July 17, 2007





குப்பைகளுக்கு நடுவில்
காவி படிந்த கொடிக்கம்பத்தின் அருகில்
எப்போதும் கிடக்கிறது ஒரு
கசாப்பு முட்டி

அந்த முட்டிக்குள்ளிருந்து
கேட்டுக்கொண்டிருக்கிறது
குழந்தைகளின் கதறல்
குமரிகளின் முனகல்
ஆண்களின் ஓலம்

மூக்கை பொத்தும் கொள்கை முழக்கம்


அறுக்கப்பட்ட ஆணுறுப்புகளில்
பீச்சியடித்த விந்தும்
சிதைக்கப்பட்ட முலைகளில்
கசிந்தபாலும்

கருப்பைகளை கிழித்து
ஒழுகும் குழந்தைகளின்
மூளைக்கருவில்
பூர்வீகம் தேட மை தயாரிக்கும்
வெற்றிலைகளில்
உதிர்கிறது
ஒற்றைக்கண்கள்

எங்கும் முத்திரையிடப்படவில்லை


பீச்சியடிக்கிற மலக்கூழ்
வழித்து
உன் செருப்புகளில்
நசுங்கும்
தலைமுறை

காயங்களிலிருந்துவழிகிற குருதியில்
திலகமிட்டு எழுவதர்க்கு முன்பே
வரலாற்றை கைப்பற்றி
பட்டொளி வீசிப்பறக்கிறது
உனது பதாகை

No comments:

Post a Comment

Footer