Friday, August 10, 2007

1366



இந்த அறையில்
தற்கொலை செய்தவர்கள்
எண்ணிக்கை அதிகம்...
ஆனால்
இது
நான் மீண்டும்
உயிர்தெழுந்த இடம்

அங்கே
மார்கோபோலோக்களும்
மாமுனிகளும்
தீர்ந்துபோய் நிறைத்திருப்பார்கள்
எம்மை
ஒளிந்திருப்பார்கள்
கடவுள்கள்
கழிப்பறையில்

சிறுநீர் கழித்த
கிரீடங்களில் ஒலிக்கும் கீர்த்தனைகள்
வண்டுகள் துளைத்திட
காதுகள் விரியும்

சுதந்திரங்களின் முகவரியில் குவியும்
ஒலியும்
ஹேங்கரில் மாட்டப்பட்ட சிறகுகளும்
யாரும் தடுக்கமுடியாதபடிக்கு வளரும்

எல்லாம்...........குமாரசாமி
வாடகை கேட்கும்

பத்தாம் தேதிவரைக்கும்

2 comments:

said...

nice thinking n good words my friend

said...

அருமையான வரிகள். இந்தஎழுத்துச்சரிபார்ப்பை மட்டும் நீக்கிவிடுங்கள். பின்னூட்டுபவர்களுக்கு வசதியாக இருக்கும்.