிறைய கேள்விகள் இன்னும் எண்டேஞ்சராகவே இருக்கிறது

1973 ஆம் வருடம் புராஜக்ட் டைகர் ராஜஸ்தானின் ராந்தாம்பூர் காடுகளில் புலிகள் எண்ணிக்கை 14 ஆனால் அதற்குப்பிறகு அது பத்தாண்டுகளில் ஆண்டுக்கு ஒன்றுவீதம் பெருகி 42 ஆகியதாகவும் இப்போது வெறும் 17 ஆகிவிட்டதென்றும் வெளிவரும் புள்ளிவிவரங்கள் எதை நமக்கு தெரிவிக்கிறது

அதே ராந்தாம்பூர் பற்றிய சரிஸ்காவின் புள்ளிவிவரக்களை பாருங்கள்

2003 ல் 28 ஆக இருந்த புலிகள்
2004ல் 18 ஆக குறைந்து
இப்போது 0 என்றாகிவிட்டதாக தெரிவிக்கிறது
இப்பகுதி 1973 ல் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்ட பகுதி

1973 ல் 9 ஆக இருந்த சரணாலயங்கள்
இப்போது 27 ஆக உயர்ந்திருக்கிறது
ஆனால் புலிகளின் என்ணிக்கை 4500 லிருந்து 1500 ஆக குறைந்திருப்பதாக டேட்டாக்கள் சொல்கிறது
சுனிதா நாரயணன் கமிட்டி (TTF tiger task force) யின் அறிக்கையை பாருங்கள்
“வனவிலங்கு சரணாலயமாகவும் தேசிய புலிகள் பூங்காவாகவும் அறிவிக்கப்பட்ட இடங்களில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் நுழைவதற்கான தடையை மறுபரிசீலனை செய்யவேண்டும், மேலும் சூழலையே புரட்டிப்போடும் கனிம அகழ்வாய்வு திட்டங்கள் வெட்டுமரங்கள் தறிப்பது நீர்மின் திட்டங்கள் அணைதேக்கங்கள் ஆகியவற்றை அனுமதித்திருக்கும் இந்த அரசு வாழ்வாதாரங்களுக்காக காடுகளையே நம்பியிருக்கும், நம்பியிருந்த அம்மக்களுக்கு தடை போடுவது எவ்வளவு பெரிய நகைமுரண்
அம்மக்களை இணைக்காமல் அம்மக்களுக்கு நீதிவழங்காமல் நீங்கள் புலியை காக்கமுடியாது அதன் பாதுகாப்பு பழங்குடிகள் கையில்தான் இருக்கிறதே ஒழிய நீங்கள் அமைக்கிற பாதுகாப்பு வேலிகளில்லை” என்று பலமாக பரிந்துரைத்து அரைந்திருக்கிறது அக்கமிட்டி
மன்னர்கலும் தூரைமார்களும் பணக்காரர்களும்தான் அன்றைக்கும் இன்றைக்கும் வேட்டையாளர்கள்। அவர்களுக்கு துணையாகத்தான் பழங்குடிகளை கட்டாயப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்

1864 ல் கார்டன்துரை கொன்ற புலிகளின் என்னிக்கை 130

கார்னல் நைட்டிங்கேல் 78

ஐந்தாம் ஜார்ஜ் வேட்டை விருந்தின் போது கொல்லப்பட்டவை 58 குட்டிகள் உட்பட 158 புலிகள்

உதயபூர் மகாராசா கொன்ற புலிகள் 1000

ரைஸ் என்னும் அதிகாரி 1000 ம் புலிகளுக்கு மேல் கொன்றதுமில்லாமல் அவன் பராக்கிரமத்தை ஒருபுத்தகமாக எழுதி வைத்துவிட்டு போயிருக்கிரானாம்
இன்னும் பட்டியல் இருக்கிறது

காலங்காலமாக டப்பாத்தனமான தங்கள் வீரத்தை நிரூபிக்க புலிகளைவேட்டையாடிக் கொன்ற இந்த பரம்பரைதான்,புலிப்பல் போடாத பழங்குடியை, புலி நகத்தை தன் தலைகளில் சூடாத பழங்குடியை, புலியை தன் குலக்குறியாக கொண்ட பழங்குடியை, மரத்தால் தன் வீட்டுக்கு ஒரு கட்டில்கூட செய்துகொள்ளாத பழங்குடியை நோக்கி நெஞ்சில் உரமின்றி நேர்மைத்திறமின்றி தங்கள் சுட்டுவிரலை நீட்டிச் சொல்கிறது
‘நீங்கள் புலிகளை வேட்டையாடுகிறீர்கள் உங்களால் புலிகளுக்கு பிராப்ப்ளம் வெளியேறவேண்டுமென்று’

பழங்குடி மக்கள் பழங்குடிகளாக இல்லை இப்போது மாறிவிட்டார்கள் நெல்லிக்காயை உலுக்கி எடுப்பதில்லை முறிக்கிறார்கள், கொத்துக்கொத்தாக பிடுங்குகிறார்கள் அவற்றைமட்டுமே தின்றுவாழும் குரங்குகள் இப்போது ஹோட்டல்களுக்கு வருகிறது என்கிறார்கள்। ஒரே ஒரு ரகத்தை தின்று பேளும் ஒரு பிராணி இந்த உலகத்திலிருப்பதை கண்டுபிடித்ததற்க்காகவே இவர்களுக்கு நாம் ஏதாவது சிறப்பு அவார்டுக்கு பரிந்துரைத்தால்கூட தப்பில்லையென்று தோன்றுகிறது

அப்படி எங்களின் பண்பாட்டை சூறையாடிய நீங்கள் என்றைக்காவது எங்கள் பண்பாட்டை காப்பதற்க்கோ அல்லது எங்கள் பிரச்சனைகளின் வேர்களை சித்தரிக்கும் ஆவணப்படங்களையோ வேண்டாம் வெறும் போட்டோகளையாவது எடுத்து இப்படி ஊர் ஊராய் மடம்பிடித்து திரையிட்டிருக்கிறீர்களா? என்றால் உறுதியாக அடித்துச்சொல்ல முடியும் இல்லை என்றுஅப்படி செய்யாத நீங்கள் ஒருதலைப்பட்சமாக இதை ஒரு கொடும்பாவியைப்போல் தூக்கிவைத்துக்கொண்டு ஊர் ஊராய் அலைவது உங்கள் நேர்மையற்றதன்மையை காட்டுகிறது,நீங்கள் யாரோவினுடைய கைப்பாவை என்ற சந்தேகம் வலுக்கிறது

இன்றும் நாம் 18 ஆம் நூற்றாண்டின் புலிக்குத்திக்கல்களை பார்க்கமுடியும் புலியும் மனிதனும் சேர்ந்தே வாழ்ந்தற்கான ஆதாரங்கள் அவை ।புலிகளுக்கு மக்களுக்கும் மிகப்பெரிய பிரச்சனை அன்று இருந்திருக்க முடியாது, இன்றும் இருக்க முடியாது

அவர்கள் நோக்கம் இது ....உங்கள் நோக்கம் இதுவா ? என்று பரிசோதித்துக்கொள்ளுங்கள்

1 2006 வனச்சட்டத்தை அமுல்படுத்த தொடங்கும் முன் , புலியின் பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ எங்களை வெளியேற்றிவிடவேண்டுமென தீவிரமான திட்டங்களுடன் களமிறங்கியிருக்கறீர்கள்

2 நாங்கள் இங்கிருந்து வெளியேறிவிட்டால் நீங்கள் நினைத்தை சாதிக்கமுடியும்
இங்கேபல்லாயிரக்கணக்கான டன்களில் புதைந்துகிடக்கும் பிளாட்டினங்களையும் பாக்சைட்டுகளையும் கொள்ளையடிக்க வசதியாக இருக்கும் இந்த மேற்கு கிழக்கு மலைத்தொடர்களை நீங்கள் விரும்பியவண்னம் சுரண்டமுடியும்

३ சில அரசியல் பிரச்சனைகளை ,போராட்டங்களை, போராட்டங்களின் நியாயங்களை, நாடு முழுவதும் உள்ள நடுத்தர மக்களின் மனதிலிருந்து துடைத்தெரிய இது மிக நல்ல ஆயுதம்

அவர்களுக்கன கேள்விகள்
.... இதில் உங்களுக்கானதும் இருக்கலாம்

1 எங்களுக்கு சுபிட்சமான வாழ்வை தரப்போவதாகவும், எங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தப்போவதாகவும் தம்பட்டமடிக்கும் நீங்களும் உங்கள் கும்பலும்தான் இங்கு நாங்கள் வாழ இயலாத சூழலை ஏற்படுத்தியவர்கள்

2 இப்போதும் நகரங்களுக்கோ ,கிராமங்களுக்கோ சென்றால் எப்போது எங்கள் பதிக்கு திருப்புவோம் என்றுதான் இருக்கிறது மற்ற மக்களின் வாழ்வையும் அங்கே ஏழைகளின் அழுகையையும் வசதியானவர்களின் டாம்பீகத்தையும் பார்த்து ஒருவித நடுக்கம் உருவாகிறது

3 நகரங்களுக்கு வேலைக்கு செல்லும் எங்கள் குழந்தைகள் படும் துயரம் சொல்லிமாளாது தினந்தோறும் ஏதாவது தைரியம் சொல்லியே அனுப்பினாலும்ஆறுமாததுக்கும் மேல் அந்த சூழலில் தொடர்ச்சியாய் வாழ்வது கடுமையான மன அழுத்தத்தை தருகிறது அந்த மன அழுத்ததின் மூலம் எங்கிருந்து ஏன் வருகிறது

4 அங்கே வந்தால் எல்லாம் வசதிகளும் செய்துகொடுக்க தயாராக இருக்கும் இவர்கள் இங்கேயே செய்துகொடுத்தால் என்ன குடி மூழ்கப்போகிறது

5 அதிகமான விலங்குகளின் வாழிடம், பப்பர் ஷோனாகத்தான் இருக்கிரதே ஒழிய மிடில், லோயர் சோனில் அது அதிகமாக
தலைகாட்டுவதில்லை இங்கே நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் வந்தவாசிகளையும், பெரிய முதலாலிகளையும் வெளியேற்றிவிட்டு எங்களுக்கு அந்த நிலங்களின் ஓரங்களை விட்டுவிடுங்கள் நாங்கள் அடர்ந்த மலைகளுக்குள்ளிருந்துகூட அங்குவந்து குடியிருக்கிறோம் நீங்கள் உட்பட உங்கள் துறைகளும் இங்கு காலடிவைக்கவேண்டாம் நீங்கள் அளக்கும் சென்சிடீவ் விலங்கு சுதந்திரமாக உலவட்டும் நாங்கள் ரெடி கம்பணிகள் தயாரா

6 நகரவாசிகள் நீங்கலெல்லாம் எல்லாவிதமான வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு சந்தோசமாக இருக்கும்போது நாங்கள்(பழங்குடிகள்) மட்டும், ஏன் கஷ்டப்படவேண்டும் என்ற கேள்வி எங்களுக்கான அடிப்படை வசதிகோரி உங்களைப்போன்றவர்களை நோக்கி நாங்கள் கேட்டது

நீங்கள் மிக விசமத்தனமாக அதை எங்களுக்காக காலங்காலமாக துணையாக இருந்துகொண்டிருக்கும் சின்னாம்பதியிலும் வச்சாத்தியிலும் தண்டேவாடாவிலும் தாளவாடியிலும் எங்களுக்காக எங்களோடு சித்திரவதைகளை அனுபவித்த எங்களுக்கான குரலாக இருந்தவர்களை நோக்கி தந்திரமாக எழுப்புகிறீர்கள்

அப்போதுதெல்லாம் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள், ஏதாவது வாரியக்கூட்டங்களிலோ உயர்ரக ஓட்டல்களிலோ உரையாற்றிக்கொண்டிருந்த , கம்பளிப் புழுவின் புழுக்கைகளை ஆராய்ந்துகொண்டிருந்த உங்களின் திடீர்பாசத்துக்கு காரணம் என்னவென்பது எங்களுக்கு தெரியாமலில்லை

7 ஒரு தண்ணீர் டேங் கேட்டால் நீங்கள் நகரத்துக்கு வந்து பாருங்கள் பலாற்றை ரெடி பன்ணிவைத்திருக்கிறோம்


ஒரு காரை வீடு கேட்டால் நகரத்துக்கு வாருங்கள் உங்களுக்கு மாபெரும் அரண்மனையை தயார் செய்து வைத்திருக்கிறோம்


படிக்க ஒரு பள்ளிகூடமும் நல்ல ஆசிரியனும் கேட்டால் கீழேவாருங்கள் உங்களுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைகழகமே தயாராக இருக்கிறது
இப்படி சொல்லும் உங்களை பார்த்துகேட்கிறோம்
இப்போது கீழே உள்ள மக்கள் அனவருக்கும் நீங்கள் ஒழுங்கான இருப்பிடவசதியை அளித்திருக்கிறீர்களா?


நாள்தோறும் பல்லாயிரக்கணக்காணவர்கள் வாழ்விடங்களை அந்நிய காசுக்கும் உங்கள் நகரை அழகுபடுத்தும் முயற்சிக்கும் இழந்துபோராடும் மக்களை நாங்கள் சந்தித்திருக்கிறோம்

கீழே உள்ள மக்கள் அனைவருக்கும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா?

தண்ணிக்காக பல கிலோமீட்டர் இப்போதும் நடக்கும் கிராமங்களை பார்த்திருக்கிறோம்

கீழே உள்ளஅனைவருக்கும் சமமான கல்வி வசதி கொடுக்கப்பட்டுள்ளதா?

பலலட்சக்கணக்கான குழந்தைகள். குழந்தை தொழிலாளிகளாக இருப்பதை காட்டுகிறதே உங்கள் புள்ளிவிவரங்களில் எங்கள் குழந்தைகளும் இணையவேண்டும் என விருப்புகிறீர்களா?


பலலட்சம் பெண்கள் பாலியல் தொழிலாக அலைவதாக சொல்கிறதே எங்கள் பெண்களையும் உங்கள் சுற்றுலா நகர வளர்ச்சிக்கு இரையாக்கப்போகிறீர்களா?


சில விதிவிலக்குகளை எடுத்துக்கொண்டு அதையே பொதுவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதும் அதை விதியாக மாற்ற முயல்வதும் துரோகமாக தெரியவில்லையா?


அட செல்போன்களால் சிட்டுக்குருவிகள் காணாமல் போகிறதென்று பலர் தெரிவித்த பிறகும் அந்த சின்ன வசதியையே கைவிடமுடியாத நீங்கள், காலம் காலமாய் ஒன்றாய் வாழ்ந்த புலிகளைவிட்டுவிட்டு காடுகளையும் விட்டுவிட்டு வெளியே வாருங்கள் உங்களுக்காக ஒரு பரலோக ராஜ்ஜியம் காத்திருக்கிறது என்று அழைப்பதை எப்படி நம்பகமானதாக எடுத்துக்கொள்வது


புலியே வந்து சொன்னாலும் நீங்கள் உங்கள் பிரசங்கங்களை விட்டுவிடமாட்டீர்கள். ஏனென்றால் பழகிவிட்ட ஒரு விசயத்தை அதிலும் உங்கள் சமவெளிக்காரர்களின் பரம்பரியமான குற்றத்தை மறைக்க வசதியானதும் உங்களுக்கு அடையாளத்தையும், வருமானத்தையும், அந்தஸ்த்தையும் ஒருசேர ஏற்படுத்தித்தரும் ஒன்றை அவ்வளவு எளிதில் விட்டுவிடமுடியாதுதான்


ஆனால் உங்கள் அந்தஸ்துகளின் கொண்டாட்டங்களின் வெடி எங்கள் வாழ்க்கையின் மேல் விழுகிறது


நாங்கள் எங்கள் வாழ்வையும், புலிகளின் மூச்சையும் உங்களிடம் விட்டுவிடப்போவதில்லை

5 comments:

  1. Dear Sir,

    The name of Shekar Dattatri's film is "Truth about tigers" not "Mysteries of tigers" as you have mentioned. Truth about tigers educated you on Tigers, its habitats, its prey, the problems in the forest including criticism on forest department, functioning of tiger reserves, how to overcome, using RTI, etc.,

    There is nothing called middle and lower zone as you have mentioned wrongly.

    It is an ambition and right of every human to have better home, electricity, education, transport, work, etc., Is it possible for all inside forests? Many of the questions you have raised is about out city lifestyle and not about saving forests and wildlife.

    I think it is better to get some knowledge on wildlife before writing critics and thriving on others people's effort.

    Your post does not have any solutions to save our forests. Your writing is imaginary, divisive, creates fear and unnecessary restlessness. Kindly write about your solutions also. If possible make some films.

    Thanks
    K. Mohan Raj

    ReplyDelete
  2. படத்தின் பெயரை பொறுத்தவரை நீங்கள் சொல்வது சரி ஆனால் காளிதாஸ் கொடுத்த அதன் தமிழ் பதிப்பில் புலிகளின் மர்மங்கள் என்றுதான் தலைப்பு இருக்கிறது அவரும் படத்தின் பெயர் மிஸ்டிரீஸ் ஆப் டைகர் என்றுதான் சொன்னார் அதனால் இந்த தவறு நேர்ந்துவிட்டது ஆனால் இதைத்தவிர நீங்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ள ஆலோசனைகள் விமர்சனங்கள் மற்றும் என்னைக்குறித்த உளவியல் ஆய்வுகள் அனைத்தையும் நிராகரிக்கவேண்டியவனாய் இருக்கிறேன்

    முதலாவதாக இந்தப்படம் இந்தியாவில் காடுகள் மற்றும் புலிகள் அழிந்து வருவதற்க்கான வரலாற்று பின்னணி பற்றி குறிப்பாகவும் ஆய்வுப்பூர்வமாகவும் எந்தத்தகவலும் அளித்ததாக தெரியவில்லை ஏற்கனவே எடுக்கப்பட்ட முன்முடிவுகளிலிருந்து அதற்கு ஆதரமாக எந்த உருப்படியான ஆய்வும் மேற்க்கொள்ளாமல் சில துணுக்குகளை சேர்த்துக்கட்டிய தோரணமாகத்தான் இந்தப்படம் எனக்குத்தெரிகிறது

    வனத்துறை அது உருவாக்கப்பட்ட வரலாற்றுப்பின்னணி ஆகியவை குறித்து எந்தப்பார்வையும் இயக்குநரிடம் இல்லை வனத்துறை உருவாக்கப்பட்டதன் நோக்கமே காடுகளை ஏகாதிபத்தியத்தின் கொள்ளை நோக்கங்களுக்கு பயன்படுத்துவதுதான் என்ற கருத்து பல்வேறு தரப்புகளையும் சேர்ந்த முற்போக்காளர்களால் வைக்கப்பட்டுவருவது உங்களுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது என்னைப்போன்றவர்களுக்கு அறிவுரை சொல்லுவதற்க்கு முன் இந்த துறையில் நீங்கள் உங்கள் அறிவை ஆழப்படுத்திக்கொள்வது அவசியம் என கருதுகிறேன்

    படத்தை பொறுத்தவரை வனத்துறையில் ஊழல் மலிந்துள்ளது அது களையப்பட்டால் நல்ல துறையாக மாறிவிடும் என்பது சேகர் தத்தத்திரியின் கருத்து.ஆனால் வனத்துறை சுத்தபத்தமாக மாரினால் அது இன்னும் சிறப்பாக ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் என்பதுதான் தத்தாத்ரிபோல் நுனிப்புல்மேயாமல் உண்மையாக அதுகுரித்து ஆய்வு செய்பவர்களின் கருத்து

    Zone களைப்பொருத்தவரை உங்களுக்கு அவைகுறித்து எதுவுமே தெரியவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நீங்கள் லட்சக்கணக்கான மக்களை பாதிக்கக்கூடிய விசயங்கள் குறித்து கருத்து கூற வருவது வேதனையான ஒன்று கொஞ்சம் படியுங்கள் பின்பு விவதிப்போம்

    காட்டுக்குள் இருப்பவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்துதருவது சாத்தியமில்லையென்றால் என்ன வெங்காயத்துக்கு அந்த மக்களின் உரிமைகளை பறிக்கும்போது வாக்குரிமை அளித்தீர்கள்? காட்டுக்குள் இருக்கும் பாரஸ்டு பங்களாக்கள் ஈ பி விடுதிகள் இவைகளில் இந்த வசதிகள் ஏதும் இல்லையா ?மக்களுக்குமட்டும் ஏன் இவற்றை தரமுடியாது

    ReplyDelete
  3. அந்த மக்களை நகரத்துக்கு கொண்டுவந்து நல்லவசதிகளை செய்துகொடுக்கவேண்டும் என ஏற்பட்டிருக்கிற திடீர் அக்கறை பலந்தசந்தேகத்தை ஏற்படுத்துகிறது
    200 பேர் செத்து போராடி பெற்ற வன நில உரிமைச்சட்டம் அமுலாக்கத்திற்கு வர இருக்கும் நேரத்தில் ஏன் இந்த அக்கறை வருகிறது ?

    ரிசர்வ் காடுகளின் உள் இருக்கும் பழங்குடிகள் மேல் இவ்வளவு அக்கறை காட்டுகிறீர்களே வனத்துறை மற்றும் அதன் அடிவருடிகளான சுத்த சூழல்வாதிகளின் செயல்களால், வளர்சி திட்டங்களால், வாழ்விழந்துபோன, வெளியேற்றப்பட்ட, கொத்தடிமைகளாக வதைபடும் மற்ற பழங்குடிமக்கள் மேல் அமைதியின் மொத்த உருவமான உங்களைப்போன்றவர்களுக்கு ஏன் அக்கறை ஏற்படவில்லை? அவர்களுக்கு ஒரு வழிசொல்லிவிட்டு பின்பு உங்கள் சுய ரூபத்தை நன்றாக தெரிந்துகொண்ட, தங்கள் உரிமைகளை காக்க போர்க்கோலம் பூண்டு நிற்கும் பழங்குடிகளிடம் வாருங்கள்

    எஸ்டேட்டுகள் நீர்மின்திட்டங்கள் எப்படி காடுகளை பாதுக்காத்துவருகின்றன என்பதனை எனக்கு கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள்
    தத்தாத்திரி போன்ற சுத்த சூழல் வாதிகள் காடுகளை சிவன் நடமாடும் மயானபூமியாக்க விரும்புகிறார்கள் மயான அமைதியை கொண்டுவர முனைந்து நிற்கிறார்கள் அதைமுறியடிக்க, இந்த புலிகள் சரணாலயத்துக்கு எதிராக அமைதியின்மையை ஏற்படுத்த, என் எழுத்துகள் உதவுமானால் அதைவிட மகிழ்சி எனக்கு வேறேதும் இல்லை

    ReplyDelete
  4. கடைசியாக நீ என்ன செய்தாய் என்ற கேள்வி

    இதவிட மொக்கைத்தன்மான அற்பத்தனமான ஒரு கேள்வி இருக்கமுடியாது. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுபோனதாய் நினைத்துக்கொள்ளுமாம்

    நாம் மக்களுக்கு துரோகமிழத்திருக்கிறோம் என்று 2006 வனச்சட்டத்திப் முன்வரைபில் ஜனாதிபதி குறிப்பிட்ட விசயத்தைதான் நான் எழுதியிருக்கிறேன் ஜனாதி பதிக்கு உங்க அளவுக்கு வெவரம் தெரியாதுபாவம் . அவருக்கு ஏதாவது ரெண்டுபுக் நல்லதா ரெபர் பண்ணுங்க


    வனத்தை காக்க ஏதாவது நல்ல சொல்யூசன் கேட்டிருந்தீங்க, பழங்குடி மக்கள் காலங்காலமாக சொல்லிவரும் அந்த தீர்வை நான் அப்ப சொல்லாம விட்டுவிட்டேன். இங்கு கட்டாயப்படுத்தியதால் சொல்கிறேன்.

    மக்களின் காட்டைவிட்டு உங்களையும் தத்தாத்திரியும் போன்ற வாய்ஸ் ஆப் வனத்துறையினரையும் புராஜக்ட் சூழல் சுந்தரங்களையும் எஜமான்களுக்கெல்லாம் எஜமானான வனத்துறையையும் விரட்டியடித்து காடுகளை பழங்குடிகளிடம் திருப்பிஅளிப்பதுதான் காடுகளையும் விலங்குகளையும் காக்க உள்ள ஒரே தீர்வு

    ReplyDelete
  5. That's Maharaja of Bikaner, isn't it? Boy they loved to kill!

    ReplyDelete

Footer