நேற்று எனது பணிக்களமான ஆனைகட்டியிலிருந்து
திரும்பிக்கொண்டிருந்தேன்
இருட்டுக்கும் பகலுக்குமான மயிரிழைநேரமது
உள் மனது ஏனோ எச்சரிக்கை செய்துகொண்டே வந்தது
elephent corridor களை அடைத்து கட்டப்பட்டிருக்கிற ஆசிரமத்தை தாண்டி
பைக்கை முறுக்கினேன்
இன்னொரு corridor சலீம் அலி பறவைகள் சரணாலயத்தை தாண்டிய போது
மீண்டும் பலமாக மனசு எச்சரித்தது
வண்டியயை slowவாக ஓட்ட ஆரம்பித்தென்
பாதையை இருட்டு முழுங்கியிருந்தது
வண்டி 30 ல் போய்க்கொண்டிருந்தது
அபாயமுக்கில் திரும்பினேன்
சூழ்நிலை பார்த்தேன்
புதிதாய் கிளரப்பட்ட மண்
புதிதாய் பிய்த்தெரியப்பட்ட கத்தாழை
புதியதாய் முரிக்கப்பட்ட கிளைகள்
சந்தேகமே இல்லை ..................
ராஜா சமீபத்திலிருக்கிறான்
புதிதில்லை என்றாலும் பகீரென்றது
வண்டியை 20 க்கு குறைத்தேன்
வளைவில் திரும்பினேன்
சாணிவாசனை மூக்கை தொட்டது
10 அடி தூரத்தில் எதோவெள்ளையாய் மினுங்கியது
உற்றுப்பார்தேன்
கண கம்பீரமாக தந்தத்தை நீட்டியபடி
அடங்காத உடல் மொழியோடு
என்னையே பார்த்தபடி நின்றிருந்தது
ஒரு அடி கூட முன்னே வரவில்லை
நான் தயானந்தசரஸ்வதியோ
சலீம் அலி விஜயனோ
கொழலில்(Gun) அடிக்கிற குள்ளானோ
காட்டை தின்றதற்க்காய்
கரும்பு பாலில் யூரியா போட்டு வைத்து அதன் சம்சாரத்தைக்கொன்ற கவுண்டனோ
அல்லஎன்று
அதற்க்கு தெரியாதா என்ன?
வருகிற வாகணங்களுக்கு எச்சரிக்கை செய்ய
முப்பதடி பின்னால் வளைவில்போய் நின்றேன்
பின்னால் பூஜை முடித்து காரில் வந்தவர்களிடம்
விசயத்தைச் சொல்லி நிறுத்தினேன்
'பாக்கிறோம் சார் என்னபன்னீரும் '
போலி தைரியத்தோடு
காரை முன்னோக்கி நகர்த்தினார்கள்
'வேண்டாம் சார்
ஒண்டி ரொம்ப கோவமாருக்குது'
கேட்டபாடில்லை
வளைவில் திரும்பி நிறுத்திக்கொண்டார்கள்
அவ்வளவுதான்
காரை கண்டவுடன் பிளிரியபடி
முன்னோக்கி வந்தான்
கார் சட்டென்று திரும்பி ஓட ஆரம்பித்தது
வண்டியையை நிறுத்திவிட்டு நான் மலையில் ஏரிக்கொண்டேன்
காரைத்துரத்திய பிறகு வந்து
எனதுவண்டியை தும்பிக்கையால் தொட்டது
என்ன நினைத்ததோ
கொஞ்ச நேரம் நின்று விட்டு
எனக்கு எதிர்புறகாட்டுக்குள் போய்விட்டது
அதற்க்கு தெரியாதா என்ன?
நான் தயானந்தசரஸ்வதியோ!
சலீம் அலி விஜயனோ!
கொழலில்(Gun) அடிக்கிற குள்ளானோ!
காட்டை தின்றதற்க்காய்
கரும்பு பாலில் யூரியா போட்டு வைத்து அதன் சம்சாரத்தைக்கொன்ற கவுண்டனோ!
அல்லஎன்று ...........
அவைகள் வரும் பாதை முழுக்க அடைத்து எழுப்பட்ட
கட்டிடங்கள்
ரிசாட்டுகள்
பயிற்சி நிறுவனங்கள்
இப்படி
அதோட எடத்துல போய்
எல்லாத்தையும் அடச்சுப்போட்டு
'யானைத்தொல்லை'
'யானை புகுந்தது'
'யானை அட்டகாசம்'
என்று
அலறுகிறவர்களை
அது நன்றாக அறிந்தே வைத்திருக்கிறது
பின்பு இன்னொரு கோரிடாரான kkid பக்கம் வந்தபிறகு நின்று நிதானமாக தம்மடித்தபடியே யோசித்தேன்
யானைகளுக்கென்று ஒரு பத்திரிக்கை இருந்தால் அது இப்படித்தன் செய்திபோடும்
மனிதர்கள் அட்டகாசம்
மனிதர்கள் தொல்லை
மனிதர்கள் காட்டுக்குள் புகுந்தனர்




