Friday, June 15, 2007
பொழப்பூ
Permalink | 0 comments |
Permalink | 0 comments |
.
Permalink | 0 comments |
K
பின்னறையில் அப்பா
வாசலில் அக்கா
யாருமற்ற அறை
சிலகணங்கள் சாத்தியமாகிறது
இதற்குள்
யாரயோ தூற்றுவதென்பதும்
அறிந்தே வைத்திருக்கிறேன்
யாருமில்லாத
அதில்
எப்போதும் சாத்தியாமாக இருப்பதில்லை
Permalink | 0 comments |
ஓர் பார்நாள் இரவு
இலைகளில் ஒழுகிக்கொண்டிருந்த
இருட்டு
மேசைகளை மூழ்கடித்தது
கொட்டுகிற சாக்கணாக்களை
கொரித்தபடி மேசைக்கு கீழ்
எதையோ தேடிக்கொண்டிருக்கிறது
பூனை
தோல்களை உரித்துப்போட்டுவிட்டு
எழும்புக்கூடாய்
அமர்ந்திருக்கிறது
சுயம்
முகமூடிகள் தொலைத்து
நிஜம் அணிந்து கொண்டு
நடமாடுகிறது
காற்று
பிழிகிற சோகத்தை
அனுமதிக்காமல்
மகிழ்சியை தினித்த
அதிகாரப்பொழுதுகளில்
ஆடியபடியிருந்த வேப்ப மர நிழலில்
உறங்காத
பறவையை தேடிக்கொண்டுருந்தது
மனப்பொந்து
உதிர்த இலைகளில்
முகம் தேடியது
பூனைக்குட்டி
நானும் இல்லாத
நீயுமில்லாத
வெற்றிடத்தில்
எப்போதும் நிறைந்துகிடக்கிறது
எதோ ஒரு கோப்பை
யாருக்குமிருப்பதில்லை
விருப்பம்
முழுநேர வேசமிடுதலில்
சேகரித்து வைத்திருக்கிற ஒப்பனைகளை
வார்த்தைகளை
வர்ணங்களை
உள் மண்டிய கற்க்களை
மேலே கொண்டுவந்து துப்ப
தேவையாயிருக்கிறது
இது
எல்லாவற்றிலும்
ஏற்றதாழ்வுகளை
விதியாக்குகிற பூதங்களின்
விரல்களின் அழுத்தத்தில்
கொப்புளங்கள்
Permalink | 0 comments |
காலிமதுபாட்டில்கலில்
நுரைத்திருந்தது
உரையாடல்கலவை
ஒருகாலி சிகரெட் பாக்கட்
ஆறாம் நெம்பர்பீடிக்கட்டு
ஒருபாட்டில்காலிரம்
ஒருபாட்டில்காலிபீர்
ஒருபாட்டில்காலிபிராண்டி
ஒருபாட்டில் காலிவிஸ்கி
ஒருபாட்டில்காலிஒயின்
ஒரு பாட்டில் மினரல்வாட்டர்
எழும்புத்துண்டுகள்
அதிகாரத்துக்கு தக்க
அலுவலகமேசை
இங்கு கிடயாது
எதிரெஉள்ளஓட்டு வீட்டில்
ஒருபித்தலைசொம்பு
கிழிந்துபோன தினத்தந்தியில்
நிதியமைச்சர் வெளிநாடு போனார்
சிரித்துக்கொண்டிருந்தார்
விநாயகப்பெருமாள்
Permalink | 0 comments |
லொள்ளூ
கணக்கு வழக்கின்றி....
Permalink | 0 comments |
படிமங்களைநனைத்தது.......
Permalink | 0 comments |
Thursday, June 14, 2007
அத்தை
சுமதி
சகுந்தலா
சுந்தரி
இதுக்கு பின்னாள்
பெத்த குழந்தை
செத்துப்போகும்
ரணஜன்னி.,
தலசுத்தி
குறைப்பிரசவம்
இப்படி எப்பவும்
கடைசியாய் சுகுமார் பிறக்கிற வரைக்கும்
பிரசவத்தில் செத்துப்போனள்
மங்கம்மா வீட்டிற்க்கு புதிதாய் குடிவந்த
வருடத்தில்
அத்தை
Permalink | 0 comments |
இருண்மையிலிருந்து
சிங்கத்தை விட்டு இழுத்துப்போடு
சவுரியால் மனசை சேந்தி விட்டிடுவாளிவள்
மொண்ணைச்சோறு திங்க
காளியாத்தாளில்லை
வடக்குன்னா கால்
வடக்கயே நிக்கும்
ஆறு சொல்லியும் கேட்காது
என்னயே திங்கும்
இப்போ
முலைரெண்டும்தனித்தனியா.......
கைதனியா ........கால்தனியா
இட்டேரியிலே படுத்துக்குது
அததுபாட்டுக்கு போய்
அத்திமரதுக்கு போயிருது
மனசு
நரம்பு பாம்பாகி
நாகலிங்கஞ்செடிதேடிப்போயிருது
நானே கேக்க முடியாது
நாஞ்சிறுக்கீதாங்
குப்பையை கிளரி நட்சத்திரத்த பொறுக்கீ
மூட்டய
மத்தியானத்துக்கிட்டயும்
அழுக்க
சூரியங்கிட்டயும்
வித்துட்டு
நான் பாட்டுக்கு நடந்து போய்விடுவேன்
இப்ப
நீயும் கேக்க முடியாது
Permalink | 0 comments |











